பெயர்ப்பதிவு குறித்த முக்கிய அறிவிப்பு

அறுசுவையில் கடந்த சில வாரங்களாக spam bots registration attack அதிகரித்துள்ளது. Spammers சில scripts ஐ பயன்படுத்தி, "கன்னாபின்னா" பெயர்களில் தொடர்ந்து பெயர்ப்பதிவு செய்து வருகின்றார்கள். முன்பெல்லாம் நாள் ஒன்றுக்கு இரண்டு மூன்று ரெஜிஸ்ட்ரேசன் வரும். அதை டெலிட் செய்வது எளிதாக இருந்தது. இது சமீபத்தில் மிகவும் அதிகரித்து 5 நிமிடத்திற்கு ஒன்று என்றளவில் இருக்கின்றது. நேரடியாக பெயர்ப்பதிவை அனுமதிக்கும் பிரபல தளங்கள் எல்லாமே இந்த பிரச்சனையை சந்தித்து வருகின்றன. இதனை கட்டுப்படுத்த வேண்டுமென்றால் பெயர்ப்பதிவின்போது சில கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டும். அப்படி செய்கையில், சாதாரணமாக பெயர்ப்பதிவு செய்யும் உண்மையான உறுப்பினர்களுக்கு சில சிரமங்கள் உண்டாகும். இருப்பினும் வேறு வழியில்லை என்பதால், இதனை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு இருக்கின்றோம்.

இப்போது பெயர்ப்பதிவில் செய்யப்பட்டிருக்கும் மாற்றத்தின்படி, ஒவ்வொரு பெயர்ப்பதிவிற்கும் அட்மினிஸ்டர் அப்ரூவல் கட்டாயமாக்கப்படுகின்றது. இனி பெயர்ப்பதிவு செய்பவர்களுக்கு உடனடியாக பாஸ்வேர்டு கிடைக்காது. அட்மினிஸ்டர் அப்ரூவலுக்கு பிறகே அவர்களுக்கு பாஸ்வேர்டு கிடைக்கும். அதன்பிறகே அவர்கள் அறுசுவையில் லாகின் செய்ய இயலும். எங்களால் இயன்ற அளவிற்கு விரைவில் அப்ரூவல் வழங்க முயற்சி செய்கின்றோம். சற்று தாமதமானால் தயவுசெய்து வருத்தம் கொள்ள வேண்டாம். பாஸ்வேர்டு கிடைக்கவில்லையென்று மீண்டும் வேறு பெயரில் பெயர்ப்பதிவு செய்ய முயற்சிக்க வேண்டாம். உங்களது மின்னஞ்சலை பரிசோதியுங்கள். இது குறித்த தகவல் வந்திருக்கும். அதிகபட்சமாக 24 மணி நேரத்திற்குள் அனுமதி வழங்க முயற்சிகள் செய்கின்றோம். இது ஒரு தற்காலிக ஏற்பாடுதான். இதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்து, பிரச்சனைக்கு தீர்வு கண்ட பிறகு, பழையபடி உறுப்பினர் சேர்க்கை எளிமையாக்கப்படும். சிரமத்திற்கு மன்னித்து, எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டுகின்றோம்.

மேலே குறிப்பிட்டுள்ள spam registrations தற்போது மிக அதிகமாகி, சர்வரை பாதிக்கும் அளவிற்கு வந்துள்ளதால், பெயர்ப்பதிவு செய்யும் வசதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. spammers ஐ கட்டுப்படுத்த சில புதிய வழிமுறைகளை முயற்சித்துப் பார்க்க இருப்பதால், ஒன்று அல்லது இரண்டு தினங்களுக்கு இந்த வசதியை நிறுத்தி வைக்க வேண்டியது அவசியமாகின்றது. ஏற்கனவே பெயர்ப்பதிவு செய்தவர்கள் அறுசுவையில் லாகின் செய்வதில் பிரச்சனைகள் எதுவும் இருக்காது. பெயர்ப்பதிவு செய்யாதவர்களுக்கும் அறுசுவையை பார்வையிடுவதில் பிரச்சனைகள் இருக்காது. ஒன்று அல்லது இரண்டு தினங்களுக்கு பிறகு மீண்டும் பெயர்ப்பதிவு வசதி கொடுக்கப்படும். தவிர்க்க இயலாத இந்த சிரமத்திற்கு வருந்துகின்றோம்.

Nan intha arusuvai thalaithuiruku puthiyathu nan email id post panitan athai epadi delete seiyanum nu thareila...nan samsung tab 2 use panaran ithula delete option illa....konjam help panunga plz....

மேலும் சில பதிவுகள்