தேதி: May 1, 2013
A4 பேப்பர் - மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறம் (அ) விரும்பிய 2 நிறங்களில்
ஒரு பேப்பரை 16 துண்டுகளாக்கி http:www.arusuvai.com/tamil/node/15022 இந்த லிங்கில் உள்ளது போல் முக்கோணங்களாக மடித்துக் கொள்ளவும். இதில் மொத்தம் 241 மஞ்சள் முக்கோணங்களும், 126 ஆரஞ்சு முக்கோணங்களும் பயன்படுத்தியுள்ளேன்.

அதே லிங்கில் உள்ள பேப்பர் பூ ஜாடியின் அடிப்பாகம் போல் முக்கோணங்களை ஒரு வரிசைக்கு 24 வீதம் வைத்து 5 வரிசைகளுக்கு இணைத்துக் கொள்ளவும்.

படத்தில் காட்டியுள்ள முறையில் 2-1-2-1-2 என மஞ்சள் முக்கோணங்களை அடுக்கிக் கொள்ளவும். (மஞ்சள் முக்கோணங்களை மட்டும் அடுக்கினால் போதும். அடுக்கும் முறை பார்த்ததும் புரியவேண்டும் என்பதற்காக மஞ்சள் மற்றும் ஆரஞ்சு என இரண்டு நிறங்களையும் இணைத்து காட்டியுள்ளேன்).

படத்தில் காட்டியுள்ளது போல் உள்பக்கம் வெளிப்புறமாக வருமாறு ஆரஞ்சு முக்கோணங்களை இணைக்கவும்.

இதேபோல தொடர்ந்து ஆரஞ்சு மற்றும் மஞ்சள் முக்கோணங்களை இணைத்து முடிக்கவும். மொத்தம் 6 மஞ்சள் இணைப்புகளும், 6 ஆரஞ்சு இணைப்புகளும் இருக்கும்.

படத்தில் காட்டியுள்ளது போல் 9 மஞ்சள் முக்கோணங்களை இணைத்து ஆர்ச் வடிவில் தயார் செய்யவும். இதேபோல் மொத்தம் 6 ஆர்ச்சுகள் செய்து கொள்ளவும்.

செய்த ஆர்ச் வடிவத்தை ஆரஞ்சு நிற இணைப்புகளின் இரு புறமும் உள்ள மஞ்சள் முக்கோணத்தில் இணைக்கவும். இதே முறையில் மீதமுள்ள ஆர்ச்சுகளையும் சுற்றிலும் இணைக்கவும்.

ஆரஞ்சு முக்கோணங்களை பார்டராக சுற்றிலும் இணைக்கவும். எல்லா ஆர்ச் வடிவங்களையும் சற்று பின்புறமாக வளைத்து விடவும். இப்போது பூக்கூடை அழகாக விரிந்து இருக்கும்.

படத்திலுள்ளது போல் ஒரு மஞ்சள் முக்கோணத்தில் இரண்டு ஆரஞ்சு முக்கோணங்களை இணைக்கவும். அடுத்து ஒரு மஞ்சள் முக்கோணம், மீண்டும் இரண்டு ஆரஞ்சு முக்கோணங்கள் என 18 வரிசைகளுக்கு இணைக்கவும். (19 வது வரிசையில் மஞ்சள் நிறமும், 18 வது வரிசையில் ஆரஞ்சு நிறமும் இருக்கும்).

இதை வளைத்து பூக்கூடையில் சொருகிவிடவும்.

அழகான பேப்பர் பூக்கூடை தயார்.

Comments
கவிசிவா
நான் நான் நான் தான் ஃபர்ஸ்ட்.... ;) சூப்பரோ சூப்பர் கவிசிவா. கலர் காம்பினேஷன்... அட்டகாசம்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
நன்றி டீம் :)
நான் அனுப்பிய படங்களையும் குறிப்புகளையும் அழகாக தொகுத்து வெளியிட்ட டீம் க்கு நன்றி :).
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
வனி
முதல் ஆளா பதிவிட்டு சந்தோஷப் படுத்திட்டீங்க :). நன்றி வனி!
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
ரெண்டாவது ஆள் ;)
சூ..ப்பர் கவீஸ். அழகான டிசைன் பாஸ்கட். நீட் ஃபினிஷ்.
- இமா க்றிஸ்
இமாம்மா
ஹா ஹா ரெண்டாவது ஆளாக வந்து பதிவிட்ட இமாம்மா வுக்கு நன்றி :)
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
கவி
அடடா இது நீங்களா நான் வனியோடதுன்னு நினைச்சு ஒரு மெஸேஜ் போட்டேன் அவங்களுக்கு இருங்க உங்களுக்கு பேஸ்ட் பண்றேன் அத
நேத்து இத த்தான் நான் தேடிட்டி இருந்தேன்..இன்னிக்கு இத மாதிரியே போட்டிருக்கீங்க..என்னன்னு சொல்ல
மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
அன்புடன்
இளவரசி
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.
கவிசிவா மேடம்,
பேப்பர் கூடை ரொம்ப அழகா செம கலரா சூப்பரா இருக்குங்க , வாழ்த்துக்கள் மேடம் :-)
நட்புடன்
குணா
kavisiva
அழகான பூகூடை..எனக்கே எனக்கு..போன வாரமே சொன்னன்ல. செய்ற அளவுக்கு பொறுமை இல்ல(இல்லனா மட்டும் உனக்கு வந்திடுமா என் மனசாட்சி கேக்குதுபா) சுப்பர் கவி..
Be simple be sample
கவி
வாவ் சூப்பரா இருக்கு கவி.. அதே சமயம் ரொம்ப மலைப்பாவும் இருக்கு.. எப்படி இப்படி பொருமையா கிட்டதட்ட நானூருக்குமேல முக்கோணம் மடிச்சு அத அழகா சேர்த்து கூடை பண்ணியிருக்கீங்க?? ஈசியா செய்ய எதாவது ஐடியா கொடுங்க கவி ..இந்த மாதிரி செய்யனும்னு ரொம்ப நாளா நினைச்சுருக்கேன் ஆனா முக்கோணம் மடிக்கறத நினைச்சே ஜகா வாங்கிட்டிருக்கேன் ........நீங்க பயங்கர பொருமைசாலி கவி :-)
சூப்பர் சூப்பர் சூப்பர் கவி வாழ்த்துக்கள் :-)
Don't Worry Be Happy.
இளா
ஹா ஹா நீங்க வனி ன்னு நினைச்சதில் தப்பே இல்லை இளா. வனியின் அன்னப்பறவையும் மயிலும்தான் எனக்கு இந்த கிராஃப்ட் செய்யும் ஆர்வத்தையே கொடுத்தது. அது வரை அம்மாடியோவ் எவ்ளோ முக்கோணங்கள் மடிக்கணும்னு ட்ரை பண்ணாமலேயே இருந்தேன் :). முதன்முதலா அன்னம்தான் செய்தேன். செய்த பின் தானே ஆர்வம் வந்திடுச்சு :)
வாழ்த்துக்களுக்கு நன்றி இளா!
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
குணா
வாழ்த்துக்களுக்கு நன்றி குணா!
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
ரேவதி
ரேவ்ஸ்! இன்னுமா என் வீட்டை தேடிகிட்டு இருக்கீங்க. சீக்கிரம் வாங்க :) வேற யாரவது அமுக்கிட்டாங்கன்னா நான் பொறுப்பில்லை :)
நன்றி ரேவ்ஸ் :)
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
ஜெய்
//நீங்க பயங்கர பொருமைசாலி கவி//
ஆஹா! உங்களுக்கு தெரியுது ஜெய். வீட்டுல இருக்கறவங்களுக்குத்தான் புரிய மாட்டேங்குது :)
முக்கோணம் மடிக்கறது அப்படி கஷ்டமான வேலை இல்லை ஜெய். பேப்பரை கட் பண்ணி வச்சுகிட்டு டிவி பார்க்கும் போது, சமையலுக்கு இடையே மடிச்சோம்னா ஈசியா மடிச்சுடலாம். நேரம் கிடைக்கும் போது மடிச்சு வச்சுகிட்டா செய்யறது ஈசியா செய்துடலாம்.
வாழ்த்துக்களுக்கு நன்றி ஜெய்!
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
kavi
very very nice
அழகு பூக்கூடை!!
வாவ்... அழகு பூக்கூடை!! சூப்பர் கலர் காம்பினேஷன் & கச்சிதமா இருக்கு! வாழ்த்துக்கள் & பாராட்டுகள் கவி!
அன்புடன்
சுஸ்ரீ
பேப்பர் பூக்கூடை
அழகு பூக்கூடை வாழ்த்துக்கள்.தொடரட்டும் உங்கள் பணி.
paper flower basket
great....., great....., great....., kavi, your really intelligent. amazing craft kavi. i like it so much, and colours its really nice. keep it up.
''விடா முயற்ச்சி விஸ்வரூப வெற்றி''.
பேப்பர் பூக்கூடை
சூப்பரா இருக்கு கவி
அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை
நிகிலா
நன்றி நிகிலா :)
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
சுஶ்ரீ
வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி சுஶ்ரீ :)
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
ஷனாஸ்!
வாழ்த்துக்களுக்கு நன்றி ஷனாஸ் :)
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
சஹானா
நன்றி சஹானா! இன்டெலிஜென்ட் எல்லாம் இல்லைங்க. இணையத்தில் தேடி கிடைத்த ஐடியாவில் சின்ன சின்ன மாற்றங்களுடன் செய்ததுதான் :)
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
தாமரை செல்வி
நன்றி தாமரை செல்வி :)
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
கவி
ஆர்காமி பூக்கூடை ரொம்ப அழகா இருக்கு. கலர் காமினேஷன் சூப்பர். கூடைய அப்படியே எடுத்துக்கலாம் போல இருக்கு. வாழ்த்துக்கள்.
வினோ
ஹாய் வினோ எப்படி இருக்கீங்க? கூடையை அப்படியே எடுத்துக்கோங்க :)
நன்றி வினோ!
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
hai
super, but ennala than ethai seaiya mudiyallai
Nan virumpum kadaul jesus.
wonderful art
Nalla iruku...ithey video aa poteynkana innum engaluku nalla puriyum... Thanks