சிம்பிள் கேர‌ட் பொரிய‌ல்

தேதி: May 9, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (3 votes)

 

கேரட் ‍ - 5 (அ) 6
துவ‌ர‌ம் ப‌ருப்பு - 2 மேசைக்க‌ர‌ண்டி
தேங்காய்த் துருவ‌ல் - 3 மேசைக்க‌ர‌ண்டி
காய்ந்த மிளகாய் -‍ 2
சாம்பார் தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
க‌டுகு - 1/2 தேக்க‌ர‌ண்டி
உளுத்தம்பருப்பு -‍ 1 தேக்கரண்டி
எண்ணெய் -‍ 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உப்பு தேவையான‌ அள‌வு


 

கேரட்டை நன்கு கழுவி விட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும். காய்ந்த மிளகாயை இரண்டாக கிள்ளி வைக்கவும்.

ஒரு பாத்திர‌த்தில் 1/2 க‌ப் த‌ண்ணீர் விட்டு, அதில் மஞ்சள் தூள், துவரம் பருப்பை போட்டு கொதிக்க விடவும். ப‌ருப்பு பாதி அள‌வு வெந்திருக்கும்போது, நறுக்கிய கேரட் துண்டுகளை போடவும். தேவையான உப்பு சேர்த்து கலந்துவிட்டு மூடிபோட்டு வேகவிடவும். (த‌ண்ணீர் அள‌வை அவ்வ‌ப்போது ச‌ரிப்பார்த்து தேவைப்பட்டால் சிறிது சேர்த்துக்கொள்ள‌வும். மிக‌வும் நிறைய‌ விட‌வேண்டாம். இதுபோல‌ செய்தால் காயை அப்படியே பயன்படுத்தலாம், த‌ண்ணீரை வடித்து ச‌த்துக்க‌ள் வீணாவதை தவிர்க்கலாம்.)

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுந்து, மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

பின்பு வேகவைத்த கேரட்டை தாளிப்பில் கொட்டி, சாம்பார் தூள் போட்டு வதக்கவும். உப்பு ச‌ரிப்பார்த்து தேவைப்ப‌ட்டால் மேலும் சேர்த்து பிரட்டி வேக விடவும்.

காய் முழுவதுமாக வெந்து சாம்பார்த்தூளின் பச்சை வாசம் போனதும், தேங்காய்த்துருவலை சேர்த்து பிரட்டி அடுப்பிலிருந்து இறக்கவும்.

சுவையான‌ சிம்பிள் கேர‌ட் பொரிய‌ல் த‌யார்!


மேலும் சில குறிப்புகள்