ஆதார் அட்டை - சென்னை

ஆதார் அட்டை பற்றி தெரிந்தவர்கள் தயவுசெய்து சொல்லவும்.

அன்புடன்
ஜெயா

ஆதார் அட்டை பற்றி தெரிந்தவர்கள் தயவுசெய்து சொல்லவும்.

அன்புடன்
ஜெயா

ஆதார் அட்டை is a like identity card central govt introduce this.in future its useful to all

ஆதார் அட்டை

இது தனி மனிதன் அடையாளம் - ஆதார் எண் ,

இது இப்ப ரொம்ப ரொம்ப முக்கியமான அடையாள அட்டை

இப்ப கேஸ்-க்கு ஆதார் எண் அவசியம் தேவை

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

இதை கண்டிப்பாக வாங்கியே ஆகணுமாம். இந்த நம்பர் வாங்கி, அதை நம்முடைய பாங்க் அக்கவுண்ட்டுடன் லின்க் செய்யணும்.

இனிமேல் காஸ் சிலிண்டர் வாங்கறப்ப, கிட்டத்தட்ட 900 ரூபாய் கொடுத்து வாங்கணும். மானியத் தொகை(கிட்டத்தட்ட 450 ரூபாய்) - நம்முடைய பாங்க் அக்கவுண்டில் 2-3 நாளுக்கப்புறம் கிரெடிட் ஆகும். இதற்கு ஆதார் எண் கண்டிப்பாக வேணும்.

ஆனா - இதை எப்படி வாங்கறதுன்னுதான் தெரியலை. இதோட மூணு நாலு தடவை, வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் கார்ப்பரேஷன் ஆஃபிஸுக்குப் போய்ட்டு வந்தாச்சு. 10 நாளுக்கப்புறம் வாங்க என்று தள்ளிப் போட்டுட்டே இருக்காங்க.

ஆதார் எண் வாங்கறதுக்கு, ஃபோட்டோ, கண் விழி ரேகை, விரல் ரேகை எல்லாம் பதிவு பண்ணனுமாம். அதுக்கு எப்ப, எங்க ஃபோட்டோ எடுப்பாங்கன்னு இன்னும் டிஸைட் பண்ணலியாம். ஒண்ணும் புரியல.

இதோட இன்னும் ஒண்ணு வேற சொல்றாங்க. ஆதார் அட்டை தேவைப்படாது, ஸ்மார்ட் கார்ட்னு ஒண்ணு இருக்கு, அதுதான் முக்கியம்னு.

தெளிவான தகவல் தெரியாம நாங்களும் குழம்பித்தான் போயிருக்கோம். வாங்கினவங்க - அவங்க அனுபவத்தை சொன்னால் உதவியாக இருக்கும்

அன்புடன்

சீதாலஷ்மி

தோழிகளுக்கு வணக்கம் :)
ஆதார் அடையாள அட்டை வழங்கும் விவரம், நாளேடுகளில் வெளி வருகிறது. எந்த பகுதி அதாவது மண்டலவாரியாக பிரித்து வழங்குகிறார்கள். ஒவ்வொரு வார்டுக்கும் 15 நாட்கள் வழங்கப்படுகிறது. தினசரியுடன் வரும் துணைநாளிதழில் மேற்கண்ட விவரங்கள் தெளிவாக வருகிறது.

தேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR)
கைரேகை/ விழித்திரை/ புகைப்படம் பதிவு செய்ய நடைபெறும் முகாம்.

என்னும் விவரம் அடங்கிய தாளினை வீடுதோறும் வந்து கணகெடுப்பு அதிகாரிகள் கொடுத்து செல்கின்றனர். இதனுடன், ரேஷன் கார்டு அல்லது பாஸ்போர்ட் ஆதாரமாக கொண்டு செல்லவேண்டும்.
இவற்றை காட்டி முன்பதிவு செய்து கொள்ளவேண்டும். காலை 5 மணிக்கே சென்று வரிசையில் நின்றால் முன்பதிவு செய்ய ஏதுவாக இருக்கும். சிலசமயங்களில் கூட்டம் அதிகமாக இருந்தால் முன்பதிவு செய்யமுடியாமல் போகவும் வாய்ப்புண்டு. ஒரு நாளைக்கு 250 பேருக்கு முன்பதிவு செய்கிறார்கள்.
ஞாயிறும் உண்டு. மேலும் விவரம் தெரிந்தால் நிச்சயமாக பகிர்ந்துகொள்கிறேன்.

ஓ சாரிங்க, வழக்கம் போல சொதப்பல், இது சென்னை மக்களுக்குனு பார்க்காம, கோவை நிலவரத்தை போட்டுட்டேன் :(

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

ஆதார் அட்டை இங்கு (சென்னையில்) வழங்கும்போது என்னுடைய‌ மகன் UK-ல் படித்துக்கொண்டிருந்ததால் அவனுக்கு மட்டும் வாங்கவில்லை. இப்பொழுது வந்துவிட்டான். ஆனால் எங்கு சென்று வாங்கவேண்டும் என்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் பகிர்ந்து கொள்ளவும்.

அன்புடன்
ஜெயா

அன்பு ஜெயா,

உங்க ஏரியாவுக்கு உண்டான கார்ப்பரேஷன் ஆஃபிஸ்ல கேளுங்க. அந்த அந்த ஏரியாவுக்குன்னு ஒரு இடம் ஒதுக்கி, ஃபோட்டோஸ், ரேகை பதிவு செய்யறாங்க.

அன்புடன்

சீதாலஷ்மி

மேலும் சில பதிவுகள்