முருங்கைக்கீரை சுண்டைக்காய் வறுவல்

தேதி: October 14, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

முருங்கைக்கீரை - 5 கப்
சுண்டைக்காய் - 1 கப்
சின்னவெங்காயம் - 100 கிராம்
தேங்காய்துருவல் - 1/2 கப்
மிளகாய்வற்றல் - 2
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு


 

கீரையை சுத்தம் செய்து வைக்கவும். சுண்டைக்காயை பாதி பாதியாக வெட்டவும்.
எண்ணெயை சூடாக்கி மிளகாய் வற்றல் போட்டு தாளிக்கவும்.
வெங்காயத்தை நறுக்கி போட்டு வதக்கி, சுண்டைக்காயை போட்டு பொரிய விடவும்.
அதில் கீரையை போட்டு உப்பு சேர்த்து நன்கு வதக்கி வெந்தவுடன், தேங்காய் துருவல் போட்டு கிளறி அடுப்பை அணைக்கவும்.


மேலும் சில குறிப்புகள்