சந்திர கிரகணம் நாளை

சந்திர கிரகணம் நாளை, கர்பிணிகள் பெண்கள் என்ன செய்யனும், என்ன செய்ய கூடாது பிளீஸ் சொல்லுங்க சகோதரிகளே.

இன்றைய நாளை எப்படிக் கடத்தினீர்களோ அப்படியே நாளைய நாளும் இருக்கலாம். அது இன்னொரு நாள், அவ்வளவுதான். யோசிக்காம இருங்க. உங்க வீட்டார் ஏதையாவது செய்ய வேணாம் என்றால் அதை மட்டும் செய்யாமல் விடுங்க. செய்தாலும் ஒன்றும் ஆகாது, ஆனால் நீங்கதான் வீணாக யோசிச்சுட்டு மனக் கஷ்டத்துல இருப்பீங்க.

சந்திரகிரணத்தின் போது வெளிய போய் பார்த்து இருக்கிறேன். பாதிப்பு ஒன்றும் இல்லை. குழந்தைகள் அழகாக ஆரோக்கியமாகத்தான் பிறந்தார்கள். இவற்றைப் பற்றி நம்பாதவர்களுக்கும் தெரியாதவர்களுக்கும் எதுவும் ஆவதில்லை.

யோசிக்காம இருங்க.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்