பட்டிமன்றம் 89- தம்பதிகளுக்குள் வரும் பிரச்சினையை பெற்றோரிடம் கொண்டு செல்ல வேண்டுமா ? வேண்டாமா?

அன்பு தோழி(ழர்)களுக்கு வணக்கம். நம்ப அறுசுவை பஞ்சாயத்து (பட்டிமன்றம்தேன்) நாட்டாமையாக மீண்டும் நானே வந்துட்டேன் :). அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க. வேற வழியே இல்லை :)

நல்லா டிஷ்யூம் டிஷ்யூம் போடற தலைப்பாக இருக்கணுமே அப்பதானே நாரதருக்கு சிண்டு முடியும் வேலை சுலபமாக இருக்கும்னு பட்டிமன்ற தலைப்புகள் இழையில் "நாராயணா நாராயணா" ன்னு சொல்லிக்கிட்டே சுத்தி வந்தால் கரெக்டா சண்டையை பற்றியே ஒரு தலைப்பை நம் தோழி உதிரா கொடுத்திருந்தாங்க. கபால் னு தூக்கிட்டு வந்துட்டேன். நாரதர் மாதிரியே ஈரேழு உலகமும் சுற்றாமல் நேரடியா தலைப்பை சொல்லுன்னு நீங்க சொல்றது கேட்குது. சண்டை போடறதுக்கு என்னா அவசரம். தலைப்பு இதுதான்.....

********** கணவன் மனைவிக்குள் வரும் பிரச்சினையை பெற்றோரிடம் கொண்டு செல்ல வேண்டுமா ? வேண்டாமா? .*********

வாங்க வாங்க சீக்கிரம் உங்கள் வாதப் பூக்களை அள்ளித் தெளியுங்கள். எடுத்து மாலையாக கோர்க்க காத்திருக்கிறேன்.

பட்டிமன்ற விதிமுறைகளையும் அறுசுவையின் விதிமுறைகளையும் மீறாமல் வாதங்களை எடுத்து வைக்க வேண்டும் என்பதை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்,

புதியவர்களுக்காக விதிமுறைகள் இங்கே.....

யாரும் யாரையும் பெயரிட்டு அழைக்கக்கூடாது.

அரசியல் அறவே பேசக்கூடாது.

அரட்டை அறவே கூடாது

ஜாதி,மதம் பற்றி பேசக்கூடாது.

நாகரீக பேச்சு மிகமிக அவசியம்.

அறுசுவையின் எல்லா விதிகளும் இந்த பட்டிக்கும் பொருந்தும்.

வாங்க உஷா! வரும் போதே சூடான வாதங்களுடன் வந்திருக்கீங்க :)

தங்களுக்குள்ளே பேசித் தீர்த்துக்கறோம்னு பெரியவர்களிடம் சொல்லாமல் இருப்பதால்தான் முதிர்ச்சி இல்லாமல் விவாகரத்து கேட்டு கோர்ட் படியேறும் நிலைமைக்கு தம்பதிகள் போயிடறாங்க. அதனால் பிரச்சினையை கண்டிப்பாக பெரியவர்களிடம் சொல்லவேண்டும் அப்படீங்கறாங்க உஷா. யோசிச்சுப்பார்த்தால் நியாயமாத்தேன் தெரியுது,

அடக்கடவுளே! வந்ததுமே நடுவரை குழப்பி விட்டுட்டாங்களே!!!

//முதலில் பெற்றோர்கள் பிரச்சினையை பெரிது பண்ணிடுவாங்க என்ற தவறான கண்ணோட்டத்தை முதலில் எதிரணியினர் எக்ஸ்ப்ளைன் பண்ணனும் . எந்த பெற்றோராவது பிள்ளைங்க வாழ்கை கெட்டு போவணும்னு நினைப்பாங்களா//

வாங்கப்பா வாங்க வந்து பதில் சொல்லுங்க. எந்த பெற்றோராவது பிள்ளைகள் வாழ்க்கையை கெடுக்க நினைப்பாங்களா? நியாயமான கேள்வியை எடுத்து வச்சிருக்காங்க. இப்போ நீங்கதான் நடுவருக்கு விம் போட்டு விளக்கி சொல்லணும். போடற விம்மை நடுவர் கண்ணுல மட்டும் தேய்ச்சுப்புடாதீங்கோ :)

//சும்மா சீரியல் லில் வரும் சம்பவங்கள் அடிப்படையில் யோசிக்கிறாங்க . ஒரு வேளை அந்த பெண் தன அம்மாவிடம் பகிர்ந்து கொண்டால், இதெல்லாம் இயல்பு தான் இதை மனசுக்குள்ளே கொண்டு செல்லாதே என்று சொல்ல்லியிருக்கலம் அதற்கு வாய்ப்பே கொடுக்காமல் , சிக்கல் ச மேல சிக்கல் பண்ணிக்கிட்டு , திருமண உறவின் ஆரம்ப காலங்களிலேயே , தவறான முடிவுகள் எடுக்கும் இவர்கள் , முட்டாளுங்க தாங்க. //

சும்மா சீரியல் பார்த்துக்கிட்டே முடிவு எடுக்காமல் அப்பா அம்மாகிட்ட பேசி தெளிவு படுத்திக்கறதுதான் புத்திசாலித்தனம்னு சொல்றாங்க.

கலக்கலான வாதங்களுடன் தொடர்ந்து வாங்க உஷா.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஹாய் எதிரணி நண்பிகளே அனைவருக்கும் எதிரான வணக்கமுங்கோ
நல்லாத்தான் பேசுறிங்க எதை பேசினாலும் நியாமாக பேசுங்கப்பா
வாழ்க்கைல நடக்கறதும் நடைமுறைல இருகரதுமா பேசுங்கள் .
கணவர் 1 தப்பு செய்கிறார் அதனால் கணவன் மனைவிக்குள் சண்டை வருகிது. மனைவி இதனை உடனடியாக தனது பெற்றோரிடம் பிரச்னையை கூறும்போது உடனே என்ன நடக்கும் பெண் வீட்டில் இருப்பவர்கள் நீ எப்படி என் பொண்ணுகிட சண்டை போடலாம் அவளை குறை கூறலாம் என்று பேசி கணவன் பெற்றோரிடம் உன் பையனை நீ வளர்த்த லட்சணம் இதுதானா என்று கேட்க அதற்கு கணவன் வீட்டார் பதில் கூற சண்டை பெரிதாகும்.
ஒருவழியா சமாதானம் ஆகி வந்தாலும் மாமியார், மருமகள் உறவு எவ்வாறு இருக்கும் என்பதை யோசித்து பாருங்கள்.
கணவன், மனைவி வீட்லும் மனைவி கணவன் வீட்லும் அவர்களின் உறவு முறை சிறப்பாக இருக்காது. அப்படியே இருந்தாலும் அது உதடலவிலே தான் இருக்கும்.
இதனால் அனைவரின் உறவும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டேதான் வரும் .
இப்படிலாம் உங்க வீட்ல பேசினாங்களே என்று சிறு சிறு விசயத்திற்கு கூட இருவரும் ஒருவரை ஒருவர் குறை கூறி கொண்டேதான் இருப்பார்கள்.
இதுவே கணவன் மனைவி மட்டும் இனிமையாக பேசி முடிவெடுக்கும்போது ஏவ்வளவு அருமைய இருக்கும்.
நம்மை பற்றி அடுத்தவரிடம் நம் மனைவியோ/கணவனோ கூறவில்லை என்றால் நாம் இப்படிலாம் பேசினோம் ஆனால் அதை அவள்/அவன் 3ஆவது ஆளிடம் கூறவில்லை அதனால் கணவனுக்கு மனைவி வீட்டிலும், மனைவிக்கு கணவன் வீட்டிலும் நல்ல மாறியதும் அன்பும், பாசமும் கிடைக்கும். கணவன் மனைவிக்குள் பாசம் பொங்கும்.

எனவே நடுவரே நீங்களும் நம்ப எதிரணியும் நன்கு யோசனை செய்து உங்கள் பெற்றோர் மற்றும் மாமனார் மாமியாரை மனதில் வைத்து பதில் கூறுங்கள்.

நீ உனக்காக வாழ வேண்டும் .

என்றும் அன்புடன்
சங்கீதா.

உஷாராக உள்ள உஷாவே வணக்கம்
பெரியவர்களிடம் கூறி முடிவு எடுத்து அவங்க என்னதான் சமாதானம் செய்து வைத்தாலும் அது இனிமையா இருக்காது. வெளி உலக வாழ்கைக்கு மட்டுமே அவர்களின் வழக்கை அமையும். பெண் வீட்டிலோ கணவன் வீட்டிலோ அவர்களின் சொந்தபந்தங்ககுகாக முடிவுஎடுப்பார்கள்.
1. பெரியவர்களிடம் சொல்லும்போது அவர்கள் பாசத்தில் இங்க இருந்து கஷ்டப்பட வேண்டாம் நீ நம்ப வீட்ல வந்து இரு என்று சொல்வார்கள்.
இது அழகா?
2. கடைசியா என்னதேரியுமா சொல்லுவாங்க கல்லானாலும் கணவன் என்ன தப்பு செய்தாலும் நீதான் போருத்துபோகணும்னு சொல்லுவாங்க.

***2பேர் பேசி முடிவெடுக்கும்போது இனிமேல் இப்படி தப்பு செய்ய வேண்டாம் நானும் சண்டை போடல நீயும் சண்டை போடாத. ஓகேவா. சரி வா கோயிலுக்கு போகலாம் இல்ல வா பீச்க்கு போகலாம் என்று சண்டை இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.***

நீ உனக்காக வாழ வேண்டும் .

என்றும் அன்புடன்
சங்கீதா.

நடுவரே,
பெற்றோருக்கு தெரியாமல் சமாளிப்போம்னு சொல்லுறாங்களே நம்ம எதிரணியினர்.எப்படி தெரியுமா?பிஞ்சில் கவனியாமல் முற்றியதும் கோர்ட்டு கேஸுன்னு போவாங்க.இது நல்லாவா இருக்கும் நடுவரே.....?
பவுடர் எடுத்து வைக்கலை,குழம்பு சரியில்லைங்கறது பிரச்சனைகிடையாது நடுவரே...இது புரிதலின்மை...:(
மனம் வேறுபட்டு சிந்தனை வேறுபடும்போதே பிரச்சனை வளருகிறது,பெரியோர்கள் நம் வயதை கடந்து வந்தவர்கள் எதுமாதிரி சிக்கல்கள் குடும்ப வாழ்வில் வரும்னு நன்கு தெரிந்தவர்கள்......நாம கத்து குட்டிங்க,அப்படி இருக்க அனுபவம் மிக்க பெற்றோரிடம் பிரச்சனையை கூறி அதை சரியாக அனுகும் முறையையோ அல்லது அதற்கான தீர்வையோ பெறுவதில் என்ன சங்கடம் இருக்க முடியும்....?
அன்பு நடுவரே மீண்டும் வருகிறேன்....

நடுவரே கணவன் மனைவி பிரச்சினையை பெற்றோரிடம் சொல்லிவிட்டால் விவாகரத்தே ஆகாமல் இருக்கும் என்பது போல் உள்ளது எதிர் அணியின் வாதம்,இன்றைக்கு இருக்கும் கணவன் மனைவி பிரச்சினையில் பாதி இவர்கள் இருவர்க்கும் இருப்பது, மீதி பெற்றோரிடம் சொல்லி ஒருவரை ஒருவர் மட்டப்படுத்தி கொண்டு பிரச்சினையை கிளரி பெரிதாக்குவது ,இதனால் வரும் ஏகோ ,
ஆரம்பத்திலேயே கொஞ்சம் திருமனமான புதிதில் அப்படித்தான் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள கடினமாக இருக்கும்,ஒருவர் கொஞ்சம் விட்டு கொடுத்தால் அடுத்தவர் தானாக புரிந்து கொள்வார் அதை விட்டு விட்டு எல்லாத்துக்கும் பெற்றோரிடம் போனால் பென்ன பெதவங நம்ம பொன்ன மருமகன் கொடுமை பன்ரனே இவ்லோ கெட்டவனு தெரியாம பொன்ன கொடுத்துட்டோமே நு ஒரு கெட்ட அவிப்ராயத்தை நாமே வளத்துடரோம்,அதெ போல் பையன பெத்தவங்க கிட்ட சொன்னா சரியான ராக்ஷ்ஷியா இருக்காலே என் பையன் வாழ்க்கை போச்சேனு அவங பொலம்பி இருகிர கொஞ்ச நஞ்சம் நல்ல பேரும் போயிடும் அத விட யாருகிடயும் சொல்லாம இவங்க ரெண்டு பேர் குள்ளமட்டும் இருந்தா தானா பிரச்சினை வந்து வந்து சரியாகும்,அத விட்டுடு இவங்க அவங்க போனா இன்னும் பெரிசாகும்,அதுக்கு சேத்து வெச்சு நம்ம தான் அழனும்

பிரச்சினையை பெரியவர்களிடம் சொன்னால் பிரச்சினை தீர்ந்த பின்னரும் மனக்கசப்பு இருக்கும்னு சொல்றாங்க. இதுக்கு என்ன பதில் வச்சிருக்கீங்கப்பா?

//இதுவே கணவன் மனைவி மட்டும் இனிமையாக பேசி முடிவெடுக்கும்போது ஏவ்வளவு அருமைய இருக்கும்.//

ம்ம்ம் கேட்கவே நல்லாருக்கே :)

//2பேர் பேசி முடிவெடுக்கும்போது இனிமேல் இப்படி தப்பு செய்ய வேண்டாம் நானும் சண்டை போடல நீயும் சண்டை போடாத. ஓகேவா. சரி வா கோயிலுக்கு போகலாம் இல்ல வா பீச்க்கு போகலாம் என்று சண்டை இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.***//

கணவர் பர்சுக்கு வேட்டு வச்சதும் எல்லா பிரச்சினையும் சரியாகிடும் இதுக்குப் போய் பெரியவர்களை கஷ்டப்படுத்தணுமான்னு கேட்கறாங்க. வாங்க வந்து பதில் சொல்லுங்க.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

//.நாம கத்து குட்டிங்க,அப்படி இருக்க அனுபவம் மிக்க பெற்றோரிடம் பிரச்சனையை கூறி அதை சரியாக அனுகும் முறையையோ அல்லது அதற்கான தீர்வையோ பெறுவதில் என்ன சங்கடம் இருக்க முடியும்....?//

அனுபவம் உள்ளவர்களின் ஆலோசனையை கேட்டுப் பெறுவதில் என்ன தவறு நல்லதுதானே அப்படீங்கறாங்க ரேணுகா. சரியாத்தேன் தோணுது.
அதெல்லாம் சரியாகாதா.... அப்படீன்னா ஏன்னு வந்து விளக்கம் கொடுங்க. புரிஞ்சுக்கரேன் :)

//பிஞ்சில் கவனியாமல் முற்றியதும் கோர்ட்டு கேஸுன்னு போவாங்க.இது நல்லாவா இருக்கும் நடுவரே.....//

பிரச்சினையின் ஆரம்பத்துலயே பெரியவர்கள் ஆலோசனையை கேட்காமல் முற்ற விட்டு கோர்ட்டு கேஸ் னு அலைவது தேவையான்னு கேட்கறாங்க.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கல்யானம் ஆன புதிதில் புரிதல் இன்மையால் சில பிரச்சினைகள் வரும். உடனே பெரியவர்களிடம் சொன்னால் துணையை பற்றிய அவர்களுக்கு தப்பான அபிப்ராயம் வந்து விடும். தேவையான்னு கேட்கறாங்க. இதுவும் சரியாத்தான் தெரியுது.

கடவுளே ரெண்டு பேர் சொல்றதும் நியாயமாத் தெரியுதே... நான் என்ன பண்ணப் போறேனோ??!!!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

தோழிகளே! பட்டிமன்றத்தில் யாரும் யார் பெயரையும் குறிப்பிட்டு வாதிடக் கூடாது என்பது விதிமுறை. நடுவருக்கு மட்டுமே அந்த உரிமை :)

பொதுவாக "எதிரணியினர்" என்ற சொல்லையே பயன்படுத்தினால் போதுமானது.

இன்னொரு விஷயம்... பட்டிமன்ற வாதங்களை யாரும் பெர்சனலாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நமது தோழி கூறுவதை நான் முற்றிலும் மறுக்கிறேன் .
குடும்பத்தில் எது நடந்தாலும் அதில் மிகவும் பதிக்கபடுவதும் கெட்ட பெயர் வருவதும் பெண்களுக்கே. நமது இந்திய பெண்கலுக்கு அது அழகல்ல. பெண் குடும்ப விஷயத்தை வெளியில் சொல்ல கூடாது. அதுவே நமது கலாசாரம் .
1பிரச்சனை வெளியில் போனால் அது குடும்பத்தைய கேவலபடுத்தும்
2பெரும் மட்டும் பேசும் போது ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் வாய்ப்பும் விட்டுகொடுக்கும் மனபாண்மையும் ஏற்படும்.
பிரச்சனைகள் வருவது புரிந்து கொள்ளாததனால் மட்டுமே.
பேசும்போது புரியும்.

நீ உனக்காக வாழ வேண்டும் .

என்றும் அன்புடன்
சங்கீதா.

மேலும் சில பதிவுகள்