தேதி: May 4, 2013
2 செ.மீ அளவில் சாட்டின் ரிப்பன் - விரும்பிய நிறங்களில்
ஊசி நூல்
பட்டன்ஸ்
கத்திரிக்கோல்
ப்ளாங்க் ஃபிங்கர் ரிங்
லைட்டர்
ஹாட் க்ளூ
சாட்டின் ரிப்பனை சதுர துண்டுகளாக வெட்டி எடுக்கவும். துண்டுகளின் ஓரங்களை லைட்டர் வைத்து தீயில் காட்டி முனைகளை சீல் செய்யவும்.

வெட்டிய சாட்டின் துண்டுகளை படத்தில் காட்டியுள்ளது போல ஸ்டெப் பை ஸ்டெப்பாக மடித்து தைக்கவும்.(தையல் தெரிவதற்காக வெள்ளை நூலில் தைத்து காட்டியுள்ளேன்). நான்காவது ஸ்டெப் முடிந்ததும் ரிப்பன் துண்டை பின் பக்கமாக மடித்து ஓரங்களை தைக்கவும். இதழ்களை உள்பக்கம் விரல்களால் லேசாக அழுத்தி விரித்துவிடவும்.

இதேமுறையில் ஐந்து இதழ்கள் செய்துகொள்ளவும்.

அனைத்து இதழ்களையும் சேர்த்து நடுவில் பட்டன்ஸ் வைத்து, பின் பக்கம் ப்ளாங்க் ஃபிங்கர் ரிங்கை ஹாட் க்ளூ வைத்து ஒட்டவும்.

டபுள் கலர்ஸ் பூக்கள் செய்ய இரண்டாவது படத்தில் காட்டியுள்ளது போல் இரண்டாவது ஸ்டெப் மடிக்கும்போது இரண்டு கலர் ரிப்பன்களை சேர்த்துவைத்து மடிக்கவும்.

அழகான சாட்டின் ரிப்பன் ஃபிங்கர் ரிங் தயார். இதேபோல் பூக்கள் செய்து ஹேர் க்ளிப்ஸில் கூட ஒட்டலாம். கம்மல், ப்ரேஸ்லெட் கூட செய்து உடைக்கு ஏற்ப அணிந்துகொள்ளலாம்.

Comments
sattin ribbon finger ring (kala)
கலா ரொம்ப அழகா இருக்கு கலா, நல்லா பண்ணீற்கிங்க, வாழ்த்துகள்.
அனா நான் அனுப்பிய மெஹந்தி தான் இன்னும் இடம் பெறவில்லை. ஏன்னு தெரியல. நீங்க மெயில் அனுப்பும் போது எப்படி அனுப்புவீங்க கொஞ்சம் சொல்லுங்களேன்.
''விடா முயற்ச்சி விஸ்வரூப வெற்றி''.
kala
so nice kala
கலை
இன்னும் ஒரு அழகான சிம்பிளான கைவினை... கியூட். :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
கலை மேடம்,
ரிப்பன் ஃபிங்கர் ரிங் ரொம்ப அழகா செய்திருக்கீங்க, வாழ்த்துக்கள்ங்க :-)
நட்புடன்
குணா
ரிங்
குறிப்பு வெளியிட்ட டீமிற்கு நன்றி :)
Kalai
சஹானா
மிக்க நன்றி சஹானா :)நீங்க எந்த மெயிலுக்கு அனுப்பினீங்க?என்னுடைய மெஹந்தி குறிப்பு ஐந்து மாதம் கழித்து வந்தது ;) சரியா அனுப்பியிருந்தா கட்டாயம் வரும்,கொஞ்சம் தாமதமா.காத்திருங்கள் :)
Kalai
ரிங்
மிக்க நன்றி நிகி :)
Kalai
ஃ பிங்கர் ரிங்
மிக்க நன்றி வனிக்கா :)
Kalai
குணா
வாழ்த்துக்களுக்கு நன்றி குணா :)
Kalai
mrs.kala,
நான் arusuvaiadmin@gmail.com என்ற மெய்லுக்கு அனுப்பினேன். அந்த ஐடி சரிதானே கலா. உங்க தகவலுக்கு ரொம்ப நன்றி கலா.
''விடா முயற்ச்சி விஸ்வரூப வெற்றி''.
கலா
அழகோ அழகு.
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
கலை
கலை ரொம்ப அழகா இருக்கு..
வாழ்த்துக்கள்:)
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
அழகா இருக்கு
மிகவும் க்யூட்டான ஃபிங்கர் ரிங்! ரொம்ப அழகா இருக்கு கலா, நல்லா செய்திருக்கிங்க. வாழ்த்துக்கள்!!
அன்புடன்
சுஸ்ரீ
முசி
மிக்க நன்றி முசி :)
Kalai
அருள்
வருகைக்கும்,வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி அருள் :)
Kalai
சுஸ்ரீ
வருகைக்கும்,வாழ்த்துக்கும் மிக்க நன்றி சுஸ்ரீ :)
Kalai
கலை
சூப்பர்ப்! கொடுத்திருக்கும் விளக்கங்கள் & படங்கள் தெளிவாக இருக்கிறது.
- இமா க்றிஸ்
ஹாய் அழகா பண்ணி இருக்கீங்க
ஹாய் அழகா பண்ணி இருக்கீங்க தெர்மா கோலில் வீடு செய்வது எப்படி யாராவது எனக்கு கத்துக் கொடுங்களேன்
இறைவன் மிக உயர்ந்தவன்
sattin ring
hi friend super yenaukku ithu mathiri inraiya therium yappadi ithil serpathu theriayavillaiplease tell me