தேதி: April 27, 2013
மஞ்சள், ரோஸ், நீல நிறங்களில் கார்டு ஸ்டாக் பேப்பர் (அ) விரும்பிய மூன்று நிறங்களில்
கத்தரிக்கோல்
ஜிக்ஜாக் கத்தரிக்கோல்
கம்
பென்சில்
அளவுகோல்
தேவையான அனைத்து பொருட்களையும் தயாராக எடுத்துக் கொள்ளவும்.

மஞ்சள் நிற பேப்பரை 24 அங்குல நீளமும், 6 அங்குல அகலமுமாக ஒரே அளவில் இரண்டு துண்டுகள் வெட்டிக் கொள்ளவும். இரண்டு துண்டுகளையும் நீள பக்கமாக 8 அங்குல அளவில் மூன்றாகப் பிரித்து மார்க் செய்து கொள்ளவும்.

மூன்றாக மார்க் செய்ததில் நடுப்பகுதி தவிர இரண்டு ஓரங்களிலும் இவ்வாறு ஒரு அங்குல ஸ்ட்ரிப்ஸாக மொத்தம் 6 ஸ்ட்ரிப்ஸ் நறுக்கிக் கொள்ளவும்.

மற்ற இரண்டு நிற பேப்பர்களிலும் ஒரு அங்குல அகலமும், 24 அங்குல நீளமுமான ஸ்ரிப்ஸ்களை ஒவ்வொரு நிறத்திலும் 3 வீதம் நறுக்கிக் கொள்ளவும்.

நறுக்கி வைத்த மஞ்சள் நிற பேப்பர்களிரண்டையும் இதேபோல் கிடைமட்டமாக ஒட்டி காயவிடவும். காய்ந்ததும் சுற்றிலுமிருக்கும் ஸ்ரிப்ஸ்களை மேல் நோக்கி மடித்துக் கொள்ளவும்.

ரோஸ் நிற ஸ்ட்ரிப்பை மஞ்சள் நிற ஸ்ட்ரிப்பின் இடையில் விட்டு மாற்றி மாற்றி இதேபோல் சுற்றிலும் பின்னவும்.

அடுத்து நீல நிறத்தையும் இதேபோல் மஞ்சள் நிற ஸ்ட்ரிப்பின் இடையில் விட்டு மாற்றி மாற்றி சுற்றிலும் பின்னவும்.

ஒவ்வொரு சுற்று முடியுமிடத்தில் சுற்றிலும் வரும் ஸ்ட்ரிப்பை மஞ்சள் ஸ்ட்ரிப்புடன் சேர்த்து இதேபோல் ஒட்டிவிடவும்.

தொடர்ந்து மஞ்சள் ஸ்ட்ரிப் முடியும் வரை இதேபோல் பின்னவும்.

மஞ்சள் நிற பேப்பரை சுமார் 24 அங்குல நீளமும், 4 அங்குல அகலமும் கொண்ட ஸ்ட்ரிப்பாக நறுக்கி மடிக்கவும். அதை பின்னி முடித்த பேக்கின் வாய்ப்பகுதியின் மேல் சுற்றிலும் ஒட்டி முடிக்கவும்.

4 அங்குல அகலம் கொண்ட பேப்பரை மடிப்பு தெரியாதவாறு மடித்து பேக்குடன் இணைத்து ஒட்டிவிடவும். ஒட்டியதும் இவ்வாறு இருக்கும்.

கண்ணைக்கவரும் மூவர்ண கார்டு ஸ்டாக் பேப்பர் பேக் ரெடி. பரிசுப் பொருட்கள், மலர்செண்டுகள் போட்டுக் கொடுக்க மிகவும் உபயோகமாக இருக்கும். மேலும் அலங்கரிக்க அதே நிறங்களில் பூக்களை வெட்டி ஒட்டியுள்ளேன்.

Comments
கார்டு ஸ்டாக் பேப்பர் பேக்
Super. 5 stars
அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை
card stock paper
it"s really nice shan. i like it, and i will try it. thankyou
''விடா முயற்ச்சி விஸ்வரூப வெற்றி''.
ஷனாஸ்
பை அழகாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.
- இமா க்றிஸ்
very nice
Hai,
your bag was very nice.I will also to prepare this bag and then i convey you my experience too
கார்டு ஸ்டாக் பேப்பர் பேக்
நான் செய்து பார்த்து விட்டேன். அழகாக இருந்தது.
அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை
பேக்
ரொம்ப அழகா இருக்குங்க :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
கார்டு ஸ்டாக் பேப்பர் பேக்
கார்டு ஸ்டாக் பேப்பர் பேக் ஐ பிரசூரித்த அறுசுவை குழுவிற்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கார்டு ஸ்டாக் பேப்பர் பேக்
தாமரை செல்வி 5 ஸ்டார்ஸ் கொடுத்து செய்தும் பார்த்துவிட்டீங்க ரொம்ப நன்றி.
நன்றி மறப்பது நன்றன்று. நன்றல்லதை அன்றே மறப்பது நன்று.
கார்டு ஸ்டாக் பேப்பர் பேக்
shana farvin, Imma, Venisiva, Vanitha வாழ்த்திய எல்லோருக்கும் என்னுடைய நன்றிகள்.