முட்டை மசாலா

தேதி: October 14, 2006

பரிமாறும் அளவு: 5நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

முட்டை - ஆறு
வெங்காயம் - இரண்டு
தக்காளி - இரண்டு
இஞ்சி - அரைத்துண்டு
பூண்டு - நான்கு
மிளகு - ஒரு தேக்கரண்டி
மிளகாய்தூள் - இரண்டு தேக்கரண்டி
மஞ்சள்தூள் - கால்தேக்கரண்டி
தனியாத்தூள் - ஒரு தேக்கரண்டி
கரம்மசாலா - ஒரு தேக்கரண்டி
தேங்காய்ப்பூ - நான்கு மேசைக்கரண்டி
கசகசா - ஒரு தேக்கரண்டி
சர்க்கரை - அரை தேக்கரண்டி
உப்புத்தூள் - இரண்டு தேக்கரண்டி
தேங்காய் எண்ணெய் - அரைக்கோப்பை
கறிவேப்பிலை - இரண்டு கொத்து


 

முட்டைகளை வேகவைத்து தோலை உரித்து வைக்கவும்.
தேங்காயுடன் கசகசாவை சேர்த்து மையாக அரைக்கவும். அதனுடன் எல்லா மசாலா தூளையும் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
வெங்காயம், தக்காளியை பொடிதாக நறுக்கிக் கொள்ளவும்.
சட்டியில் எண்ணெயை காயவைத்து மிளகை போட்டு பொரியவிடவும். பிறகு வெங்காயம், கறிவேப்பிலை போட்டு நன்கு சிவக்க வறுக்கவும். பிறகு நசுக்கிய இஞ்சி பூண்டைப் போட்டு வறுக்கவும்.
பிறகு அரைத்து வைத்துள்ள தேங்காய் மசாலாவை போட்டு நன்கு வதக்கவும்.
பிறகு தக்காளியை போட்டு உப்பு, சர்க்கரையை போட்டு நன்கு வதக்கவும்.
மசாலா எண்ணெய் கக்கும் வரை வதக்கி விட்டு இரண்டு கோப்பை தண்ணீரை ஊற்றி கொதிக்கவிடவும்.
குழம்பு நன்கு கொதித்தவுடன் வேகவைத்த முட்டைகளை போட்டு சிறிது நேரம் கழித்து அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
இந்த சுவையான முட்டை மசாலாவை ஆப்பத்திற்கு பக்க உணவாக சூடாக பரிமாறவும்.


எண்ணெயில் மிளகை வறுக்கும் பொழுது மேலே தெரிக்காமல் இருக்க ஒரு மூடியைக் கொண்டு சற்று திறந்தாற் போல் மூடி வறுக்கவும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

அக்கா முட்டை மசாலா செய்தேன். புது சுவையுடன் நன்றாக இருந்தது. என் தம்பி ஹோட்டலில் செய்தது போல் சுவையாக இருக்குது. என்று சொன்னான். அக்கா இது சாதத்திற்கும் சைட் டிஷ் ஆக சாப்பிடலாம். அதனால் சர்க்கரை ம்ட்டும் சேர்க்கவில்லை.