மினி பூந்தொட்டி

தேதி: April 24, 2013

5
Average: 5 (9 votes)

 

4 சென்டி மீட்டர் உயர பூந்தொட்டி - ஒன்று
தொட்டியின் அளவிற்கேற்ப தர்மாகோல் துண்டு - ஒன்று
பெரிய தர்மாகோல் பந்து - ஒன்று
பச்சை நிற கடதாசி - 5 சென்டி மீட்டர் சதுரத்துண்டு
ஸ்டைலஸ் (அ) மழுங்கலான கூர்முனை உள்ள பொருள் ஏதாவது
சிவப்பு நிற A4 கடதாசி - ஒன்று
கபாப் குச்சி - ஒன்று
பல்லுக் கத்தரிக்கோல்
கம் டேப்
க்ளூ
இடுக்கி
கத்தரிக்கோல்
க்ராஃப்ட் நைஃப்
ஃப்ளவர் பஞ்ச்
மௌஸ் பாட்
மணல் சிறிது
சாட்டின் ரிப்பன்
ஹாட் க்ளூ

 

தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
சிவப்பு நிற கடதாசியில் ஃப்ளவர் பஞ்ச்சின் உதவியுடன் பூக்களை வெட்டிக் கொள்ளவும்.
மௌஸ் பாடை திருப்பிப் போட்டு அதன் மேல் பூக்களை வைத்து, மத்தியில் ஸ்டைலஸ் கொண்டு அழுத்தவும்.
அழுத்திய பிறகு பூக்கள் இதேபோன்றிருக்கும்.
5 சென்டிமீட்டர் அளவுள்ள சதுர பச்சை கடதாசியில், அதன் மூலைவிட்டத்தினூடாக நான்காக மடிக்கவும்.
பல்லுக் கத்தரிக்கோலினால் பாதி இலை வடிவம் வெட்டிக் கொள்ளவும். நடுவில் ஒரு சிறு துளையும் வெட்டிக்கொள்ளவும்.
ஒரு முறை இப்படி மடித்து எடுத்தால் விரிக்கும் போது இலைகளில் நரம்பு போல் தெரியும். இலைகள் தட்டையாக இல்லாமல் சற்று வளைந்து இருக்கும்.
பூந்தொட்டிக்கு அளவாக தர்மாகோலை வட்டமாக வெட்டி நடுவில் கபாப் குச்சியின் அளவிற்கு ஒரு துளை செய்துகொள்ளவும்.
தர்மாகோலைச் சுற்றிலும் க்ளூ தடவி தொட்டியினுள் இறுக்கி ஒட்டிக்கொள்ளவும். மேற்பகுதியில் தாராளமாக க்ளூ தடவி மணலைத் தூவி அழுத்தவும். ஒருமுறை சரித்துப் பிடித்து தட்டினால் மேலதிகமான மணல் கொட்டிவிடும். பின்பு அப்படியே காயவிடவும். (மண் தூவும் முன் பூந்தொட்டியை ஒரு கடதாசியின் மேல் வைத்துக் கொண்டால் சுத்தம் செய்வது சுலபம்).
கபாக் குச்சியை பாதியாக முறித்துக் கொள்ளவும். கூர் முனையை தர்மாகோல் பந்தினுள் சொருகிவிட்டு மீண்டும் வெளியே எடுக்கவும்.
பிறகு கபாக் குச்சியில் கம் டேப் சுற்றவும்.
குச்சியில் க்ளூ பூசி பந்தினுள் சொருகி ஒட்டிக்கொள்ளவும்.
குச்சியை பிடித்துக் கொண்டு பூக்களை நெருக்கமாக பந்தின் மேல் ஒட்டிக் கொள்ளவும். பந்தில் க்ளூ பூசி, பூக்களை இடுக்கியின் உதவியால் எடுத்து வைக்கலாம்.
வெட்டித் தயாராக வைத்திருக்கும் இலைப் பகுதியை, குச்சியில் கீழிருந்து மேலாக சொருகி பூப்பந்தின் அடியில் ஒட்டவும்.
குச்சியின் அடிப்பாகத்தில் க்ளூ பூசி தொட்டியில் சொருகவும். ரிப்பனில் சிறிய Bow செய்து ஹாட் க்ளூ கொண்டு தொட்டியில் ஒட்டிவிடவும். படிக்கும் மேசையில் வைக்க அழகான, அடக்கமான மலரங்காரம் இது.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

அழகாக இருக்கு :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நீங்க கூப்பிட்டதுலதான் குறிப்பு வந்திருக்கிறதே எனக்குத் தெரிஞ்சுது. ;) நன்றி வனி.

‍- இமா க்றிஸ்

குட்டியா,க்யூட்டா இருக்கு. வாழ்த்துக்கள் ஆன்டி ;)

Kalai

ஹாய் இமா
பூந்தொட்டி வெரி க்யூட்...
விரல் சைஸ்ல தொட்டி...
செம ஈசி.. ரொம்ப அழகு

நீங்களே யொஸ்சிங்களா, நல்லாருக்கு

''விடா முயற்ச்சி விஸ்வரூப வெற்றி''.

//நீங்களே யொஸ்சிங்களா// ஆமாம் ஆனால் இல்லை. ;) விண்டோ ஷாப்பிங்ல ஒரு முறை பெரிய ரோஸ்தொட்டி பார்த்தேன். பிறகு க்ராஃப்ட் ஸ்டோர்ல குட்டி தொட்டிகள் காணவும் இந்த ஐடியா வந்தது.

இந்த மினி, ஸ்கூல் பசங்களுக்கான என் வர்ஷன்.
நாற்பது நிமிடம் ஒரு பாடவேளை. 11 வயது குட்டீஸ் முப்பது நிமிடத்தில் செய்து முடிக்கிறது போல ப்ளான் செய்ய வேண்டும். (அவங்க அரட்டை, க்ராஃப்ட்டை மற்றவர்களோட ஒப்பிட்டுப் பார்க்கிறது, கடைசில க்ளீனிங் - இதுக்கு மீதி பத்து நிமிஷம்) செய்வது குட்டீஸுக்கு சாலஞ்சிங் ஆக அதே சமயம் பிடிப்பது போலவும் இருக்கவேண்டும். அதிபருக்கும் பெற்றோருக்கும் கூட திருப்தி வரவேண்டும். ;)

உபகரணங்கள் ஒன்றிரண்டுதான் வைத்திருப்பேன். மொத்த வகுப்புக்கும் போதாது. ஒரே ஒரு பஞ்ச்தான் இருந்தது. அதிகாலை முதல் ஆளா ஸ்கூல் வந்த பையன் கையில் கொடுத்தேன். ஸ்கூல் ஆரம்பிக்கிறதுக்குள்ள போட்டி போட்டுட்டு எல்லாருமா பத்து A4 ஷீட்ஸ்ல பூ அடிச்சு முடிச்சிருந்தாங்க. பாடவேளை ஒவ்வொருவரும் நாலைஞ்சு பூ மட்டும் பஞ்ச் செய்துகொண்டு மீதியை ஏற்கனவே வெட்டி வைத்திருந்ததுல இருந்து எடுத்தாங்க. ஸ்டைலஸ் நாலு இருந்துது. மீதிக்கு மையில்லாத பால்பாயிண்ட், சிவப்பு கலரிங் பென்சில், குச்சி இப்படி கிடைத்ததை பயன்படுத்தினார்கள். மௌஸ்பாடுக்குப் பதில் மேசைச்சீலையை மடித்துப் போட்டோம்.

ஸ்கூல் முடிந்து போகும்போது சந்தோஷமா ஆளுக்கொரு பூந்தொட்டி வீட்டுக்கு எடுத்துப் போனாங்க. ஒருத்தர் வகுப்பாசிரியருக்கு அன்பளிப்பாகக் கொடுத்திருப்பார் போல, மேசையில் வைத்திருக்கிறார்.

என்னோடு வீட்டுக்கு வந்த மீதிப் பொருட்களில் வெட்டிய பூக்கள் நிறைய இருந்தது. அறுசுவைக்கு அனுப்பியாயிற்று. ;)

‍- இமா க்றிஸ்

வாழ்த்துக்கள், இமா

''விடா முயற்ச்சி விஸ்வரூப வெற்றி''.

super super

மினி பூந்தொட்டி குட்டியா ரொம்ப அழகா இருக்குங் :-)

நட்புடன்
குணா

அழகான பூந்தொட்டி.வாழ்த்துக்கள் இம்மா சிஸ்டர்

அருமை. அழகாக 'May Flower' போல இருக்கு.

அன்புடன்
ஜெயா

Very superb..

சுகுமார்

ரொம்ப அருமையா இருக்கு இமா!பிள்ளைக செய்ய எளிமையானதா இருக்கு...
தெர்மாகோல் கைவசம் இல்ல...இந்த தெர்மாகோல் பந்து எல்லாம் நீங்க கட் செய்ததா இல்ல வாங்கியதா?இதுல்ல உள்ள எல்லாம் வாங்கி மகளை செய்ய ஆசை..

நல்ல அழகான பூந்தொட்டிக்கு வாழ்த்துக்கள் இமா

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

கருத்துக்கு நன்றி இளவரசி.

//தெர்மாகோல் பந்து// டாலர் ஷாப்ல கிடைக்குது. வெட்டப் போனால் தர்மாகோல் தூசு க்ளீன் பண்ணுறது ;(( டேபிள் டென்னிஸ் பந்து சரியா இருக்கும். ஆனால் ஆடிட்டு இருக்கும். ;) பேப்பர் மாஷேல பந்து பிடிச்சு ஈரமா இருக்கும் போதே குச்சியால் குத்தி துளை செய்துவிட்டு பிறகு உலரவைக்கலாம்.

பூ வெட்டும் பஞ்ச் தவிர வேறு எதுவும் வாங்கத் தேவையில்லை.
பஞ்ச் - ஸ்டேஷனரி கடைல க்ராஃப்ட் செக்க்ஷன்ல கிடைக்கும்.
பேப்பர் - கிடைக்கிறதை ரீசைக்கிள் செய்யலாம்; இரண்டு பக்கமும் நிறமாக இருந்தால் போதும்.
இலை - இஷ்டத்துக்கு வெட்டலாம், பல்லுக்கத்தரிதான் வேண்டும் என்று இல்லை. கிடைக்கிற குச்சிக்கு பச்சை பேப்பரை நீளமாக வெட்டி சுற்றி ஒட்டலாம்.
ஸ்டைலஸ் - பென்சில்
தொட்டி - சில இடங்களில் குல்ஃபி இதுல வரும் என்று கேள்வி. ;) இல்லாட்டா யோகர்ட் கப்
ரிப்பன் - நீளமா துணியை வெட்டலாம்.

‍- இமா க்றிஸ்

உங்கள் கருத்துகளுக்கு என் அன்பு நன்றிகள் கலா, நிகிலா, சஹானா, துர்கா, குணா, jose (உங்க பேர் தமிழ்ல எப்படி தட்டவேண்டும்!), ஜெயா, & சுகுமார்.

‍- இமா க்றிஸ்

Supara iruku aka.very nice.

Kalam pon ponrathu

மிக்க நன்றி. :-)

‍- இமா க்றிஸ்

super

மிக்க நன்றி ஹேமமாலினி.

‍- இமா க்றிஸ்