பட்டிமன்றம் 89- தம்பதிகளுக்குள் வரும் பிரச்சினையை பெற்றோரிடம் கொண்டு செல்ல வேண்டுமா ? வேண்டாமா?

அன்பு தோழி(ழர்)களுக்கு வணக்கம். நம்ப அறுசுவை பஞ்சாயத்து (பட்டிமன்றம்தேன்) நாட்டாமையாக மீண்டும் நானே வந்துட்டேன் :). அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க. வேற வழியே இல்லை :)

நல்லா டிஷ்யூம் டிஷ்யூம் போடற தலைப்பாக இருக்கணுமே அப்பதானே நாரதருக்கு சிண்டு முடியும் வேலை சுலபமாக இருக்கும்னு பட்டிமன்ற தலைப்புகள் இழையில் "நாராயணா நாராயணா" ன்னு சொல்லிக்கிட்டே சுத்தி வந்தால் கரெக்டா சண்டையை பற்றியே ஒரு தலைப்பை நம் தோழி உதிரா கொடுத்திருந்தாங்க. கபால் னு தூக்கிட்டு வந்துட்டேன். நாரதர் மாதிரியே ஈரேழு உலகமும் சுற்றாமல் நேரடியா தலைப்பை சொல்லுன்னு நீங்க சொல்றது கேட்குது. சண்டை போடறதுக்கு என்னா அவசரம். தலைப்பு இதுதான்.....

********** கணவன் மனைவிக்குள் வரும் பிரச்சினையை பெற்றோரிடம் கொண்டு செல்ல வேண்டுமா ? வேண்டாமா? .*********

வாங்க வாங்க சீக்கிரம் உங்கள் வாதப் பூக்களை அள்ளித் தெளியுங்கள். எடுத்து மாலையாக கோர்க்க காத்திருக்கிறேன்.

பட்டிமன்ற விதிமுறைகளையும் அறுசுவையின் விதிமுறைகளையும் மீறாமல் வாதங்களை எடுத்து வைக்க வேண்டும் என்பதை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்,

புதியவர்களுக்காக விதிமுறைகள் இங்கே.....

யாரும் யாரையும் பெயரிட்டு அழைக்கக்கூடாது.

அரசியல் அறவே பேசக்கூடாது.

அரட்டை அறவே கூடாது

ஜாதி,மதம் பற்றி பேசக்கூடாது.

நாகரீக பேச்சு மிகமிக அவசியம்.

அறுசுவையின் எல்லா விதிகளும் இந்த பட்டிக்கும் பொருந்தும்.

தெரியாமல் பெயரை உபயோகித்துவிட்டேன்.

நீ உனக்காக வாழ வேண்டும் .

என்றும் அன்புடன்
சங்கீதா.

வணக்கம் நடுவரே, நான் எந்த பக்கம் என்பதை ஒரு சிறு கதை மூலமாக சொல்ல விரும்புகிறேன்.
ஒரு நாட்டின் அரசர் ஓர் அறிவிப்பை வெளியிட்டார்.
"நாட்டில் உள்ள முதியவர்களை எல்லாம் கொல்ல வேண்டும். அவர்கள் இந்நாட்டிற்கும் மற்றவர்களுக்கும் பாரம். அவர்களால் இந்நாட்டிற்கு எந்த பயனும் இல்லை" என்பதாகும்
உத்தரவின் படி எல்லோரும் கொல்லப்பட்டனர் ஒருவரைத் தவிர, ஒரு இளைஞன் தன் தாத்தாவின் மேல் மிகுந்த பிரியமுடையவன். தன் தாத்தாவை ஒரு சாக்கு பைக்குள் மறைத்து வைத்தான்.
அரசர் தன் தலைநகரை வேறு இடத்திற்கு மாற்ற விரும்பி அனைவரையும் தன்னுடன் பயணிக்க வைத்தார். வழியில் ஒரு ஆறு இருந்தது. ஆற்றிற்கு அடியில் ஒரு பெரிய தங்க கோப்பை தெரிந்தது. அதனை எடுத்தது வர உத்தரவிட்டார். ஆற்றில் வீரர்கள் முழ்கி தேடினர். ஆனால் எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை. அரசருக்கு அதை விட மனசில்லை. கோப்பையை எடுத்து தருபவர்களுக்கு 1000 பொற்காசுகள் என்று உத்தரவிட்டார். ஆனால் யாராலும் எடுத்து வர முடியவில்லை.
இரவில் அந்த இளைஞன் தன் தாத்தாவிற்கு உணவு கொடுக்கும் போது விஷயத்தை கூறினான். அதற்கு தாத்தா ஆற்றுக்கு கீழே தெரிவது மலை உச்சியின் மேலே தெரியும் தங்க கோப்பையாகும் என்றார். உடனே அந்த இளைஞன் மலை உச்சியின் மேலே சென்று தங்க கோப்பையை எடுத்து வந்து அரசரிடம் கொடுத்தார். அரசர் வியப்படைந்து எப்படி இதை செய்தாய் என்றதற்கு ஆழ்ந்த அனுபவம் வாய்ந்த என் தாத்தா கற்று கொடுத்தார் என்றார்.

நடுவரே கண்டுபிடித்து விட்டீர்களா!!!
ஆழ்ந்த அனுபவம் பிரச்சனைகளின் போது துணை செய்யும் என அடித்துப் பேசி (உங்களையல்ல நடுவரே ) அமைகிறேன்

அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை

மன்னிப்பெல்லாம் வேண்டாம் சங்கீதனா. தெரியாமல்தானே செய்தீர்கள் பரவாயில்லை :)

//2பெரும் மட்டும் பேசும் போது ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் வாய்ப்பும் விட்டுகொடுக்கும் மனபாண்மையும் ஏற்படும்.//

என்ன பிரச்சினைன்னாலும் பெரியவர்களிடம் போனால் தம்பதிகள் எப்படி பேசி ஒருவருக்கொருவர் புரிந்து கொள்வார்கள் என்று கேட்கறாங்க.... ஆமாப்பா எப்பதான் புரிஞ்சுப்பாங்க எப்பவுமே பெரியவங்க கூட இருக்க முடியுமா... பதில் சொல்லுங்கப்பா

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

வாங்க தாமரை செல்வி! வரும்போதே குட்டிக் கதையுடன் வந்துட்டீங்க.

//ஆழ்ந்த அனுபவம் பிரச்சனைகளின் போது துணை செய்யும் என அடித்துப் பேசி (உங்களையல்ல நடுவரே ) அமைகிறேன்//

ஆழ்ந்த அனுபவம்தான் பிரச்சினைகளை சுலபமாக தீர்க்க உதவும் அதனால் பெரியவர்களை நாடவேண்டும் என்கிறார்.

நல்லவேளை என்னை அடிக்காமல் விட்டீர்களே :)

விரிவான வாதங்களுடன் மீண்டும் வாங்க தாமரைசெல்வி.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

எல்லாவற்றையும் நமக்காகவே செய்யும் நம் பெற்றோர்களுக்கு நம் பிரச்சனையின் ஆழம் புரியாதா. ஆ.....ஊ...ன்னா விவாகரத்து என்று செல்வதற்கு இவர்களின் அனுபவமின்மையே காரணமாகும்.

"தோல்வி அனுபவத்தை தரும்" என்பார்கள்.

எல்லா தோல்விகளிலும் அடுத்து வெற்றி பெற ஒரு வாய்ப்புண்டு. ஆனால் வாழ்க்கையில் ஒரு முறை தோல்வியடைந்து கற்றுக் கொள்ளும் அனுபவத்தால் உங்கள் இழந்த வாழ்க்கையை திரும்ப பெற இயலுமா.

இதையே அனுபவசாலிகளான பெற்றோர்களிடம் உங்கள் பிரச்சனைகளை கூறியிருந்தால் எப்போதோ உங்கள் பிரச்சனை முடிந்திருக்கும்.

திருமணத்திற்கு முன்பு எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு காண பெற்றோரை சார்ந்திருக்கும் நாம், திருமணத்திற்கு பிறகு அவர்களை என்னவோ ஒன்றும் தெரியாதவர்களாகவும், அந்நியராகவும் பார்க்கிறோம். நம் திருமணத்தின் முன்பும், பின்பும் அவர்கள் ஒரே மாதிரித்தான் இருக்கிறார்கள். நம் தான் அவர்களை பாரமென்று கருதி சுதந்திரம் இப்போதுதான் கிடைத்தது என்பது போல் பறக்க ஆரம்பிக்கிறோம். விளைவு அனுபவமின்மையால் சிறு ஊடல் கூட பூதாகரமாய் வளர்ந்து விடுகிறது.

பிள்ளைகளின் மன வாட்டத்தையும், கோபத்தையும் உங்களின் முகத்தை வைத்தே அவர்களால் கண்டுபிடிக்க இயலாது என்று நினைக்கிறீர்களா? ஆனால் உங்களின் பிரச்சனைகளை சொல்லாமல் தவிர்க்கும் போது அவர்கள் அடையும் வேதனை சொல்லி மாளாது. நீங்கள் நினைக்கலாம் அவர்களை கஷ்டப்படுத்த கூடாது என்பதற்காக நாங்கள் சொல்லவில்லை என்று....ஆனால் நீங்கள் அவர்களை மௌனத்தினால் குத்தி காயப்படுத்தி கொண்டிருக்கிறீர்கள். பிரச்சனைக்கு தீர்வாக இருக்கும் பெற்றோர்களிடம் பிரச்சனையின் உண்மை நிலையை கூறுங்கள். கண்டிப்பாக உங்களுக்கு தீர்வு நிச்சயம்.
ஏனென்றால் "பெற்றோர் நம் கடவுள்கள்"

அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை

இதோ நடுவரே வந்துட்டே.....................ன்
நான் 1 குடும்பத்துல நடந்த உண்மை சம்பவத்தை சொல்றேன் கேளுங்க 2பெரும் காதலிச்சி திருமணம் செய்துகிட்டாங்க . 2வீட்லயும் சம்திசங்க சொந்தகாரர்கள். கல்யாணம் ஆனது முதல் பிரச்சனைதான் . பெற்றோருக்கு தெரியாமல் இருந்தவரை சண்டை பின் சமாதானம் என்று இருந்தது . பிறகு 1 காலகட்டத்தில் ஒருவர் வீட்டில் ஒருவர் கூறினார். 2 பெற்றோர் பஞ்சாயத்து வைத்து ஊருக்கே தெரிந்தது. பிறகு பெணின் பெற்றோர்கள் அவர்கள் தங்கீருந்த வீட்டிற்கு சென்று இனி இது ஒத்து வராது என்று வாங்கி கொடுத்த பொருட்களை எல்லாம் எடுத்துக்கொண்டு வந்து விட்டனர் பெண் வேளைக்கு சென்றுகொண்டிருந்தாள் அவளை விடுதில் சேர்த்தனர். இப்பொது ஒரே ஊரில் 2பெரும் தனி தனியாக இருகிறார்கள். இதனால் பதிகபட்டது யார் ? சிறு வயது முதல் காதலித்தவர்கள்.
இப்படி இருக்கும் பொது எப்படி பெற்றோரிடம் கூறுவது . பிறகு ஊர் பூரா இவங்கள பதியே பேச ஆரம்பிச்சிடாங்க . இதனால் பாதிக்கப்பட்டது யாருடைய வழக்கை ?
உங்க பொண்ண அடங்கி போக சொல்லுங்க, உங்க பையன அடங்கி போக சொல்லுங்க என 2 பெரும் மாத்தி மாத்தி பேசி அப்பா .
நீ சொன்னா நாங்க அடங்கி போகனுமா என்று 2குடும்பமும் முடிகிட்டு இருக்கு .
பெத்தவங்ககிட்ட சொன்னா இப்படிதான் நடக்கும் நடுவரே .
பெத்தவங்க கடவுள்தான் நடுவரே இல்லைன்னு சொல்லல. சாமிகிட்ட பொய் உங்க கஷ்டத்த சொல்லுங்க. பெத்தவங்களையே கஷ்டப்டுதிட்டு நீங்க ஜாலியா இருகலானு நேனைகிரங்கபோல எதிரணிகாரங்க .
என்ன நடுவரே நா சொல்றது கரெக்ட் தான ?
ஆமான்னு டப்புனு சொல்லுங்க யோசிக்காதிங்க
ஆமாங்கறே .............

நீ உனக்காக வாழ வேண்டும் .

என்றும் அன்புடன்
சங்கீதா.

நடுவர் அவர்களே!!
திருமணம் என்பது ஆயிரங்கால்த்துப்பயிர், சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவது..இருமணம் இணைந்தது திருமணம். அப்பா அம்மா தாத்தா பாட்டி யாரைவேணா எடுத்துக்கங்க, அவர்களுக்குள் ஏற்படும் சிறு ஊடல்கள் ஊதி பெரிதாக்கப்ப்படுதே அவங்களை பெற்றவர்களால்தான். தங்கல் குழந்தைகளின் மீது வைத்திருக்கும் அபரிமிதமான அன்பினால் புத்திமதி சொல்கிறேன் என்கிற பெயரில் அவர்களின் மனதை புண்படுத்திவிடுக்கிறார்கள்.
சின்ன சண்டையா உடனே மனைவி கணவனை உறுத்தச்செய்யூம் நோக்கில், உம்ம்னு 3 நாளைக்கி அப்படியே சாப்பிடாம கொள்ளாம தர்ணா பண்ணுவாங்க, கணவரும் இந்த உம்மணா மூஞ்சியா எந்நேரமாடா பார்க்கிறதுனு , தப்பு தன்மேல இல்லினாலும், என்னாச்சு ஏன் உம்ணு இருக்க, உடம்புகிடம்பு முடிலயானு கேட்டு சமாதானத்துக்கு வழிவகை செய்வார்.
மனைவியும் சரி கோபத்தை மூட்டைகட்டி வச்சிட்டு ஷாப்பிங்மூடுக்கு போயிருவாங்க, அந்த சண்டை அதோட போயிரும்.
அதைஉட்டுப்போட்டு, மாமியார் மாமனார், அப்பா அம்மானு விஷயத்தை சொல்லி , அவங்களோட அட்வைஸை கேட்டு பிரச்சைனை முடிவுக்கு வரும்னு நினைக்கிரீங்க, கிடையவே கிடையாது.
உங்கப்பா என்னைய கேட்க்ககூடாத கேள்வியெல்லாம் கேடுப்புட்டாரு அதுக்கு காரணம் நீதானும், ஒருவேளை மாட்டுப்பொண்ணுக்கு மாமியார் மாமானார் சப்போர்பண்ணியிருந்தா, எங்கப்பா அம்மாவ என்னைய திட்ட வெச்சிட்டினும் மனசுக்குள்ள ஒரு லைன் ஓடிட்டே இருக்கும்.
இதுனாலா சிக்கல் அதிகமாக்கிட்டேதான் இருக்கும்.
எதொன்னு சொன்னாலும், அம்மாடி நான் விளையாட்டுக்குத்தான் சொன்னேன் ஊரைக்கூட்டிப்புடாதேனு குத்தால் பேச்சும் கிடைக்கும்.
மேலும் பகை நீறுபூத்த நெருப்பு போல உள்ளுக்குள் இருந்துக்கிட்டேதான் இருக்கும்.
அதே போல தமப்தியருக்குள் அந்த பிரச்சினையின் சாரம் தழும்புபோல் மறையவே மறியாது.
ஏம்மா இப்பலாம் மாப்பிள்ளை ஒண்ணும் பிரச்சினை பண்றதில்லியேனு அப்பா கேட்பார், அப்பலாம் மனசு வலிக்கும். அடடா கொஞ்சம் அமைதி காத்து இருக்கலாமோனு..
மேலும் பெற்றோர்களும் தங்களின் நெருங்கின இரத்த பந்தத்திடம் இதைப்பற்றிய விஷயங்கலை பகிர்ந்துகொள்ள நினைப்பாங்க.(அத்தை,பெரிப்பா,சித்தப்பா இத்யாதி இரத்த பந்தங்கள்)..
அப்படி இருக்கும்போது, ஒரு சினிமாவ்வோ, சுற்றுலாவோ கிளம்பினா , எந்த முணுமுணுப்பும் இல்லேனா கூட நம் காதுக்குள்ள முணு முணு னு பேசிக்கிறாப்பில ஒரு குரல் கேட்கும். சண்டை போட்டுக்கிட்டு சமாதானம் ஆகி அப்படி இப்படினு....
நமக்குள்ளே வெட்கம் பிடுங்கி தின்னும், குற்ற உணர்ச்சி தலைதூக்கும்.

அதுனால நடுவரே எத்தனையோ விஷயங்களை கேன்டில் பண்ணும் தம்பதிகள் தங்களுக்கிடையில் ஏற்படும் மனத்தாங்கல்களையும் தாங்களே போக்க்கிகணும் என்பதெ எமது அணியின் தலையாய வேண்டுகோள்.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

இப்ப ஒரு கதை சொல்றேன் கேளுங்க !
ஒரு பெண்ணை திருமணம் செய்து கொடுக்கும் போது அவளுடைய அம்மா அவளிடம் ஒரு ஆர் டி போக்கையும் ஒரு டைரியையும் கொடுத்து நீ சந்தோஷமாக இருக்கும் சமயங்களில் நூறு ரூபாயை இந்த அக்கவுண்டில் போட்டு அதன் காரணத்தை இந்த டைரியில் எழுது என்றாளாம். கல்யாணம் ஆன புதிதில் அடிக்கடி அதில் போடுவாளாம் அந்த பெண். போக போக ரெண்டு மாதத்திருக்கு ஒரு முறை என்றானாது . ஒரு நாள் அம்மா பெண்ணிடம் பேசும் போது , எப்படி இருக்கு வாழ்க்கை என்ற கேள்விக்கு பதில் கூறிய தொனியிளிருந்தே தெரிந்ததாம் என்னவோ பிரச்சினை என்று. கேட்டவுடன் அவளும் கொட்டி விட்டால் கணவர் மேல் ஒரே புகார் பட்டியல் செலவு இஷ்டத்திற்கு செய்கிறார் அவர்கள் வீடு மனுஷாள் முன்னாடி என்னை சத்தம் போடுகிறார் இவரெல்லாம் எதுக்கு திருமணம் செய்து கொண்டார் என்றே தெரிய வில்லை ?? என்று ஒரே அழுகை

எனக்கு இந்த வாழ்க்கையே வேண்டாம். பேசாமல் நான் உன்னுடன் வருகிறேன் சில நாளைக்கு... என்ற பொது அவள் அம்மா சொன்னங்க. சரி நீ வா வருவதற்கு முன்பு நான் ஒரு டைரி கொடுத்தேனே அதில் நீ எழுதியதை படித்து விட்டு வா என்றாளாம்.

மகளிடமிருந்து என்றைக்கு வருவாள் என்று போனை எதிர்நோக்கி இருந்த அம்மாவுக்குஒரு செய்தியும் வரவில்லை பொறுத்து பார்த்து அடுத்த வாரமே அம்மா போன் செய்த பொது, நல்ல மூடில் பெண் பேசினால்." என்னம்மா அன்னிக்கு ரொம்ப கோபமா பேசினே இங்கே வரேன் ன்னு சொன்னியே". , "அது ஒகே மா ஒருத்தர்கிட்டே குத்தம் மட்டும் பார்க்கலாமா, அவர் எவ்ளோ நல்லது செய்திருக்கார் அப்படின்னு . தோணிச்சு சரின்னு எனக்கும் மனசு லேசா ஆயிடுச்சு . என்றாளாம் . அம்மாவுக்கு கண்ணில் ஆனந்த கண்ணீர் .

இன்பமும் துன்பமும் இரண்டற கலந்தது தான் வாழ்க்கை. புதிய வாழ்க்கை வாழும் தம்பதிகளுக்குள் இன்பம் வரும்போது அனுபவிப்பது போல துன்பம் வரும்போது சேர்ந்து அனுபவிக்கும் பக்குவம் வருவது கடினம். அதற்குநல்ல கைடன்ஸ் வேண்டும் அது பெற்றவர்களால் மட்டுமே முடியும் .

அதிலும் பெண்கள் தோழிகளிடம் புலம்புவதும் ஆண்கள் டாஸ்மார்க்கில் சலம்புவதும் , பிரச்சினைகள் தள்ளி போடவே ஒழிய தீர்க்கவே தீர்க்காது வார்த்தைகள் தடித்து இன்னும் ப்ரேக் அப் அதிகம் தான் ஆகும் .

எல்லா த்ம்பதிகலுமே தங்கள் இன் லாஸ் வீட்டில் தங்களை எந்த அவமரியாதியும் செய்ய கொடாது என்று நினைப்பாங்க இதில் ஆன் பெண் என்ற பிரிவே இல்லை ஒரு வேலை ஏதாவது ஸ்மால் சண்டை என்றாலும் இதை அவள் ?அவன் அம்மாவிடம் சொல்லியிருப்பாரோ என்ற சந்தக கண் கொண்டே பார்ப்பார்கள் இவர்கள் சண்டை அடுத்த பிளாட்டில் இருப்பவருக்கு கூட தெரியலாம் ஆனால் பெற்றவர்களுக்கு தெரிந்தால் மானம் கப்பலேறியது போல கவலை படுவாங்க . ஒரு ப்ராப்ளம் என்றால் வெளி மனிதர்கள் ஒதுங்கி போவாங்க. அனல் நம்மை சேர்ந்தவர்கள் தான் உற்ற துணை இருப்பார்கள்

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா என்பது போல--- திருமண வாழ்வில் சண்டைகளும் சகஜமப்பா என்ற எண்ணம் வருவதற்கு குறைந்த பட்சம் ரெண்டு மூணு வருஷமாகும் அதற்குள் எடுத்தோம் கவிழ்த்தோம் என்ற முடிவுக்கு வருவதற்கு இவங்களே தப்பு தப்பா தங்களை பற்றியும் எதிராளி பற்றியும் ஒரு முடிவுக்கு வருவது தான் காரணம் .

எந்த பிரச்சினை என்றாலும் அம்மா அப்பாவிடம் சொல்ல வேண்டும் என்பதல்ல எங்கள் அணியின் நோக்கம். வாடிய மலர் போல சில சமயம் சொல்ல முடியாத மன அழுத்தங்கள் இருக்கும் பொது, என்ன முடிவெடுப்பது இது எதில் கொண்டு பொய் முடியும், இதெல்லாம் சரியா என்ற சந்தேகங்கள் வரும்போது, கண்டிப்பாக பெற்றவர்களை தான் துணை கொண்டு அழைக்க வேண்டும் . ஒரு வேலை தவறுதலாக அவர்கள் கை காட்டினாலு, பொறுப்பு அவர்களுடையதாகிறது . அந்த ஒரு மனத்ருப்தியாவது மிஞ்சுமே . நண்பர்களோ மற்றவர்களோ , காது கொடுத்து சிறிது நேரம் கேட்பார்களே தவிர அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது.

நாடோடிகள் படம் போலே, எமோஷனலாக நண்பர்கள் எடுக்கும் முடிவுகள் இவங்க வாழ்க்கையை மட்டுமல்ல அவர்கள் வாழ்க்கையிலும் பிரச்சினை வரும். ஓவர் நைட்டில் எல்லா பிரச்சினையும் சரியாகிவிட்டால் இந்த வாழ்க்கையில் சுவாரஸ்யம் தான் ஏது ?

இக்கால தம்பதிகளுக்கு எல்லா பிரச்சினையும் இம்மிடிஎட்டாக சரியாக வேண்டும் . இல்லைனா, பெற்றோர்களுக்கு ஒன்றுமே தெரியாது என்ற ரீதியில் ஒரு கமன்ட் அடிப்பாங்க.. இன்றைக்காவது பணம் இருக்கு , வசதி வாய்ப்புகள் இருக்கு . ஆனால் எல்லாமே குறைவாக இருந்த அக்காலத்தில் தம்பதிகள் எவ்வளவோ அனுசரித்து போக வில்லையா ? இத்தனைக்கும் நம் தாய் தந்தையர் சண்டை எல்லாம் நமக்கும் தெரியுமே, என்ன தவறாகிவிட்டது இன்றும் இவ்வாளவு வயதான காலத்திலும் ஒருவருக்கொருவர் துணையாக இருக்கிறார்களே? என்றைக்கும் அம்மா , அப்பாவை விட்டு தனியாக தன சந்தோஷத்திற்காக போகாமல் இருக்கிறார்களே ?? ஏன் அவர்களின் பெற்றோர்களின் புத்திமதி அப்படி, அதை இவர்கள் எடுத்து கொண்ட விதமும் அப்படி .

நம் தாய் தந்தைக்கு ஒன்றும் தெரியாது என்ற மனோபாவத்தை எடுத்துவிட்டு அவர்கள் கூறுவதில் உள்ள அர்த்தத்தை சிந்தித்து பார்த்தோம் என்றாலே பிரச்சினைகளுக்கு வழி பிறக்கும் .

அதை விட ஒரு வேலை , பெண்ணோ ஆணோ தங்கள் குடும்ப , பிரச்சினையை அவர்கள் பெற்றோரிடம் சொன்னாலும் முதலில் அவர்கள் சொல்லும் அறிவுரையே , "ரெண்டு பெரும் தனியா எங்கியாவது பொய் மனசு விட்டு பேசுங்கப்பா" என்பது தான். இப்போ சொல்லுங்க நடுவரே !

பெற்றோரிடம் எடுத்து செல்வது நல்லதா இல்லையா என்று !!

மீண்டும் வரேன்

நடுவரே,எதிரணி சொல்வதுப்போல் குடும்பப் பிரச்சினைகளை சொன்னால் அப்பொதைக்கு பிரச்சனைத் தீரும் ஆனால் அதன்பின் நடப்பதை கொஞ்சம் யோசித்தார்களா என்றுக் கேளுங்கள்.கண்டிப்பாக மட்டார்கள்.
ஏனென்றால் சுற்றி இருக்கும் முக்கிய உறவுகள் தீர்ந்த பிரச்சனையய் திரும்ப கூறி குத்திக் காட்ட அதிக வாய்ப்பு உண்டு.பின் ஏன்டா சொன்னோம் என்றக் கதையாகிவிடும்.
பிரச்சனை போன அந்த நேரம் மட்டும் திருந்தினார் போல் தெரியும்.திரும்பி ஒன்று சேர்ந்து வாழ்ந்தல் அது ஒரு போலி வாழ்க்கை போல் ஆகிவிடும்.தம்பதிக்குள் இருக்கும் பிரச்சனை தெரியதாவரை தான் அவர்கள் பிரச்சனை தெரிந்துவிடால் அது இரு குடும்பப் பிரச்சனையாகிவிடும்.இப்படி சொல்லி மாட்டிகொள்வதைவிட பேசாமல் அவர்களுக்குள்ளாகவே பேசி தீர்த்துக் கொள்வது தான் சரி.நான் சொல்வது சரிதான நடுவரே

Sangiselva

//திருமணத்திற்கு முன்பு எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு காண பெற்றோரை சார்ந்திருக்கும் நாம், திருமணத்திற்கு பிறகு அவர்களை என்னவோ ஒன்றும் தெரியாதவர்களாகவும், அந்நியராகவும் பார்க்கிறோம். நம் திருமணத்தின் முன்பும், பின்பும் அவர்கள் ஒரே மாதிரித்தான் இருக்கிறார்கள். நம் தான் அவர்களை பாரமென்று கருதி சுதந்திரம் இப்போதுதான் கிடைத்தது என்பது போல் பறக்க ஆரம்பிக்கிறோம். விளைவு அனுபவமின்மையால் சிறு ஊடல் கூட பூதாகரமாய் வளர்ந்து விடுகிறது.//

ஏம்பா கல்யாணத்துக்கு முன்னாடி எதுன்னாலும் பெற்றோர்கிட்டதானே சொன்னீங்க. கல்யாணம் ஆன பின்னாடி மட்டும் அப்படி சொல்வது எப்படி தப்பாகும் அப்படீங்கறாங்க.

//ஆனால் நீங்கள் அவர்களை மௌனத்தினால் குத்தி காயப்படுத்தி கொண்டிருக்கிறீர்கள். பிரச்சனைக்கு தீர்வாக இருக்கும் பெற்றோர்களிடம் பிரச்சனையின் உண்மை நிலையை கூறுங்கள். கண்டிப்பாக உங்களுக்கு தீர்வு நிச்சயம்.//

பிள்ளை முகம் வாடினால் பெற்றோர் சுலபமா கண்டுபிடிச்சுடுவாங்க. அப்படி இருக்கும் போது நீங்கள் பிரச்சினையை மறைக்க முயல்வதுதான் அவர்களுக்கு வேதனையை கொடுக்கும் என்கிறார்கள். பெற்றோரிடம் சொன்னால் நல்ல தீர்வு கிடைக்கும்னும் சொல்றாங்க.

இதுவும் நடுவரோட குட்டியூண்டு மூளைக்கு சரின்னுதான் படுது :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேலும் சில பதிவுகள்