அரைக்கீரை வடை

தேதி: May 10, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (5 votes)

 

அரைக்கீரை - ஒரு கப்
உளுந்து + கடலைப் பருப்பு - அரை கப்
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 2
எண்ணெய் - பொரிக்க
உப்பு - தேவைக்கு


 

பருப்பை இரண்டு மணி நேரம் ஊற வைத்து, ஒன்றிரண்டாக நீர் விடாமல் அரைக்கவும்.
அரைத்த பருப்பு கலவையுடன் உப்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கீரையை சேர்க்கவும்.
அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து பிசைந்து, வடைகளாக தட்டி வைக்கவும்.
எண்ணெயை சூடாக்கி, தட்டிய வடைகளைப் பொரித்து எடுக்கவும்.
சுவையான அரைக்கீரை வடை தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

நல்ல மொரு மொரு வடை. அரைக்கீரைக்கு பதில் வேறு கீரை பாவிக்கலாமா?

அன்புடன்
சியாமளா

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின்,குழுவினர்க்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

ஷியாமளா,
அரை கீரை தான் இதற்க்கு சரியாக வரும்..
வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா