லேஸ் ஃபிங்கர் ரிங்

தேதி: April 20, 2013

5
Average: 4.2 (11 votes)

 

மீடியம் ரிக் ராக் லேஸ் - சிகப்பு, வெள்ளை, பச்சை நிறங்கள்
ப்ளாங்க் ஃபிங்கர் ரிங்
ஊசி, நூல்
ஹாட் க்ளூ
ஃபெல்ட் துணி - சிகப்பு, வெள்ளை

 

15 இன்ச் நீளத்தில் மீடியம் சைஸ் ரிக் ராக் லேஸ்களை எடுத்துக் கொள்ளவும். ஃபெல்ட் துணிகளில் சிறிய வட்டமாக வெட்டி எடுத்து கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களை தயாராக வைக்கவும்.
வெள்ளை மற்றும் பச்சை நிற லேஸ்களை ஒன்றின்மேல் ஒன்று வைத்து முனைகளை தைக்கவும்.
பிறகு இரண்டு லேஸ்களையும் ஒன்றன்பின் ஒன்றாக ஒரே சீராக பின்னவும். முடிக்கும் இடத்தில் முனைகளை தைக்கவும்.
பின்னிய லேஸ்களில் க்ளூ தடவி இறுக்கமாக சுற்றவும்.
சுற்றியபின் அடிப்பகுதியில் வட்டமாக வெட்டிய வெள்ளை ஃபெல்ட் துணியை ஒட்டிவிடவும். இப்போது லேஸ்களை விரல்களால் லேசாக விரித்துவிடவும்.
ஃபெல்ட் நன்றாக ஒட்டிய பிறகு ப்ளாங்க் ஃபிங்கர் ரிங்கை ஹாட் க்ளூ வைத்து ஒட்டிவிடவும்.
அழகான ஃபிங்கர் ரிங் தயார். உடுத்தும் ஆடையின் நிறத்திற்கு ஏற்ப செய்து அணியலாம்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

அழகோ அழகு. எப்படித்தான் நேரம் கிடைக்கிறதோ? எனக்கு சும்மா இருக்கவே 24 மணி நேரம் பத்தல. அழகை ஆராதிக்கும் கலை உங்கள் வசம் இருக்கு. வாழ்த்துக்கள் கலா ;-)

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

ரொம்ப ரொம்ப அழகா இருக்கு........ சூப்பர் வாழ்த்துக்கள்.......

சுப்பர்ப் கலா. ட்ரை பண்ணுறேன். அந்த ப்ளெய்ன் ரெட் ரொம்ப பிடிச்சிருக்கு.

‍- இமா க்றிஸ்

கலா
ஒரு ரெட் ரோஸ் விரல்ல வந்து பூத்த மாதிரி இருக்கு.ரொம்ப நேர்த்தியா இருக்கு.நான் செய்து பார்க்கப் போறேன்

மிகவும் அழகாக இருக்கிறது. ரோஸ் ரிங்ஸ். நல்ல கலர் தெரிவுகள். மேன்மேலும் பலபல குறிப்புகள் தர வாழ்த்துக்கள்

very cute

எளிமையான அழகான மோதிரம்.வாழ்த்துக்கள்! கலா.

இதுவும் கடந்து போகும்.

wow super

லேஸ் ஃபிங்கர் ரிங் ரொம்ப அழகா அருமையா இருக்குங்க :-)

நட்புடன்
குணா

ரொம்ப ரொம்ப கியூட் :) எனக்கு அந்த சிவப்பு மட்டும் இருப்பது ரொம்ப பிடிச்சுது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Really superb,i like red & white ring.

Eat healthy

மிக நேர்த்தியான அழகான மோதிரம்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

super AKKA

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவிற்கு நன்றி :)

Kalai

ஜெயந்தி சும்மா இருக்கறது தான் ரொம்ப ரொம்ப கஷ்டமான வேலை.அதை நீங்க ஈசியா செய்றீங்க ;) மிக்க நன்றிங்க :)

Kalai

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ப்ரியா :)

Kalai

நன்றி இமா ஆன்ட்டி.அந்த ரெட் ரோஸ் இப்பவும் வெளிய போட்டு போனா யாராவது ஒருத்தராவது எங்க கிடைக்குதுன்னு கேட்பாங்க ;)செய்து பாருங்க :)

Kalai

கட்டாயம் செய்து பாருங்க நிகி.வாழ்த்துக்கு நன்றி :)

Kalai

வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி ஷாயாமளா :)

Kalai

வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி ப்ரியா :)

Kalai

வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றிங்க :)

Kalai

மிக்க நன்றிங்க :)

Kalai

வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி குணா :)

Kalai

மிக்க நன்றி வனிக்கா :)

Kalai

வருகைக்கும்,பதிவிற்கும் மிக்க நன்றிங்க :)

Kalai

மிக்க நன்றி முஹசினா :)

Kalai

மிக்க நன்றி :)

Kalai

ரொம்ப அழகா இருக்கு .. நானும் ட்ரை பண்ணலாம் எண்டு இருக்கிறன் . பார்ப்போம் ..

செய்து பார்த்து சொல்லுங்க ஜனனி:) வருகைக்கும் பதிவிற்கும் நன்றி :)

Kalai