200 குறிப்புகள்...2 தங்க நட்சத்திரங்கள்..வாழ்த்துவோம் வாருங்கள் கவிசிவாவை..)))

200 குறிப்புகளை கொடுத்து 2 தங்க நட்சத்திரங்களை கைப்பற்றியுள்ள அறுசுவைத்தோழி அனைவரின் அன்புத்தோழி திருமதி.கவிசிவா அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்!!

அன்புகவி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்:))
மணம் வீசும் மலர்க்கொத்து பிடிங்க கவி:)
மேன்மேலும் பலநூறுகுறிப்புகள் கொடுக்க வாழ்த்துக்கள் தோழி:)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

Congrats.........

Be cool

அடடா.... நான் இதை கவனிக்காம விட்டுட்டனே !!! :) அருள்.. கலக்கிட்டீங்க. சூப்பர் கவிசிவா... வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். இனி இந்த குறிப்புகள் தொடர்ந்து வரணும் என்பது எங்க அன்பான ரூல்ஸ். ;) வித்தியாசமான ஹெல்தி குறிப்புகள்... எப்படி மிஸ் பண்ணுவோம் நாங்க??? :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

200 குறிப்புகளா.!! ரொம்ப அருமைங்க, மேடம், பல குறிப்புகள் கொடுத்து அசத்துங்க, வாழ்த்துக்கள் மேடம் :-)

நட்புடன்
குணா

வாவ்! வாழ்த்துக்கள் கவி..

இன்னும் பல ஸ்டார்ஸ் வாங்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள்...தொடர்ந்து கலக்குங்க...

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

200 குறிப்புக் கொடுத்து அசத்தி இரு தங்க நட்சத்திரம் வாங்கிய தங்கமங்கை கவிசிவாவிற்கு பாராட்டுக்கள். மேன்மேலும் பல குறிப்புக்கள் தர வாழ்த்துக்கள்.

வாவ் கவி..:)அசத்திட்டீங்க. மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் கவி..
இனி மேன்மேலும் பல நல்ல குறிப்புகள் கொடுக்க என் மனமார்ந்த வாழ்த்துகள்.....:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

வாவ், 200 குறிப்புகள் வந்தாயிற்றா?! சூப்ப்பர்ர் கவி!!

இந்த சிகரம் தொட்டதற்கும், இனி மேன்மேலும் கொடுக்கபோகும் பலநூறு குறிப்புகளுக்கும் சேர்த்து என் மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துக்களும்!!
தொடர்ந்து அசத்துங்க! :)

அன்புடன்
சுஸ்ரீ

எந்த குறிப்பா இருந்தாலும் அதை ஹெல்தி வெர்ஸனா மாத்திப்புடும் கவிசிவா என் மலர் கொத்தைப்பிடிங்க :-)

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

2ஸ்டார் லேடி இந்தாங்க பிடிங்க 5ஸ்டார். மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். தொடர்ந்து கலக்குங்க...

அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை

மேலும் சில பதிவுகள்