பட்டிமன்றம் 88:கோபம் வந்தால் மௌனமா?சத்தமா?

அறுசுவையின் அன்பு தோழிகளுக்கு வணக்கம்..

இந்தவாரம் பட்டியில நாம எதைபத்தி விவாதிக்கலாம்….ன்னு யோசிச்சப்ப கோபம் பற்றி கொடுத்திருந்த ஒரு சில பட்டிமன்ற தலைப்புகள் தன்னை யாரும் எடுக்கவில்லையே என கோவித்துகொண்டு உட்கார்ந்திருக்கவும் டபக்கென்று கொத்தி எடுத்துட்டேங்க ..

அறுசுவை தோழிகள் பூங்காற்று மற்றும் ராதாபாலு அவர்களின் ஒருமித்த கருத்தை கொண்ட தலைப்பில் இருந்து ஒரு சிறு மாற்றம் செய்து
எடுத்து கொண்ட தலைப்பு இதுதாங்க…..

*** கோபத்தை அடக்குவதா? வெளிப்படுத்துவதா?...இரண்டில் எது சிறந்தது? ***

( நல்ல தலைப்பை தந்த தோழிகளுக்கு மிக்கநன்றிங்க .)

கோபம் ன்றது ஒரு நெருப்பு பூமாதிரி அது பூக்காத மனிதர்களே அபூர்வம் ..
அதனால எனக்கு கோபமே வராதுன்றது எல்லாம் சாத்தியமில்லங்க..

கோபப்படாம இருக்கறதுதான் நல்லது -ன்றதும் உண்மைதாங்க

ஆனா..நடைமுறையில எப்பவும் கோபப்படாம இருக்கறது அவ்வளவு சுலபமில்லைதானே..?…

சிலர் கோபத்தை வெளிப்படுத்த விரும்பாம / முடியாம / தெரியாம மனசுகுள்ளேயே தக்க வைப்பாங்க…

சிலர் கோபம் மனசுக்குள்ள தங்காம பட்டென்று கடுமையான வார்த்தையாகவோ / செயலாகவோ வெளிப்படும்.

அதனால கோபம் வரும்போது அதை உள்ளுக்குள் தக்கவைத்து அடக்கிட்டு அமைதியா பேசாம இருக்கணுமா?

இல்ல பேச்சாவோ/செயலாவோ வெளிப்படுத்தணுமா)?
கோபம் பற்றிய உங்களின் காரசாரமான கருத்துக்களை ஒருவருக்கொருவர்
கோபப்படாம கொட்டுங்க

கோடைக்காலத்துக்கு இதமா நம்ம

ரம்யாவோட ஹெல்தி ஜுஸ்,
லாவண்யாவோட ஸ்ட்ராபெர்ரி க்ரானிட்டா,
கதீஜாவோட குல்பிஐஸ்க்ரீம் ….,எல்லாம் வச்சிருக்கேன்…..கூல்கூல் ஐட்டம்ஸ் எடுத்துகிட்டு சுடசுட வாதங்களை வைங்க பார்க்கலாம்
பட்டிமன்ற விதிமுறைகள்:

யாரும் யாரையும் பெயரிட்டு அழைக்கக்கூடாது.

அரசியல் அறவே பேசக்கூடாது.

அரட்டை அறவே கூடாது

ஜாதி,மதம் பற்றி பேசக்கூடாது.

நாகரீக பேச்சு மிகமிக அவசியம்.

அறுசுவையின் எல்லா விதிகளும் இந்த பட்டிக்கும் பொருந்தும்.

நல்ல தலைப்பு. இக்கால கட்டத்துக்கு ஏற்றது. கோபத்தை அடக்கினால் கஷ்டம். கோபத்தை அடக்காவிட்டால் நஷ்டம். எதை வாதாடத் தெரிவு செய்யிறது என்று தெரியவில்லை. நான் அறுசுவைக்குப் புதுசு. பட்டிக்கு இரண்டாவது புதுசு. தோழிகள் எல்லோரும் வந்து பட்டாசாக வாதத்தை கொளுத்தப் போகின்றார்கள். தலைப்பைத் தெரிவு செய்து பிறகு வருகிறேன். நடுவர் அம்மணி.

அன்புடன்
சியாமளா

இனிய நடுவருக்கும் அன்பு தோழிகளுக்கும் பண்பான வணக்கங்கள்.

கோபம் வந்தால் மவுனம்தான் பெஸ்ட் அப்படீங்கற அணியின் பக்கம் என் வாதங்களை எடுத்து வைக்கிறேன்.

கோபம் வந்து நாம் கொட்டும் வார்த்தைகள் கோபப்படுத்தியவரை யோசிக்க வைப்பதை விட நம் மவுனம் அவரது மனதை இன்னும் யோசிக்க வைக்கும்.

தீயினால் சுட்டவடு உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு

உண்மைதானே நடுவரே! அதுவும் கோபத்தில் நாம வாயைத்திறந்தால் என்ன வார்த்தைகள் வந்து விழும்னு நமக்கே தெரியாது. கொட்டின பொன்னை அள்ளி விடலாம். ஆனால் கொட்டிய சொல்லை அள்ள முடியுமா?

இன்னும் விரிவான வாதங்களுடன் விரைவில் வருகிறேன் நடுவரே!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

முதல் பதிவு போட்ட சியாமளாவுக்கு நன்றி....

சீக்கிரமா முடிவு பண்ணிட்டு ஏதாவது ஒரு அணியில் களமிறங்குங்க....
எல்லாருமே ஒரு சமயத்தில் அறுசுவைக்கு புதுசுதான் அதனால தயக்கமில்லாம வாதங்களை வந்து வைங்க.....

வாழ்த்துக்கள்

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

இந்தா வந்துட்டேன் நடுவரே ;) அருமையான தலைப்பை தந்த தோழிகளுக்கும், சரியான நேரத்தில் தேர்வு செய்திருக்கும் நடுவருக்கும் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.

கோவத்தில் மௌனமாக இருப்பதே நல்லது... நமக்கு மட்டுமல்ல... நம்மோடு உள்ளவர்களுக்கும் அது தான் நல்லது. எந்த விஷயமுமே தப்பா சரியான்னு நமக்கு தோனும் போது அதில் உண்மை பாதியும், நம்ம மனசோட அந்த நிமிட நிலையின் தாக்கம் பாதியுமா தான் இருக்கும். அதனால் அந்த நிமிஷம் அந்த கோவத்தை வெளிய காட்டுறது எப்பவுமே புத்திசாளித்தனம் அல்ல. மிச்சத்தோட அப்பறமா வரேன் நடுவரே :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வாங்க வாங்க மவுனம்தான் பெஸ்டா ..நல்லது..:)

// கோபம் வந்து நாம் கொட்டும் வார்த்தைகள் கோபப்படுத்தியவரை யோசிக்க வைப்பதை விட நம் மவுனம் அவரது மனதை இன்னும் யோசிக்க வைக்கும். //

கோபத்தில் உள்ளே ஓசைகள் ஓடினாலும் கூட ...இதழில் மவுனம் காப்பது அடுத்தவரை யோசிக்கவைக்கும் ன்னு சொல்றாங்க.....

தொடர்ந்து வந்து சுடசுட மிளகாய் பஜ்ஜி வாதங்களை வைங்க ....கவி

வாழ்த்துக்கள் :)

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

வணக்கம்.
கோபம் வந்தால் அதை சத்தம் போட்டு வெளிப்படுத்துவதுதான் சரி.அடக்கி அடக்கி வைத்தால் நம்ம ஹெல்த்துக்குதான் ப்ரச்சனை.அதுமட்டுமில்லாமல் அடக்கி வைக்கப்படும் கோபம் மிக ஆபத்தானது. பின்னாளில் பழிவாங்கும் குணமாக மாறிவிடும். அதற்கு பதில் நாம் நாமாக இருக்கலாமே.

வாங்க வாங்க

மௌனத்தோடகூட்டல் போட்டாச்சா...மகிழ்ச்சி

கோவத்தை வெளிய காட்டும்போது பொதுவா நம்ம பக்கம் தவறா /சரியான்னு கூட தெளிவு இருக்காது ..அதனால அது வேண்டாமேன்னு மௌனராகம் பாட
இன்னொரு ஆள் வந்துட்டாங்க...

சத்தமே சரின்னு சத்தம் போட்டு சொல்ல யார் வரபோறாங்கன்னு நான் ஆவலோடு காத்திருக்கேன்

வாழ்த்துக்கள்....வனி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

அப்பாடா சத்தமே அணிக்கு சத்தம்போட வந்த நந்தினிக்கு நன்றிங்க...

எதுக்கு ப்ரஷர் குக்கர்மாறி கோவத்தை அடக்கி வைச்சு அப்புறமா வெடிக்கணும்....அதனால அப்பப்ப ரிலீஸ் பண்ணிட்டு ரிலாக்ஸாடா இருங்கன்னு பளிச் வாதத்தை பட்டாசா வெடிச்சுட்டு போயிருக்காங்க...நந்தினி

நந்தினியோடு சத்தமா பேட்டிங் போட யார் யார் ரெடியோ ஓடிவந்து சேருங்க அவங்க அணியில

தொடர்ந்து வந்து பட்டாசு போடுங்க நந்தினி.....வாழ்த்துக்கள்

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

வணக்கம்.. நடுவர் அவர்களே... கோபம் வந்தால் அதே நேரத்தில் அதை வெளிக்காட்டுவதுதான் சரி. அது, அத்தோடு மறந்து போகும்... ஆனால், கோபம் வரும்போதெல்லாம் அதை அடக்கி மனதில் புதைத்து வைத்திருக்கும்போது ஆத்திரம் அதிகமாகுமே தவிர குறையாது... என்றாவது ஒரு நாள் அது வெடித்துச் சிதறும்போது.. பாதிப்பு அதிகமாக இருக்கும்...

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

அருமையான தலைப்பு நடுவர் அவர்களே
கோபம் வந்தால் அமைதியாக இருப்பதே நல்லது என்பது என் கருத்து
கோபம் வரும் போது அமைதியாக நாம் இருந்தால் எதிரில் இருப்பவர் தாம் செய்யும் தவறை உணர்ந்து விடுவார்.அவர் கோபத்தையும் குறைத்து கொள்வார்.கோபம் வரும் போது நாம் அமைதியாக இருந்தால் நம் உடலும் சீராக இருக்கும்.கோபம் வரும் நேரத்தில் நாம் கொபப்பட்டு பதில் பேசினால் அவர்கலும் பதிலுகு போட்டி போட்டு பேசுவார்கள்.இருக்கும் பிரச்சினை இன்னும் பெரிதாகும் ஆகவே இந்த நேரங்களில் நாம் மொஉனமாக இருப்பதே நல்லது

மேலும் சில பதிவுகள்