கோவக்காய் பொரியல்

தேதி: May 1, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.7 (3 votes)

 

கோவக்காய் - அரை கிலோ
சின்ன வெங்காயம் - 10
வரமிளகாய் - 2
சாம்பார் தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கடுகு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, எண்ணெய் - தாளிக்க


 

தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும். கோவக்காயை நன்கு கழுவி, அதன் நுனிப் பகுதியை நறுக்கி விட்டு, வட்ட துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கடலைப்பருப்பு தாளித்து, நறுக்கிய சின்ன வெங்காயம், வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
பின்பு கோவக்காயைப் போட்டு வதக்கி மஞ்சள் தூள், சாம்பார் தூள், உப்பு போட்டு நன்கு கிளறி விடவும்.
அதனுடன் சிறிதளவு நீர் ஊற்றி அடுப்பை மிதமான தீயில் வைத்து வேக விடவும். இடையிடையே நன்கு கிளறிவிட்டு, நீர் போதவில்லையெனில் மேலும் சிறிது நீர் விட்டு வேகவிடவும். நன்றாக வெந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.
சுவையான கோவக்காய் பொரியல் தயார். இது தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள ருசியான இணை உணவாகும். கோவக்காய் மருத்துவ குணங்களை உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சூப்பர்... எங்க அம்மாக்கு பிடிச்ச மெத்தட்ல செய்திருக்கீங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அருள் ஹெல்தியான காய். இது நான் செய்ததே இல்ல இன்னக்கி வாங்கிட்டு செய்துட்டு சொல்றேன். நீங்க பீஸ் போட்டு இருக்கறது அழகா இருக்கு

arul romba super enakku kovakkai romba pidikkum,ithi thengai podalama

கோவைக்காயா, கோவக்காயா. எல்லோருமே இப்படி சொல்வதால் ஒரு குழப்பம்.

மிக்க நன்றி:)
//எங்க அம்மாக்கு பிடிச்ச மெத்தட்ல செய்திருக்கீங்க. :)//
அப்படியா, மிக்க மகிழ்ச்சி வனி:))

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

கண்டிப்பா செய்துபாருங்க :)
பதிவிற்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி தேவி:)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

ரொம்ப சந்தோஷம் பதிவிற்கும் பாராட்டிற்கும்:)
விரும்பினால் தேங்காய் போடலாம் :) தேங்காயை ரொம்பவும் வறுக்ககூடாது போட்டவுடன் கிளறி அடுப்பை நிறுத்திவிடவேண்டும்.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

கொவ்வைகாய் என்பது மருவி கோவக்காய் ஆகிவிட்டது. கொவ்வை என்பதுதான் சரி. கிளிக்கு மிகவும் பிடித்தது கொவ்வைபழம் என படித்த ஞாபகம் உண்டு..

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.