டிரைவிங் பயம்

என் கணவர் என்னை 30 மணித்தியாலங்களுக்கு மேல் டிரைவிங் பழக அனுப்பி வைத்தார். மூன்று தடவை எக்ஸாமில் fail பண்ணிவிட்டேன்...காசு வீணாகியதுதான் மிச்சம்...எனக்கு டிரைவிங் செய்யவே ரொம்ப பயமாக இருக்கு..கொஞ்சம்கூட confident இல்லை....ஆனால் ஓரளவு ஓடுறேன்... பயத்தில் எனது உடம்பு முழுவதும் ரொம்ப பாரமாக இருக்கு... பயத்தில் தூங்கவும் முடியவில்லை...கெட்ட கெட்ட கனவாக வருது. டிரைவிங் பற்றிய பயம் போக ஏதாவது வழி இருக்கா? பயத்தில் செத்திடலாம் போல் இருக்கு.என் கணவரும் எனக்கு சொல்லித்தருகிறார்...ஒரு நாள் நல்லா ஓடுறேன்..அடுத்த நாள் விட்டிடுறேன்..எனக்குஎல்லாமே விளங்குகிறது ஆனால் பயத்தில் சரிவருதில்லை...என் கணவரும் பொறுமையை இழந்துவிட்டார்...என் மேல் எனக்கே கோவம் வருகிறது...எனக்கு பயம் போய் தன்னம்பிக்கை வர ஏதாவது அட்வைஸ் சொல்லுங்களேன்.....

எல்லோருக்கும் டரைவிங் வந்துடாது..சிலருக்கு ட்ரைவிங் பண்ணவே முடியாது ஒரு வித பதட்டம் வரும்..அது சில ஆண்களுக்கும் உண்டு...நீங்க பொறுமையாக பழகுங்கள் ட்ரை பண்ணுங்க முதலில் அப்படி தான் இருக்கும் போக போக சரியாகிடும்..ஆனால் உங்களுக்கு முடியாத பட்சத்தில் ரிஸ்க் எடுப்பது நல்லதில்லை விட்டுவிடுவது நல்லது.

இதுக்கெல்லாமா பயப்படுவாங்க சின்னப்புள்ள தனமா.அதெல்லாம் என் தோழி பழகிடுவாங்கனு எனக்கு நம்பிக்கை இருக்கு அப்றம் என்னபா ஒனக்கு பயம் சீக்கிரம் பழ்கிடுவிங்கபா. சீக்கிரம் ட்ரைவிங் பழகுரதுக்கு என்னோட வாழ்த்துக்கள் தோழி.
என்ர்றூம் அன்புடன்

வினிதா சுந்தர்

I LOVE SUNDAR

ஹாய் லலிதாம்பிகா எதுக்கு பா பயப்படுரீங்க , என்னை எல்லாம் ஃப்ளைட் ஓட்ட சொன்னலும் ஓட்டுவேன் எனக்கு இந்த நாட்டுல அதற்கான வாய்ப்பு கிடைக்கலை, நானும் ஊருக்கு வந்து கண்டிப்பா கார் ஓட்ட கத்துக்கனுமுனு இருக்கேன் தோழி...பெண்கள் எதை எதையோ சாதிக்கிராங்க, நீங்க கார் ஓட்டுரத்துக்கே பயப்படுரீங்க, நம்மால முடியாதது இந்த உலகத்துல எதுவுமே இல்ல லலிதா ....

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

நான் இங்கு நேரில் சில விபத்துக்கள் பார்த்து இருக்கேன்.அதிலிருந்து தான் இந்த பயம் வந்தது.அதுவும் நான் வசிக்கும் நாட்டில் ரொம்ப fast driving....எனது கணவர் வரும் வாரம் காலில் ஆப்ரேஸன் பண்றார். அப்புறம் நான் தான் அவரை ஒரு மாதத்திற்கு office இல் drop பண்ணனும்... நேற்று night நல்லா யோசிச்சு பார்த்தேன். மனதை ரிலாக்ஸ் பண்ணி இன்று முழு நம்பிக்கையுடன் ஓடத்தொடங்கப்போறேன்.... நம்பிக்கை தந்த அனைத்து தோழிகளுக்கும் மிக்க நன்றி....god bless everyone....

Very good thozhi ipditha irukkanum pengkal ninaithal mudiyaththu eaythuum illal thozhi all the best
BY
VINITHA SUNDAR

I LOVE SUNDAR

மனதுதான் முதல் எதிரி. //மூன்று தடவை எக்ஸாமில் fail பண்ணிவிட்டேன்// அவ்வளவுதானே? பக்கத்தில எக்ஸாமினரோட ஓடுறதே பெரிய டென்ஷன். ஆனாலும்... எங்கயும் இடிக்காமல் கொள்ளாமல் ஓடிமுடிச்சிருக்கிறீங்கள். அப்ப... பாஸ்தான் நீங்கள். காசு வீண் ஆகவில்லை. எல்லாமே ஒரு பாடம்தான். ஒவ்வொரு தரமும் எந்த விஷயம் பிழைச்சுது? அதை மனசில வைச்சுக் கொண்டு ஓடலாம். ஆனால் எப்பவும் அதையே நினைச்சுக் கொண்டு இருக்காதைங்கோ. //ஓரளவு ஓடுறேன்// இல்ல, நீங்கள் நல்லாவே ஓடுறீங்கள் என்று நான் நினைக்கிறன். இல்லாட்டில் உங்கட ஆள் நம்பி எக்ஸாமுக்கு அனுப்பி இருக்க மாட்டார். ;) பயத்தில வழக்கமா சரியாச் செய்யுறதையும் கோட்டை விட்டாச்சுது, அதுதானே? முதலில டென்ஷனை விடுங்க.

ட்ரைவிங்குக்கு ஒரு சின்ன ப்ரேக் விடுங்க. உங்களில நீங்களே கோவிக்கிறதை முதல் விட வேணும். வேற ஏதாவது வேலையில மனசை ஈடுபடுத்தலாம். எல்லாத்தையும் மறந்து நிம்மதியாக நித்திரை கொள்ளுங்கோ கொஞ்ச நாளைக்கு. விருப்பமான மற்ற வேலைகளைப் பாருங்கோ. ரெண்டு கிழமை கழிச்சு திரும்ப ஸ்டாட் பண்ணுங்க. நீங்களாக ரெடி எண்டு நினைக்கேக்க திரும்ப தொடங்கினீங்களெண்டால் கட்டாயம் எல்லாம் சரியா வரும்.

முக்கியமாக... உங்களுக்கு அறிமுகமில்லாத ஒரு இன்ஸ்ட்ரக்டரைப் பிடியுங்க. இப்பிடிச் சொல்லுறதுக்கு சில காரணங்கள் இருக்கு. (ஏற்கனவே ஓடுவீங்கள் என்கிறதால கனக்க பழக இராது.) உங்கட ஆள் இல்லாமல் இன்னொரு ஆள் இருக்க ஓடிப் பழகினால் பிறகு எக்ஸாமினர் பக்கத்தில இருக்கிறது டென்ஷனாக இராது.

என்னதான் அருமையாக பழக்கினாலும் வீட்டார் வீட்டார்தான். இடையில வீட்டு விஷயங்கள் கதைக்க வரும். வீட்டு மூட் எல்லாம் ட்ரைவிங் நேரமும் தொடர சான்ஸ் இருக்கு. அது மாதிரியே ஓடேக்க வாற பிழைகள் பற்றின டிஸ்கஷன்ஸ் வீட்டில தொடரவும் சான்ஸ் இருக்கு. ரெண்டுமே நிம்மதியில்லாமல் சரியாகச் செய்யேல்லாமல் இருக்கும். கார்ல ஏறினால் வீட்டு வேலையை நினைக்கப் படாது. நினைச்சால் பிழை வரத்தான் செய்யும். காரை விட்டு இறங்கினால் ஓடேக்க விட்ட பிழையை நினைக்கப்படாது. ஆனால் அதை மறக்க இப்ப இருக்கிற உங்கட இன்ஸ்ட்ரக்டர் விட மாட்டார். ;) அவராக ஒன்றும் சொல்லாட்டியும், பார்க்கப் பார்க்க விட்ட பிழைகள் தானாவே நினைப்பு வந்து கவலையா இருக்கும். முழிச்சு இருக்கேக்க எல்லாம் ஸ்டியரிங் வீலுக்குப் பின்னால இருக்கிற மாதிரியே இருக்கும். வீட்டிலயும் வேலை எல்லாம் கெட்டு... நிம்மதி இல்லாமல் நித்திரை கெட்டுரும். //தூங்கவும் முடியவில்லை...கெட்ட கெட்ட கனவாக வருது.// வரும் ;)) அதாலயே... //உடம்பு முழுவதும் ரொம்ப பாரமாக இருக்கு.//ம். இது எல்லாம் சரிதான் ஆனால்... //பயத்தில் செத்திடலாம் போல் இருக்கு.// கர்ர்ர்.. என்ன இது! இது உங்கட சொய்ஸ். கட்டாயம் என்று நினைக்காதைங்கோ. ஓடத்தெரியாதவங்களெல்லாம் சீவிக்கவே இல்லையா? பஸ்ல போகலாம், ட்ரெய்ன்ல போகலாம். டக்ஸி பிடிக்கலாம். ரிலாக்ஸ்டாக இருங்க.

//என் கணவரும் எனக்கு சொல்லித்தருகிறார்...ஒரு நாள் நல்லா ஓடுறேன்..அடுத்த நாள் விட்டிடுறேன்..எனக்குஎல்லாமே விளங்குகிறது ஆனால் பயத்தில்...// ம். என்ன பயம் என்று கேட்க மாட்டேன். யார்ல பயம்?? ;) //என் கணவரும் பொறுமையை இழந்துவிட்டார்...// இங்கேதான் விஷயம் இருக்கு. கணவர் எப்பொழுதும் கணவராக இருப்பார். அந்த டைட்டிலை கழற்றி வைச்சுப்போட்டு தனிய இன்ஸ்ரக்டராக இருக்கிறது அவருக்குக் கஷ்டம். இது அவர்ட்ட பிழை இல்லை. அவரால உங்களை ஸ்டுடண்ட்டாக 'மட்டும்' பார்க்க ஏலாது.

இன்ஸ்ட்ரக்டர் பொறுமை இழக்க மாட்டார். அவருக்கு இதுதான் வேலை. உங்களைப் போல நிறையப் பேரைப் பார்த்திருப்பார். எதை எப்பிடிச் சொல்லவேணும் எண்டு தெரியும். நீங்க பாருங்க, அவர் ஒன்றிரண்டு க்ளாஸுக்குப் பிறகே சொல்லுவார், நீங்க டெஸ்டுக்கு ரெடி என்று. நம்பிக்கையோட போய் பாஸ் பண்ணீருவீங்க.

எல்லாரும் ஒரே மாதிரி இல்லை. சிலர் சட்டென்று பழகிருவாங்கள். சிலருக்கு நாள் எடுக்கும். யோசிக்க வேணாம். இன்னொரு ஆளோட ஓடேக்க நீங்கள் நிச்சயம் இன்னும் confident ஆக ஓடுவீங்கள். நீங்கள் விடுற பிழை நீங்கள் சொல்லாமல் வீட்ட தெரியாது. அதனால வீட்டில இருக்கிற நேரம் நிம்மதியாக இருக்கும். நல்ல நித்திரை வரும். மனது பாரமாக எல்லாம் இருக்காது. தன்னால எல்லாம் சரியாக வரும். :-)

உங்கள் கணவர் நல்ல இன்ஸ்ட்ரக்டர் தான். ஆனாலும் வேற இன்ஸ்ரக்டரைப் பிடியுங்க. நீங்களாக வீட்டில கேட்கிறதுக்குக் கஷ்டமாக இருந்தால் இந்த என் கருத்தை வாசிக்க வைங்க.

உங்களுக்கு என் வாழ்த்துக்கள் லலிதா.

‍- இமா க்றிஸ்

;)) கொஞ்சம் முதல் தட்டி வைச்சு, நடுவில வேற வேலையாகப் போய் இப்ப வந்து சப்மிட் பண்ணீட்டுப் பார்த்தால்... மேல உங்கட நம்பிக்கையான பதில் இருக்கு. ;)) சந்தோஷமாக இருக்கு. கெதியா லைசன்ஸ் எடுத்துட்டு வந்து சொல்லுங்க.
என் அன்பு வாழ்த்துக்கள்.

‍- இமா க்றிஸ்

வாவ் அருமை இமா:) இந்த அன்பான அறிவுறுத்தல் நிச்சயமா பலபேருக்கு உதவியா இருக்கும்.
லலிதா எனக்கு தெரிந்த பெண்மணி ஒருவருக்கு ஸ்கூட்டியை தள்ளவே தெரியாது, பேலன்ஸ் பண்ணமுடியாம கீழ கீழ விழப்போவாங்க.
ஆனா இப்ப முறையான ஓட்டுனரிடம் பழகிக்கொண்டு, அழகா கார், ஸ்கூட்டினு ஓட்டுறாங்க.

இன்னொரு விஷயம் வீட்டுக்காரரிடம் கார் ஓட்டி கத்துக்கொடுக்கச் சொல்வது கொஞ்சம் கஷ்டமான விஷயமே, என்கணவரின் நண்பரின் மனைவிக்கு சில பல கொட்டுக்களுடனே பழக்கி கொடுத்தாராம்.
பலநாள் கடுப்பையும் இந்த நேரத்தில தீர்த்துக்கிட்டாரோனு ஒரு எனக்கு ஒரு சந்தேகம்.

நீ மொத ஓட்டுவியா வந்துட்ட கோளாறு சொல்லனு கேக்கீறீங்கதானே, நானும் நீங்கல் சொல்லும் அனைத்து மனநிலையும் கொண்டுள்ளவள்தான். யாராவது ஓட்டுவியானு கேட்டா, ம்ம் ஓட்டுவேன்னு சொல்லுற அளவுக்கு இருக்கேன். ஆனா சில சமயம் உள்ள இருந்து கார வெளிய எடுக்கும்போது படபடப்பாகி கேட்ல இடிக்கிறாப்பில போய்டுவேன், யாராவாது அருகில் இருந்தால் இன்னும் படபடனு இருக்கும்.

இந்த கேள்விய எந்த ரூபத்தில கேகிறதுனு நினச்சிட்டிருந்தேன். நல்ல வேளை நீங்க கேட்டுட்டீங்க, ரொம்ப நன்றிங்க லலிதா.

மேலே தோழிகளின் பதிவு மிகவும் நம்பிக்கை ஊட்டுவதாக உள்ளது. அனைவருக்கும் நன்றிகள் பலப்பல.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

அப்பாடி இப்போ மனசு கொஞ்சம் நிம்மதியா இருக்கு...கண்டிப்பாக நீங்கள் அனைவரும் சொன்ன கருத்தை பின்பற்றுகிறேன். அனைத்து தோழிகளுக்கும் கோடி நன்றிகள்....

இமா-வின் 'கர்ர்ர்.. ' எனக்கு ரொம்ம்ம்ம்ம்ம்ப ரொம்ப பிடிக்கும். நிறைய நாட்களாக சொல்ல ஆசைப்பட்டு சொல்ல முடியல்ல. இப்போ ஆசையை தீர்த்துக்கொண்டேன். மன்னிக்கவும்.

அன்புடன்
ஜெயா

மேலும் சில பதிவுகள்