பட்டிமன்றம் 89- தம்பதிகளுக்குள் வரும் பிரச்சினையை பெற்றோரிடம் கொண்டு செல்ல வேண்டுமா ? வேண்டாமா?

அன்பு தோழி(ழர்)களுக்கு வணக்கம். நம்ப அறுசுவை பஞ்சாயத்து (பட்டிமன்றம்தேன்) நாட்டாமையாக மீண்டும் நானே வந்துட்டேன் :). அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க. வேற வழியே இல்லை :)

நல்லா டிஷ்யூம் டிஷ்யூம் போடற தலைப்பாக இருக்கணுமே அப்பதானே நாரதருக்கு சிண்டு முடியும் வேலை சுலபமாக இருக்கும்னு பட்டிமன்ற தலைப்புகள் இழையில் "நாராயணா நாராயணா" ன்னு சொல்லிக்கிட்டே சுத்தி வந்தால் கரெக்டா சண்டையை பற்றியே ஒரு தலைப்பை நம் தோழி உதிரா கொடுத்திருந்தாங்க. கபால் னு தூக்கிட்டு வந்துட்டேன். நாரதர் மாதிரியே ஈரேழு உலகமும் சுற்றாமல் நேரடியா தலைப்பை சொல்லுன்னு நீங்க சொல்றது கேட்குது. சண்டை போடறதுக்கு என்னா அவசரம். தலைப்பு இதுதான்.....

********** கணவன் மனைவிக்குள் வரும் பிரச்சினையை பெற்றோரிடம் கொண்டு செல்ல வேண்டுமா ? வேண்டாமா? .*********

வாங்க வாங்க சீக்கிரம் உங்கள் வாதப் பூக்களை அள்ளித் தெளியுங்கள். எடுத்து மாலையாக கோர்க்க காத்திருக்கிறேன்.

பட்டிமன்ற விதிமுறைகளையும் அறுசுவையின் விதிமுறைகளையும் மீறாமல் வாதங்களை எடுத்து வைக்க வேண்டும் என்பதை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்,

புதியவர்களுக்காக விதிமுறைகள் இங்கே.....

யாரும் யாரையும் பெயரிட்டு அழைக்கக்கூடாது.

அரசியல் அறவே பேசக்கூடாது.

அரட்டை அறவே கூடாது

ஜாதி,மதம் பற்றி பேசக்கூடாது.

நாகரீக பேச்சு மிகமிக அவசியம்.

அறுசுவையின் எல்லா விதிகளும் இந்த பட்டிக்கும் பொருந்தும்.

நன்றி வனி! அடிப்படையான அன்பும் புரிதலும் இல்லைன்னா அந்த உறவை பெரியவங்க என்னதான் ஃபெவிக்கால் போட்டு ஒட்டினாலும் ஒட்டாதுதானே :)

அடுத்த பட்டியில் கூட்டணி அமைச்சு வழக்கம் போல கூவலாம் வனி :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

இங்கே தம்ஸ் அப் காட்டமுடியலயென்னு நானும் நினைச்சேன்..அதே வார்த்தை வனிட்டயிருந்தும் வந்ததும் புல்லரிச்சுடுச்சு சேம் ப்ளட் திஸ் டைம்..
(y) கவி :)

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

:v சேம் பின்ச் (y)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

காலை வணக்கம் ! உங்களின் தீர்ப்பு மிக அருமை அருமை. புரிதல் இல்லாத வாழ்க்கை என்ன வழக்கை. என்னதான் பெரியவங்க சொல்லி சொல்லி வாழ்ந்தால் அந்த வாழ்கையில் எந்த ஒரு பாசமும் அன்பும், பிடிப்பும் இல்லாததாகவே இருக்கும். உப்பு சப்பு இல்லாமல் இருக்கும் . எந்த ஒரு இன்ப துன்பத்தையும் ரசிச்சி அனுபவிக்க முடியாது .
சூபரோ........... சூபருங்கோ.............. நாரதர் கழகம் நன்மையிலேயே முடிந்தது.

நீ உனக்காக வாழ வேண்டும் .

என்றும் அன்புடன்
சங்கீதா.

அன்பு கவிசிவா ,

இளம் தம்பதிகள் மட்டுமல்ல எல்லா தம்பதிகலுமே படிக்க வேண்டிய அற்புதமான தீர்ப்பு. வீட்டு விசேஷத்தால் பதிவு இன்றைக்கு தான் போட முடிந்தது . சாரிப்பா !!

உண்மையில் ஜெயித்த அணி பக்கமே வாதாட விருப்பம. ஏனென்றால் சொந்த அனுபவம் மற்றும் பார்த்த விஷயங்கள் தாங்க. பட் இங்கே அணி பலம் கூட்ட எதிரணியில் இருந்தேன். பாதியிலே என்னோட சரக்கெல்லாம் தீர்ந்து பொய் காலியான சமயத்திலே ,சீதா , மற்றும் தாமரை அசத்தினாங்க .வாழ்த்துக்கள்.

உங்க தீர்ப்பு, எப்பவும் போலே சூப்பர் !!
எதிரணி தோழிகள் எக்கச்சம்மா சிக்சர் அடிச்சாங்க . உங்களுக்கும் வாழ்த்துக்கள் ,

தாமரை உங்களுக்கு என் நன்றிகள்.

கவிசிவா, வழக்கம் போல் அருமையான தீர்ப்பு. கணவன் மனைவி உறவு என்பது மற்ற உறவு போல் இல்லை, இதில் நடுவில் வேறு ஒருவரை, பெற்றோராக இருந்தாலும் கூட வர விடுவது சரி இல்லை...

நல்ல தீர்ப்பு :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

மேலும் சில பதிவுகள்