மட்டன் உப்புக்கறி

தேதி: May 10, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.7 (3 votes)

 

மட்டன் - கால் கிலோ
சின்ன வெங்காயம் - 150 கிராம்
காய்ந்த மிளகாய் - 4 (அ) 5 (காரத்திற்கேற்ப)
மிளகுத் தூள் - ஒரு தேக்கரண்டி
தாளிக்க
கடுகு, உளுந்தம் பருப்பு, சோம்பு, கறிவேப்பிலை


 

தேவையான அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி கடுகு, சோம்பு, உளுந்தம் பருப்பு சேர்த்து தாளிக்கவும்.
அதனுடன் கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து சிவக்கவிட்டு, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
பிறகு சுத்தப்படுத்திய மட்டன் துண்டுகளை சேர்க்கவும்.
அதில் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றவும்.
குக்கரை மூடி மட்டன் வேக தேவையான விசில் விட்டு இறக்கவும். தண்ணீர் வற்றி இருக்கும்.
பின் ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு வேக வைத்த மட்டனை சேர்த்து, அதில் மிளகுத் தூள் தூவி, கறிவேப்பிலை சிறிது சேர்த்து பிரட்டி இறக்கவும்.
இது சாம்பார், ரசம் சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அடுத்த முறை மட்டன் வாங்கினா அட்டம்ப்ட் அடிச்சுடுவோம் ;) சூப்பர்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வாவ் ....பார்க்கவே சூப்பரா இருக்குது...செய்து பார்க்கிறேன் ரேவ்ஸ்

வெள்ளிக்கிழமை விரதம். இப்படி அருமையான குறிப்பைப் பார்த்ததும் நாக்குத் தன் வேலையைக் காட்டிற்றுது. மூளையின் அறிவைக் கேட்கவில்லை.

அன்புடன்
சியாமளா

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணா &அறுசுவை குழுவினர்க்கு நன்றி

Be simple be sample

தான்க்ஸ் வனி.சீக்கிரம் செய்து பாருங்க..இது போல சிக்கன்லையும் செய்யலாம்

காயு கண்டிப்பா செய்து பாருங்க ..தான்க்ஸ்

சியாமளா உங தமிழ் அழகா இருக்கு..தான்க்ஸ்பா

Be simple be sample

ஆஹா.!! மட்டன் அருமைங் அக்காங் :-)

நட்புடன்
குணா

ஆஹா..அருமை...சூப்பர் ரேவ்ஸ்...அடுத்த முறை மட்டன் வாங்கினா இந்த முறையில ட்ரை செய்துடறேன்.வாழ்த்துக்கள்....

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

குணா தம்பிங் நன்றிங்.....

சுமி சீக்கிரம் செய்துட்டு சொல்லுங்கபா.தான்க்ஸ்

Be simple be sample

ரேவதி உப்புக்கறி செய்துட்டேன். மட்டன் கிடைக்கும் வரை எல்லாம் பொறுமை இல்லை :). அதனால் சிக்கனிலேயே செய்தேன். ரொம்ப ரொம்ப சிம்பிள் அன்ட் டேஸ்ட்டி. எனக்கு பூண்டு வாசனை பிடிக்கும் என்பதால் பூண்டு மட்டும் நசுக்கி சேர்த்தேன். ரொம்ப பிடிச்சுது. நன்றி ரேவதி!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அட செய்து பார்த்தாச்சா. ஆமா கவி எந்த மசாலா வாசமும் இல்லம நல்ல இருக்கும்பா. தான்க்ஸ் கவி :-)

Be simple be sample

அன்புள்ள‌ அக்க்காக்களுக்கு,
தாங்க்ஸ் என்ற‌ சொல்லுக்கு பதில் நன்றி என்ற‌ சொல்லை பயன்படுத்தினால், பதிவு இன்னும் அழகாக‌ இருக்குமே...!!!

அன்புடன்,
வீரமணி.

நல்ல விஷயம் சொல்லி இருக்கிறீர்கள்.
//அன்புள்ள‌ அக்க்காக்களுக்கு,// :-) அப்போ அண்ணாக்கள், தம்பிகள், தங்கைகள் எல்லோரும்!!
எல்லோருக்கும் சேர்த்து வேண்டுகோள் வைக்க வேண்டும் வீரமணி.
'மட்டன் உப்புக்கறி' குறிப்பின் கீழ் சொன்னதற்குப் பதில் எங்காவது பொதுவான இழையில் சொல்லியிருக்கலாம். இப்போது இரண்டு மூன்று அக்காக்கள் கண்களில் மட்டும் பட்டுவிட்டு பயனில்லாமல் உள்ளே போய் விடப் போகிறது. ;(

‍- இமா க்றிஸ்