நீர் கடுப்பு

நீர் கடுப்புக்கு என்ன பன்னலாம் 2 நாள இருக்கு தயவு செய்து உதவுகள்

நீர்கடுப்புக்கு லெமன் ஜூஸ் போட்டு குடிங்க,,
சீரகத்தை நல்ல கொதிக்க வைச்சு ஆர வைச்சு குடிங்க,தண்ணீர் நிறைய குடிங்க சரியாகிரும் தோழி...

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

எனக்கு சின்ன வயசில இந்த பிரச்சினை இருந்திச்சி... அப்போ, எங்க பாட்டி என்ன செய்வாங்க தெரியுமா?? இரண்டு கால் பெருவிரல்கள் நகத்திலயும் சுண்ணாம்பு தடவிவிடுவாங்க.. பொவன்டோ குடிச்சாலும் நீர்கடுப்பு சரியாகிவிடும்... அப்படியும் போகலன்னா.. உச்சந்தலையில, விளக்கெண்ணை இல்லன்னா நல்லெண்ணை தடவுங்க... சரியாகிடும்... இதெல்லாம் நாங்க Follow பண்றது...

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

நீர்கடுப்பு அதிக உடல் சூட்டால் வருவது ,நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும், இளநீர் குடிங்க,நீர் ஆகாரம் குடிங்க, வெந்தயத்தை ஊற வைத்து அந்த வெந்தயத்தை சாப்பிட்டுவிட்டு ஊற வைத்த தண்ணீரையும் குடிங்க,,பாசிப்பயறு உணவுல சேர்த்துக்கோங்க பா... முடிந்தால் 1 நாளைக்கு 2 முறை குளிங்க,,,

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

thanks to all

benazirjaila

அன்புத் தோழி
நீர்கடுப்பு உடனே சரியாகனுமுனா குளுக்கோஸ் பொடியை தண்ணீரில் கலந்து குடியுங்கள்
2. சுத்தமான புளியை தண்ணீரில் ஊற வைத்து கரைத்து அதனுடன் கருப்பட்டி சேர்த்து குடியுங்கள்.
3. படுக்கும் போது தொப்புள் குழியில் எண்ணெய் வைத்தாலும் சரியாகும்
4. சீரகத்தை லேசாக வறுத்து அதனுடன் சின்ன வெங்காயத்தை நறுக்கி போட்டு தண்ணீரை கொதிக்க வைத்து குடியுங்கள் சரியாகும்.

முடிந்ததை முயற்சி செய்வோம்
முடியாததை பயிற்சி செய்வோம்

வாழ்த்துக்களுடன்
பூர்ணி

மேலும் சில பதிவுகள்