கேப்ஸிகம் ஸ்டிர் ஃப்ரை

தேதி: April 8, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.5 (2 votes)

 

குடைமிளகாய் - 2 பெரியது
வெங்காயம் - ஒன்று
பூண்டு - 3 பல்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய், கடுகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு - தாளிக்க
உப்பு
அரைக்க:
பொட்டுக்கடலை / பொரிகடலை - 3 மேசைக்கரண்டி
மிளகாய் வற்றல் - 3
சீரகம் - அரை தேக்கரண்டி
தேங்காய் - ஒரு துண்டு
கறிவேப்பிலை - 5 இலை
உப்பு


 

முதலில் அரைக்க கொடுத்துள்ளவற்றை அரைக்கவும்.
கடைசியாக அதனுடன் கறிவேப்பிலை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
வெங்காயம், குடைமிளகாயை நீளமாக நறுக்கி வைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளித்து, பொடியாக நறுக்கிய பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும்.
நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து பிரட்டவும். பொடியில் உப்பு இருக்கும், அதனால் காய்க்கு மட்டும் சிறிது உப்பு சேர்த்து பின் சிறு தீயில் மூடி வேக விடவும்.
காய் வெந்ததும் பொடியை தூவி பிரட்டவும்.
பச்சை வாசம் போனதும் இறக்கவும். சுவையான கேப்ஸிகம் ஸ்டிர் ஃப்ரை தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஹாய் தோழி , இன்னிக்குதான் வனி மேடம்ரெஸிப்பி அனுப்பி நாள்ஆகுதான் நினைத்தேன் வந்துருச்சு . கலக்குங்க பார்த்ததும் ட்ரை பண்ணும் தோணுது . Super

roம்ப நல்லா இருக்கு வனி .... விருப்ப பட்டியலில் சேர்த்தாச்சு ..

வனி ,
அடிக்கடி குடை மிளகாய் fridge -இல் இருந்து பயமுறுத்தும்.
இப்படி சூப்பரா கதம் பண்ணிட வேண்டியது தான்..
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) வனி ரெசிபி வாரத்துல 2 ஆவது வருதே வாணி..

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) அவசியம் ட்ரை பண்ணிட்டு சொல்லுங.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) செய்துட்டு பிடிச்சுதான்னு சொல்லுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா