6 மாத குழந்தைக்கு பனங்கற்கண்டு குடுக்கலாமா தோழிகளா?

வணக்கம் தோழிகளே எனக்கு மீண்டும் ஒரு சந்தேகம். என் குழந்தைக்கு சர்க்கரை சேர்த்து உணவு குடுக்க விரும்பவில்லை, அதற்க்கு பதிலாக பனங்கற்கண்டு சேர்த்து குடுக்கலாம்னு நினைக்கிறேன். குடுக்கலாமா? பிரச்சனை எதுவும் வராது இல்லையா? சர்க்கரை பற்றி ஒரு ஆர்ட்டிக்கிள் படித்தேன் அதிலிருந்து சர்க்கரையை கண்டாலே பயமாக உள்ளது.

தோழி குழந்தைக்கு ஆறுமாதம் முடிந்திருப்பின் தாராளமா கொடுக்கலாம்.. பாலில் கலந்து,அல்லது கூழ் செய்யும்போது அதனுடன் சேர்த்து கொடுக்கலாம்.
நிஜம்தான் வெள்ளை சர்க்கரை மிகவும் ஆபத்துதான்....:-( குட்டீஸ்கு சின்னதிலிருந்தே வெல்லம்,கருப்பட்டி,சரும்புச்சர்க்கரை,பனங்கல்கண்டு,தேன் இப்படி கொடுத்து பழக்கிட்டா சரியாகிடும்......:-)

மேலும் சில பதிவுகள்