பட்டிமன்றம் 87 : வேலைக்கு போவதால் பெண்களுக்கு குடும்ப வாழ்க்கையில் பிரச்சினைகள் அதிகமா ? குறைவா ?

ஏ ராக்காயி , மூக்காயி , கண்ணாயி , பொன்னாயி,ராக்கன், மூக்கன் சுப்பன் , பொன்னன் இப்படிப்பட்ட பேராயிருந்தாலும் இல்ல எப்பேர்பட்ட பேராயிருந்தாலும் கணிணிக்கு முன்னாடி இருந்தாலும் ஓரமா ஒளிஞ்சிருந்தாலும் எட்டி எட்டி பார்த்துகிட்டிருந்தாலும் வாங்க வாங்க! வாங்க! வந்து பேசுங்க! பேசுங்க! பேசிகிட்டேயிருங்க! தலைப்பு பார்தீங்கன்னாலே வாயிலேந்து வார்த்தை கொட்டும்.பிடிக்க பக்கெட்டோட கிடக்கேன். தலைப்பு நம்ம தோழி நித்யா சரவணா ஹர்ஷிதா கொடுத்தது.தேங்க்ஸ் மா !!!

அது இது தான் .....பெண்கள் வேலைக்கு போவதால் (எந்த வேலையா இருந்தாலும் ஐ டி துறையோ இல்லை அப்பள கம்பெனியோ ) யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம் ? (போவலாமா வேணாமா )

நீங்க பார்த்த விஷயங்கள், நொந்த விஷயங்கள், சங்கடங்கள், சலசலப்புகள் குண்டக்க மண்டக்க கருத்துகள், காமெடி சரவெடிகள், ஆற்றாமைகள் , வீட்டில இருக்கற வண்டுலேந்து சிண்டு வரைக்கும் சொல்ற அனுபவங்கள், சர்ச்சைகள், கருத்து மோதல்கள் , மைக் டைசர்கள், டைசிகள், வாய் பேச்சில் வீரர்கள் எல்லாம் கட கட ன்னு வந்து பட படன்னு போட்டு தாக்குங்க!. யாரைன்னு கேக்காதீங்க , என்னைய தான்பா சொன்னேன்(ஹி ஹி ) பேசி பிரச்சினையை தீர்த்துகிடுவோம். நாங்கல்லாம் எவ்ளோ அடிச்சாலும் தாங்குவோம்ல! அவ்வளவு நல்லவிங்க , வந்து முட்டு சந்துல வெச்சோ இல்ல இந்த முக்காலி ல கட்டி வெச்சோ பிச்சு உதறுங்க !

இந்த கண்டிசன் கண்டிப்பா படிச்சிட்டு வாங்க , சரியா அப்பு!

யாரும் யாரையும் பெயரிட்டு அழைக்கக்கூடாது.
ஆங்கிலத்தில கண்டிப்பாக பதிவுகள் இடக்கூடாது.
அரசியல் அறவே பேசக்கூடாது.
அரட்டை அறவே கூடாது
ஜாதி,மதம் பற்றி பேசக்கூடாது.
நாகரீக பேச்சு மிகமிக அவசியம்.
அறுசுவை விதிகள் அனைத்தும் பட்டிக்கும் பொருந்தும்! இதெல்லாம் நமக்கெலாம் அல்வா சாப்பிடறா மாதிரி இல்லையா அப்பு ! திரியை கொளுத்தி விட வாங்க !

பார்த்துக்கங்க ! நான் நடு சென்டர்ல சீட் போட்ருக்கேன் யாரும் அதை தொடப்டாது !. நீங்க எண்ணிய நெசத்துல பார்த்தா என் அலகுல மயங்கி பேச்சு வராம போயிருவீங்க ன்னு இப்படி நாய் சேகர் கெட்டப்பு, கைப்புள்ள கெட்டப்பு, தீப்பொறி திருமுகம்னுட்டு மாறி மாறி வந்து அசத்துவோமலா ! இந்த காமடி ஆர்டிச்டை கேரக்டர் ஆர்டிச்டா அழ வைக்கறது உங்க கைல தான் அப்பு இருக்கு. நீங்க யாரும் வரலைன்ன இந்த திரிசா இல்லையினா ஒரு திவ்வியா ன்னு போயிரமாட்டேன், அடுத்த பட்டிக்கும் ஜட்ஜா வந்துருவேன் ஐ அம் பேக்னு சொல்லிகிட்டே ! அந்த பயம் இருக்கட்டும் (அய்யோ நான் எண்ணிய சொன்னேன் ) இதோ யாரோ வராப்புல இருக்கு. நான் தகிரியமா இருக்கராப்புல கொஞ்சம் நடிச்சிட்டு வரேன். யாரங்க வாங்க , வாங்க , சூஸ் குடிங்க ம்ம்ம்ம் இப்ப சொல்லுங்க ! உங்க ப்ராப்ளம் தான் வாட்???

மக்களே ! தலைப்பு முன்பு எடுத்தது போல் தோன்றினாலும் சிறிது மாறுபட்டது. பெண்கள் வேலைக்கு போவது என்பது அத்யாவசியமாகிவிட்ட இக்காலத்தில், நீங்கள் பார்க்கும் வேலைக்கு போகும் பெண்கள் உங்களை பொறாமை பட வைக்கிறார்களா ? இல்லை புலம்பி தவிகிரார்களா? திருமணத்திற்கு முன்பு அல்லது பின்பு எவ்வாறு இதனால் பாதிப்பு ? நீங்கள் வேலைக்கு போவதால் உங்களுக்கு பாதிப்பா? இல்லை சாதனையா ? எதை இழக்கிறீர்கள்? எதை பெறுகிறீர்கள்? நீங்கள் வேலைக்கு செல்லவில்லை என்றால் உங்கள் எண்ணம தான் என்ன? என்ற ரீதியில் பேசினால் நமக்கு ஒரு வழி கிடைக்கும் என்று நினைக்கிறேன். எந்த சந்தேகம் இருந்தாலும் கேட்கவும். நன்றி

கண்டிப்பாக வேலைக்கு செல்லும் பெண்களை பார்க்கும் பொழுது மிகவும் பொறாமையாக இருக்கிறது. படித்து இருந்தும் அதை உபயோகிக்க முடியவில்லையே என்று வருத்தமாய் உள்ளது.

-anitha

முதல்ல வந்து மைக் பிடிச்ச உனக்கு இந்தா கலர் கலர் கண்ணாடி வளையல். நல்ல ஜல ஜல ன்னு இருக்கும். போட்டுக்க !
என்ன வேலைக்கு போற பொண்ணுங்களை பார்த்தா பொறாமையா இருக்கா , எப்படி ? என்னதுனால ? எல்லாத்தையும் விளக்கமா இந்த பக்கம் கொஞ்சம் சொல்லிட்டு போயிடு,.
சமத்து கட்டிம்ம்மா நீயி. ஓடியா

புதிதாக நடுவர் சீட்டை பிடிச்சிருக்கும் அன்பு நடுவரே... வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்... வணக்கம் :)

நிச்சயம் வேலைக்கு போறதால பெண்களுக்கு பிரெச்சனைகள் குறையுது. வேலைக்கு போய் ஆயிரம் வேலையை செய்துடலாம் நடுவரே... ஆனா வீட்டில் லட்சம் வேலை பார்த்தாலும் வீட்டுல தானே இருக்கன்னு ஒரு வார்த்தையை கேட்பது இருக்கு பாருங்க... “வெட்டி”னு சொல்லாம சொல்லும், சிலர் நேராவே சொல்வாங்க. அந்த வலி... வேலைக்கு போறது நல்லது நடுவரே... இதனால் குடும்ப பிரெச்சனைகள் கூட பல குறையுது.

விளக்கமா சொல்ல அப்பறமா வாரேன்... :) பிசி மார்னிங்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வாம்மா மின்னல் ! பர்ஸ்ட் இந்த ஸ்டிக்கர் போட்டு பாக்கெட் ஐ எடுத்துக்க ;-)) நீயும் வேலைக்கு போவோணும் கட்சியா ?
// “வெட்டி”னு சொல்லாம சொல்லும், சிலர் நேராவே சொல்வாங்க. அந்த வலி...// எந்த அனாசின் ,மெடசின் கொடுத்தாலும் கேக்காதே ! நீ சொல்றதும் அறியத்தேன் இருக்கு. சமபளம் கொடுக்கறப்போ எந்த வேலையா இருந்தாலும் பார்த்துடலாம் இல்லையா கண்ணு ???
என்னம்மா வேலைக்கு போவுற புள்ளைகளா-- எம்புட்டு பிரச்சினை இருக்கு உங்களுக்கு வந்து சொல்லுங்க,எதிரணியைஆரம்பிக்க போகும் புயலை இந்த வெடிமுத்து வரவேற்கிறேன்

நடுவருக்கும் தோழிகளுக்கும் அன்பு கலந்த வணக்கங்கள்.
வேலைக்குப் போகும் பெண்களுக்கு பிரச்சினை குறைவே என்ற அனியில் என் வாதத்தை எடுத்து வைக்க இருக்கிறேன்.
இப்போதைக்கு துண்டு போட்டு சீட் புடிச்சுக்கறேன் :). வாதங்களுடன் விரைவில் வருகிறேன்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

இந்தா கருக மணிமாலை போட்டுக்க , நேத்து பஜார்ல வாங்கியாந்தேன்.

அட இதென்னடா வம்பா போச்சு. நீயும் வேலைக்கு போவரதில ப்ராம்லம்ஸ் கம்மி க்ரூப் ஆ ??? என்னவோ போ ஒரு பக்கம் நெம்ப ஹேப்பியா இருந்தாலும் மறுபக்கம் பொண்ணுங்க வேலைக்கு போயிட்டு வந்து சொல்ற பிரசின்னைகளை கதை கதையா படிக்க சொல்ல , என்னதுக்கு இது மாதிரி போவோனும்னு எங்க வீட்டு அத்த்க்கிழவி கேக்குது " ஓணானை எடுத்து மடியல உட்டுப்பானேன் அப்புறம் குத்துதே கொடையுதேம்பானேன் " இவுகளுக்கு என்ன பதில் சொல்லப்போற தாயி நீயி ??

வருவாக வருவாக வெயிட் பண்ணு கிழவி , நொம்ப பீல் பண்ணாத
ஒழுங்கா பிள்ளையை வளர்க்கரதில்லை, எல்லாத்திலையும் அவசரம் , தேவையில்லாத டென்ஷன் பாசு பிரச்சினை உடம்பை கவனிக்காம வேலை வேலையின்னு பழியா கிடக்கிறது இதெல்லாம் எதுக்குன்னு நீ கூப்பாடு போடறது கேக்குது, விட மாட்டியே நீயி ( செட் சேர ஆளு இல்லைன்னு இந்த அலப்பரை கூடாது உனக்கு )

முதல்முறை நடுவராக வந்திருக்கும் தோழிக்கு வாழ்த்துக்கள்....
நடுவரக்கோ......வ் நான் வேலைக்கு போவதால் பெண்டுகளுக்கு பிரச்சனை அதிகம்னு பேச வந்துள்ளேன்.... சீட் புடுச்சாச்சு வாதத்தோட பிறகு வாரேன்..வர்ட்டா.....

வணக்கம்.... நடுவர் அவர்களே... நான் பெண்கள் வேலைக்குச் செல்வதால் ஏற்ப்படும் சங்கடங்களைப் பற்றி பேச வந்திருக்கிறேன்.... உள்ளே வரலாமா?? தங்களின் அனுமதி வேண்டுகிறேன்.

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

மேலும் சில பதிவுகள்