கரம் மசாலா பொடி

தேதி: April 15, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.7 (6 votes)

 

தனியா - கால் கப்
ஏலக்காய் - 2 தேக்கரண்டி
கருப்பு ஏலக்காய் - 3
மிளகு - 2 தேக்கரண்டி
கிராம்பு - 2 தேக்கரண்டி
சோம்பு - ஒரு தேக்கரண்டி
அன்னாசிப்பூ - 4
ஒரு இன்ச் அளவில் பட்டை - 4
ஜாதிக்காய் - பாதி (அ) ஜாதிக்காய் பொடி - ஒரு தேக்கரண்டி
பிரியாணி இலை - 2
சிகப்பு மிளகாய் - 4 (காரத்திற்கேற்ப)
சீரகம் - 2 தேக்கரண்டி
ஜாதிபத்திரி - ஒன்று
பொடியாக நறுக்கிய காய்ந்த பூண்டு - ஒரு தேக்கரண்டி
சுக்கு - சிறிது (அ) சுக்குப்பொடி - ஒரு தேக்கரண்டி


 

தேவையானவற்றை அளந்து எடுத்துக் கொள்ளவும். கருப்பு ஏலக்காய், சுக்கு, ஜாதிக்காயை நசுக்கி வைக்கவும்.
ஒவ்வொன்றாக சிறுதீயில் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
நன்றாக சூடு போக ஆற வைக்கவும்.
ஆறியதும் விரும்பிய பதத்தில் அரைக்கவும்.
மணமான கரம் மசாலா பொடி தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

மசாலா பொடி பார்க்கவே சம வாசமாஇருக்கு.சூப்பர்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

கவிதா,

கரம் மசாலா பொடி வாசம் இங்கேவரை வருது! :‍-) நல்ல குறிப்பு. வாழ்த்துக்கள்!

அன்புடன்
சுஸ்ரீ

நன்றி கரம் மசாலாவிற்கு

BY

ஆதி

என் குறிப்பை வெளியிட்ட அட்மின்,குழுவினர்க்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி,

என்றும் அன்புடன்,
கவிதா