தக்காளி,புளி இல்லா உணவுகள்

தோழிகளே அன்றாட உணவுகளில் தக்காளி,புளி சேர்க்காமல் என்ன மாதிரி உணவுகள் செய்யலாம்.தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்கள். காலை,மதியம்,மாலை,இரவு என்னென்ன செய்யலாம்.ப்ளிஸ் ஹெல்ப் பண்ணுங்க.

புளி தக்காளி சேர்க்காமல் நிறைய செய்யலாமே. சப்பாத்தி, வெஜ் குருமா, இடியாப்பம் வித் ஸ்ட்யூ, புட்டு, உப்புமா இதெல்லாம் செய்யலாம். இட்லி தோசையுடன் தயிர் சேர்த்த சட்னி சாப்பிடலாம்.

குழம்பு வகைகளில் எனக்கு தெரிஞ்சது சம்சோரி (http://arusuvai.com/tamil/node/5279), புளியில்லா தீயல் (http://www.arusuvai.com/tamil/node/5280) இந்த குறிப்பில் புளிக்கரைசல் சேர்க்காமல் காரம் குறைவாக செய்யலாம். புளி சேர்க்காமல் செய்யும் இது பத்தியக்குழம்பு என்பதால் எல்லோருக்கும் பிடிக்குமான்னு தெரியலை. ஆனால் எனக்கு பிடிக்கும் :)

பருப்புத்துவையல் செய்து சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். சுரைக்காய், சௌசௌ இவற்றுடன் பருப்பு சேர்த்து கூட்டு செய்யலாம். முட்டைகோஸ், வாழைத்தண்டு என எல்லா காய்கறிகளில் பொரியல், துவரன் எல்லாம் செய்யலாம்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

தயிர்,மோர் சாப்பிடக்கூடாது..எனக்கு தெரிந்த தோழிக்காக கேட்டேன்.ரொம்ப தேங்க்ஸ் கவி...பருப்பு துவையலுக்கு புளி வேண்டாமா கவி...

இந்த மாதிரி பத்தியம் சின்ன குழந்தைக்காக கவி...5 வயது குழந்தை...அதற்கு ஏற்றாற்போல் உணவு சொல்லுங்க கவி...

Expectation lead to Disappointment

குழந்தைக்குன்னா சம்சோரி கொடுக்கலாம். தக்காளி சேர்க்காமல் மிளகாய் வற்றல் பூண்டு சீரகம் தேங்காய்(விரும்பினால்) அரைத்து பெருங்காயம் சேர்த்து வேக வைத்த துவரம்பருப்புடன் சேர்த்து கொதிக்க வைத்து சாதத்தில் ஊற்றி நெய் சேர்த்து பிசைந்து கொடுக்கலாம்.

பருப்புத்துவையலுக்கு புளி சேர்க்காமல் செய்யலாம்.

இடியாப்பம் தேங்காய்ப்பால், ஆப்பம் தேங்காய்ப்பால் கொடுக்கலாம்

எலுமிச்சை சேர்த்து ரசம் வைக்கலாம்.

இன்னும் ஞாபகம் வரும் போது சொல்கிறேன் பா

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

idli, toor dal, sadham, poricha kootu,thayir sadham. mangai sadham. mangai pachadi.chapathi. wheat rava with vegetable - uppuma. I am not sure why you want to avoid tomato and tamrind for a 5 year old but still I have shared some food items that came to my mind. You can also make kootu with thruvaram paruppu. you can give sundal with the lentils boiled and mashed nicely. Use perungayam for dals and sundals. Use jeeragam powder in kootu. Add little Ghee..this will help in digestion.I put a pinch of Omam (thalikkum pozhudhu). you can avoid oil and use ghee.carrot rice kids will like.

சம்சோரி முட்டை வைத்து தான் செய்ய வேண்டுமா?வேறு எந்த காய்கறிகள் சேர்க்கலாம்.பருப்பு துவையல் புளி இல்லாமல் செய்வது எப்படி? மேலும் எலுமிச்சை ரசம் செய்ய தக்காளி இல்லாமல் செய்முறை எப்படி என்பதும் உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது கூறவும்.
நீங்கள் சொன்னது மிகவும் உபயோகமாக இருக்கும்.நன்றிகள் பல..

Expectation lead to Disappointment

thanks for your valuable tips...the child is taking ayurvedic medicine for his cough....so doctor told to avoid mango,yoghurt,buttermilk,tomato and tamarind...along with some fruits...then if we take ayurvedic medicine it is help to get rid of cough which he was suffering for so many days.can u tell me how to make carrot rice...
if u tel some other items also plz share with me....doctor told to follow for maximum 6 months...thanks...

Expectation lead to Disappointment

மேலும் சில பதிவுகள்