அதிக ரத்தபோக்கு

ஹாய் தோழிகளே , எனக்கு மாத விலக்கு நேரத்தில் மிக அதிக படியான ரத்த போக்கு உள்ளது. அத்துடன் குறைந்தது 5 லிருந்து 7 நாட்கள் வரைக்கும் நிற்பது இல்லை. அத்துடன் 26 நாட்களுக்குள் அடுத்த மாத விலக்கு தொடங்கி விடுகிறது. டாக்டரிடம் செக் பண்ணி பார்த்தேன். அவர் thyroid டெஸ்ட் எடுக்க சொன்னார். அதிலும் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. கிட்டத்தட்ட 16 வருடங்களாக இதே பிரச்சினையால் கஷ்ட படுகிறேன். இதனால் எனக்கு உடலில் சக்தி இல்லாமல் போகிறது, சாதாரண வேலைகளுக்கே மிகவும் சோர்ந்து போகிறேன். இந்த பிரச்சினைக்கு எதாவது வழி இருந்தால் தெரிந்தவர்கள் சொல்லுங்களேன் ப்ளீஸ் .

நன்றியுடன்,
மகாசங்கர்

ஹாய் மஹாஷன்கர்19 கவலை பட வேண்டாம். தினமும் இரவில் 2 பேரிட்சை பழம் சாப்பிடுங்கள் மாத விளக்கு நாட்களில் சத்தான உணவினை எடுத்து கொள்ளவேண்டும். அப்போது உடலில் நல்ல சக்தி உண்டாகும். அதுமட்டும் அல்லாது பாதம், முந்திரி, சாப்பிடுங்கள். நல்ல முன்னேற்றம் கிடைக்கும். முயற்சி செய்து விட்டு கருத்தினை தெரிவிங்கள்.

நீ உனக்காக வாழ வேண்டும் .

என்றும் அன்புடன்
சங்கீதா.

மேலும் சில பதிவுகள்