பட்டிமன்றம் 89- தம்பதிகளுக்குள் வரும் பிரச்சினையை பெற்றோரிடம் கொண்டு செல்ல வேண்டுமா ? வேண்டாமா?

அன்பு தோழி(ழர்)களுக்கு வணக்கம். நம்ப அறுசுவை பஞ்சாயத்து (பட்டிமன்றம்தேன்) நாட்டாமையாக மீண்டும் நானே வந்துட்டேன் :). அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க. வேற வழியே இல்லை :)

நல்லா டிஷ்யூம் டிஷ்யூம் போடற தலைப்பாக இருக்கணுமே அப்பதானே நாரதருக்கு சிண்டு முடியும் வேலை சுலபமாக இருக்கும்னு பட்டிமன்ற தலைப்புகள் இழையில் "நாராயணா நாராயணா" ன்னு சொல்லிக்கிட்டே சுத்தி வந்தால் கரெக்டா சண்டையை பற்றியே ஒரு தலைப்பை நம் தோழி உதிரா கொடுத்திருந்தாங்க. கபால் னு தூக்கிட்டு வந்துட்டேன். நாரதர் மாதிரியே ஈரேழு உலகமும் சுற்றாமல் நேரடியா தலைப்பை சொல்லுன்னு நீங்க சொல்றது கேட்குது. சண்டை போடறதுக்கு என்னா அவசரம். தலைப்பு இதுதான்.....

********** கணவன் மனைவிக்குள் வரும் பிரச்சினையை பெற்றோரிடம் கொண்டு செல்ல வேண்டுமா ? வேண்டாமா? .*********

வாங்க வாங்க சீக்கிரம் உங்கள் வாதப் பூக்களை அள்ளித் தெளியுங்கள். எடுத்து மாலையாக கோர்க்க காத்திருக்கிறேன்.

பட்டிமன்ற விதிமுறைகளையும் அறுசுவையின் விதிமுறைகளையும் மீறாமல் வாதங்களை எடுத்து வைக்க வேண்டும் என்பதை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்,

புதியவர்களுக்காக விதிமுறைகள் இங்கே.....

யாரும் யாரையும் பெயரிட்டு அழைக்கக்கூடாது.

அரசியல் அறவே பேசக்கூடாது.

அரட்டை அறவே கூடாது

ஜாதி,மதம் பற்றி பேசக்கூடாது.

நாகரீக பேச்சு மிகமிக அவசியம்.

அறுசுவையின் எல்லா விதிகளும் இந்த பட்டிக்கும் பொருந்தும்.

பெற்றோர்களிடம் சொன்னால் என்னாகும்னு உண்மை சம்பவத்தோட புட்டு புட்டு வச்சிருக்காங்க. இதுக்கு என்னப்பா சொல்லப்போறீங்க?

//என்ன நடுவரே நா சொல்றது கரெக்ட் தான ?//

நடுவர் என்ன நினைக்கிறாருன்னு இப்போ நடுவருக்கே தெரியாது. தீர்ப்பு வர்ற அன்னிக்குத்தான் தெரியும் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

//உங்கப்பா என்னைய கேட்க்ககூடாத கேள்வியெல்லாம் கேடுப்புட்டாரு அதுக்கு காரணம் நீதானும், ஒருவேளை மாட்டுப்பொண்ணுக்கு மாமியார் மாமானார் சப்போர்பண்ணியிருந்தா, எங்கப்பா அம்மாவ என்னைய திட்ட வெச்சிட்டினும் மனசுக்குள்ள ஒரு லைன் ஓடிட்டே இருக்கும்.
இதுனாலா சிக்கல் அதிகமாக்கிட்டேதான் இருக்கும்.//

பெரியவர்களிடம் சொன்னால் சாதா சிக்கல் இடியாப்ப சிக்கல் ஆகிடும்னு சொல்றாங்க. ம்ம்ம் யோசிக்க வேண்டிய விஷயமாத்தான் இருக்கு.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஆஹா உஷா நீங்களும் கதை சொல்லப்போறீங்களா :)

நீங்க சொன்ன கதையில் வரும் ஐடியா நல்லாருக்கே :)

//இன்பமும் துன்பமும் இரண்டற கலந்தது தான் வாழ்க்கை. புதிய வாழ்க்கை வாழும் தம்பதிகளுக்குள் இன்பம் வரும்போது அனுபவிப்பது போல துன்பம் வரும்போது சேர்ந்து அனுபவிக்கும் பக்குவம் வருவது கடினம். அதற்குநல்ல கைடன்ஸ் வேண்டும் அது பெற்றவர்களால் மட்டுமே முடியும் .//

துன்பத்தில் மனம் குழப்பத்தில் இருக்கும் போது வழிகாட்ட பெரியவர்கள் வேண்டும் அதனால் பெற்றோர்களிடம் சொல்லவேண்டும் என்கிறார்கள். நியாயமாத்தேன் தெரியுது.

நாரதர் வேலை கொஞ்சம் கஷ்டம்தான் போல இருக்கு :)

//வாடிய மலர் போல சில சமயம் சொல்ல முடியாத மன அழுத்தங்கள் இருக்கும் பொது, என்ன முடிவெடுப்பது இது எதில் கொண்டு பொய் முடியும், இதெல்லாம் சரியா என்ற சந்தேகங்கள் வரும்போது, கண்டிப்பாக பெற்றவர்களை தான் துணை கொண்டு அழைக்க வேண்டும் //

இது நியாயமான பேச்சா இருக்கே! அவரசரப்பட்டு அந்த அணிக்காரங்க நடுவரை அடிக்க வரப்படாது. அநியாயம்னா எப்படின்னு வந்து நீங்க சொல்லணும்... :)

//நம் தாய் தந்தைக்கு ஒன்றும் தெரியாது என்ற மனோபாவத்தை எடுத்துவிட்டு அவர்கள் கூறுவதில் உள்ள அர்த்தத்தை சிந்தித்து பார்த்தோம் என்றாலே பிரச்சினைகளுக்கு வழி பிறக்கும் . //

கொஞ்சம் சிந்திச்சு பாருங்கப்பா அப்படீங்கறாங்க.

உஷாவின் கலக்கலான வாதங்களுக்கு சூடான பதிலுடன் சீக்கிரம் வாங்கோ!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

//ஏனென்றால் சுற்றி இருக்கும் முக்கிய உறவுகள் தீர்ந்த பிரச்சனையய் திரும்ப கூறி குத்திக் காட்ட அதிக வாய்ப்பு உண்டு.பின் ஏன்டா சொன்னோம் என்றக் கதையாகிவிடும்.//

கனவன் மனைவி பிரச்சினை வெளியில் போய் விடால் அதன் பின்னர் மீண்டும் மீண்டும் குத்தி காண்பிக்கப்படும் தேவையாங்கறாங்க... சரிதானே!

பதில் சொல்லுங்கப்பா

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நடுவரே பெற்றோர்கிட்ட சொல்லணும் சொல்லனும்னு எதிரணி பிடிவாதமா இருக்காங்க, சரி கொஞ்சம் விட்டு பிடிபோம்.
அதற்காக வாதத்தை மாற்றவில்லை நான்.
பயப்பட வேண்டாம்!
பெற்றோர்கிட்ட சொல்லுங்க! பிரச்சனை முடிந்ததுக்கு பிறகு சொல்லுங்க. இந்தமாதிரி பிரச்சனை இருந்தது அதை நான் சமாளிச்சி நாங்க 2பெரும் சமாதானம் ஆகிட்டோம். சொன்னால் என் கணவர் / மனைவி நான் எடுத்து கூறும் போது புரிந்திகொல்கிறார். அப்படின்னு சொல்லுங்க அப்போ நம்ம பெற்றோருக்கு இன்னும் சந்தோஷ படுவாங்கள. நம்ம பொண்ணு-மருமகன் / பையன்-மருமகள் , பரவில்லை ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு வாழ்கிறார்கள் என்று
சோ நடுவரே கணவன் மனைவி பிரச்சனையே நம்பலேதான் தீர்த்துக்கொள்ள வேண்டும் .
நடுவரே சரிங்கறே! நம்மையோ/நமது பெற்றோரையோ பார்க்கும் இடம் எல்லாம் கேட்பாங்க. அப்போ நம்மை சுற்றி 10-20 பேர் இருப்பாங்க.

நமக்கு/பெற்றோருக்கும் எவ்வளோ மன வருத்தத்தை கொடுக்கிறோம் இது.

அது மட்டும் இல்லை கணவனோ/மனைவியையோ பற்றி அடுத்தவர்களுக்கு நல்ல அவிப்ராயம் வராது.
***இது நமது பெயரை நாமே கேடுத்துகொல்வது போன்று.****
***நம்ம தலைல நாமளே மண்ணை அள்ளி போட்டுகிற மாதிரி***
சும்மா இருந்த சங்க ஊதி கெடுத்தானா ஆண்டி!!!
தேவையா இது.

யாருக்கும் தெரியாம பார்த்துகொள்வது தான் நல்லது.

4சுவற்றுக்குள் பேசி முடிவு எடுகனுன்றேன்!!! .

அப்போதான் வாழ்கைய புரிந்து விட்டுகொடுத்து வாழ முடயுங்றேன்!!!

வாழ்க்கை சுமுகமா இருக்குங்கறேன்!!!
பாவம் நடுவர் இந்த தலைப்ப கொடுத்துட்டு ரொம்ப கஷ்டபடுறாருனு நினைக்கிறன்!!

நீ உனக்காக வாழ வேண்டும் .

என்றும் அன்புடன்
சங்கீதா.

நடுவரே... எதிர் அணிக்கு ஆள் வந்துட்டாங்க போலவே ;) சரி சரி ஃபீல் பண்ணாதீங்க... எங்களுக்கும் உண்மையை எடுத்து சொல்ல, புரிய வைக்க எதிர் அணின்னு ஒன்னு வேண்டும் தானே.

நடுவரே... முதல்ல ஒரு உண்மையை சொல்லுங்க... இப்பலாம் நம்ம ஊரில் குழந்தை திருமணம் நடக்குதா என்ன???!!! அப்படி நடந்தா பெற்றோர் உதவி நமக்கு சில காலம் வேணும் தான். இப்பலாம் மேஜர் ஆகி சுயமா யாருக்கு ஓட்டு போடனும்னு கூட தேர்வு செய்யும் பக்குவம் வந்த பிறகு தானேங்க சட்டப்படியே கல்யாணம் பண்ணனும். நாம ஒரு படி மேல போய் படிப்பு படிப்பு, வேலை வேலைன்னு சுத்திட்டு 25 வயசுக்கு மேல தானேங்க பண்றோம்? இந்த வயசுல கூட தன் பிரெச்சனையை தானே தீர்த்துக்க முடியல, எது சரி எது தப்புன்னு புரிஞ்சுக்க முடியாமலா போகும்?? இப்பவும் அம்மா, அப்பானு அவங்க பின்னாடியே சுத்தினா நமக்கு எதுக்குங்க கல்யாணம்?? நாமா தனியா ஒரு குடும்பம் ஆகும் தகுதி இருக்குன்னு நம்பி தாங்க நமக்கு கல்யாணம் பண்றாங்க. இதெல்லாம் எதிர் அணிக்கு புரியவே மாட்டங்குது போலவே. சரி விடுங்க. நம்ம புரிய வெச்சுடலாம். ;)

நம்ம இப்போதைக்கு மாப்பிள்ளை எண்ணங்கள் பற்றி பேச வேண்டாம் நடுஅவ்ரே. காரணம் சொல்றேன் கேளுங்க... பொதுவா கல்யாணம் ஆகிட்டாலே பொண்ணுக்கு பிறந்த வீடுன்னு ஒன்னு இருப்பதை யாரும் ஏத்துக்குறதில்லை. அவ எந்த குத்தல் குடச்சல் இருந்தாலும் அவளோட அப்பா அம்மா கிட்ட சொல்றதை ஆண்கள் விரும்ப மாட்டாங்க. பிரெச்சனைன்னு வந்தா இவர் மட்டும் தன் அப்பா அம்மா கிட்ட சொல்வார். ;) உண்மை இது தான்... நாட்டில் நடை முறையில் இருப்பது. ஆண் இப்படி தொட்டதுக்குலாம் அப்பா அம்மா கிட்ட கம்ப்ளைண்ட் பண்ணா பொண்னு மனநிலை எப்படி இருக்கும் தெரியுமா? சில நேரம் மனைவிகிட்ட கூட நீ பண்ணது எனக்கு பிடிக்கலன்னு சொல்லி இருக்க மாட்டாங்க. மாமியார் சொல்லி தான் தெரியும், நாம் பேசியது அவருக்கு பிடிக்கலா, அம்மா கிட்ட சொல்லி இருக்கார்ன்னு.

என்னிடமே என் நண்பரின் மனைவி இப்படி புலம்பியது உண்டு. எல்லாத்தையும் அவங்க அம்மா, தங்கைகிட்ட சொல்றார், அவங்க கால் பண்ணி என்னை சத்தம் போடுறாங்கன்னு. இது உறவுக்கு நடுவே பலத்தை உண்டாக்குமா? விரிசலை உண்டாக்குமா? அவங்களுக்குள் விரிசல் தான் வந்தது. கணவன் மேல் இருந்த நம்பிக்கை அந்த பொண்னுக்கு போயிடுச்சு. உடனே எதிர் அணி பெரிய பிரெச்சனைன்னா தானே கொண்டு போக சொல்றோம்னு சொல்லலாம். ஆனா பிரெச்சனையா இல்லையா, பிரெச்சனை பெருசா சிறுசா எல்லாம் அவங்க அவங்க மனநிலையையும், வளர்ந்த விதம், சுபாவம் பொறுத்ததே. அப்படி உண்மையில் எல்லாருமே பெருசா நினைக்கிற விஷயம் மட்டும்னா விவாகரத்து பண்றதா முடிவெடுத்தா மட்டும் தான் பெற்றோரிடம் கொண்டு போகனும் ;) என்ன நடுவரே... நான் சொல்றது சரி தானே?

ஒன்னுமில்லை நடுவரே... மனைவி செய்த ஒன்று தனக்கு பிடிக்கலன்னு கணவன் தன் பெற்றோரிடம் சொன்னால் என்ன ஆகும்? உடனே மாமியார் “ச என் பையன் இவ்வளவு வேதனை படறானே”னு நினைப்பாங்க. உடனே மறுமகளை “நீ ஏன் இப்படி பண்ண? இனி இப்படி பண்னாத, அவனுக்கு பிடிச்ச மாதிரி நடந்துக்க”னு அட்வைஸ் பண்ணுவாங்க. ஆனா அந்த பொண்ணு ஏன் அப்படி பண்ணான்னு உண்மையில் அங்கே எந்த விசாரனையும் நடக்காது. அவள் பக்க நியாயம் வெளிய வரவே வராது. காரணம் மறுமகளாலும் எல்லாவற்ரையும் மறைக்காம மாமியாரிடம் பேச இயலாது. ஆனால் கணவன் மனைவி என்ற உறவில் ஒளிவு மறைவு இன்றி விஷயங்களை தைரியமா பகிர்ந்துக்கலாம். அது தானே அந்த உறவின் சிறப்பு? எந்த உறவுகளிடமும் சொல்ல முடியாததை தமக்குள் பகிர்ந்து கொள்ளும் உறிமையும், அன்பும் இருப்பதனால் தானே அது எல்லா உறவை விடவும் சிறந்ததா இருக்கு? அப்படி பட்ட உறவுக்குள் பேசி தீர்க்க முடியாத விஷயம் ஒன்னு உண்டா? நிச்சயம் இருக்க முடியாது நடுவரே.

பெற்றோர் பாசம் எப்பவும் பிள்ளை மேல் தான். சில அபூர்வ கேஸ் வேணும்னா வீட்டுக்கு வந்த மறுமகள், மருமகன் மேல் பாசம் இருக்கும். 90% தன் பிள்ளைக்காக தான் பரிஞ்சு பேசும். தன் மகன் தவரே செய்திருந்தாலும் வந்த மறுமகளை அனுசரித்து போக சொல்லும் மாமியார் தான் அதிகம். அப்படி அனுசரித்து மட்டுமே போகும் வாழ்க்கை நிலைக்காது இனிக்காது.

கூடவே கணவன் மனைவிக்குள் வரும் பிரெச்சனைகள் காலப்போக்கில் தீர்ந்து சரியாகும் போது அவர்கள் அதை மறந்துடுவாங்க. ஆனா அவங்களுக்குள் பிரெச்சனையா இருந்த நேரம் தன் பெற்ரோருக்கு சொல்லி தெரியப்படுத்தி இருந்தாங்கன்னு வைங்க... காலத்துக்கும் அதை பெற்றோர் மறந்திருக்கவே மாட்டாங்க. ஏன்னு கேட்கறீங்களா? அவங்க பெற்றோர்... பிள்ளை பட்ட துன்பம் மறக்காது. என்னைக்கும் அதை மறக்காது, மன்னிக்காது. பிள்லைக்காக வேணும்னா அனுசரிச்சு போகும். இதுவே கணவன் மனைவிக்குள் என்றால்?? அந்த காதல் என்ற ஒரு ரேகை ஓடுது பாருங்க... அது எல்லாத்தையும் மறக்க வைத்து, மருந்து போட்டு ஆத்திடும். அது காதலின் வலிமை.

இன்னும் நிறைய பேசலாம் எதிர் அணி வாதங்களை படிச்ச பின் வருவேன் மீண்டும். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//பெற்றோர்கிட்ட சொல்லுங்க! பிரச்சனை முடிந்ததுக்கு பிறகு சொல்லுங்க.//

பிரச்சினை முடிஞ்ச பின்னாடி சொல்லுங்கப்பா. அப்போ பெரியவங்க சந்தோஷப்படுவாங்கன்னு சொல்றாங்க.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

//25 வயசுக்கு மேல தானேங்க பண்றோம்? இந்த வயசுல கூட தன் பிரெச்சனையை தானே தீர்த்துக்க முடியல, எது சரி எது தப்புன்னு புரிஞ்சுக்க முடியாமலா போகும்?? இப்பவும் அம்மா, அப்பானு அவங்க பின்னாடியே சுத்தினா நமக்கு எதுக்குங்க கல்யாணம்?? நாமா தனியா ஒரு குடும்பம் ஆகும் தகுதி இருக்குன்னு நம்பி தாங்க நமக்கு கல்யாணம் பண்றாங்க.//

ஏழுகழுதை வயசு ஆன பின்னாடியும் எல்லாத்துக்கும் பெற்றோரை சார்ந்திருக்கணுமா அப்போ எதுக்கு கல்யாணம்னு சூடா கேள்வி கேட்கறாங்க.

//எந்த உறவுகளிடமும் சொல்ல முடியாததை தமக்குள் பகிர்ந்து கொள்ளும் உறிமையும், அன்பும் இருப்பதனால் தானே அது எல்லா உறவை விடவும் சிறந்ததா இருக்கு? அப்படி பட்ட உறவுக்குள் பேசி தீர்க்க முடியாத விஷயம் ஒன்னு உண்டா?//

எல்லாவற்றையும் ஒளிவு மறைவின்றி பேச முடியும் உறவுக்குள் பெற்றோரின் தலையீடு எதுக்குன்னு நியாயமான கேளியை எடுத்து வச்சிருக்காங்க. பதில் இருக்குங்களா :)

//இதுவே கணவன் மனைவிக்குள் என்றால்?? அந்த காதல் என்ற ஒரு ரேகை ஓடுது பாருங்க... அது எல்லாத்தையும் மறக்க வைத்து, மருந்து போட்டு ஆத்திடும். அது காதலின் வலிமை.//

பிள்ளைப்பாசம் தன் பிள்ளையை சங்கடப்படுத்தியவரைப்பற்றிய எதிர்மறை எண்ணங்கள் இருந்து கொண்டே இருக்கும். ஆனால் கணவன் மனைவிக்குள் காதல் என்னும் அந்த ஒற்றை இழை எல்லா விரிசலையும் சரியாக்கிடும்னு சொல்றாங்க. இந்த குற்றச்சாட்டுக்கு என்ன பதிலுங்கோ

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஒரு பெரிய குடும்பம்….தொண்ணூறு வயது தந்தை(1)

.அவர்களுக்கு எழுபத்திரண்டு வயதில் மகன்,(2)

.அந்த மகனுக்குஐம்பது வயதில் மகன், (3)

அந்த மகனுக்கு இருபத்தைந்து வயதில் மகன்(4)

இதுல எல்லா மகனும் அவரவர் மனைவியோடு இருக்காங்க

…இதுல தன் மனைவியோட என்ன பிரச்சனைன்னாலும் அத தீர்த்து வைக்க மகன்(4) தன் தந்தைகிட்ட(3) போவாரு…

அந்த தந்தையும்(3)” தந்தைசொல் மிக்க மந்திரமில்லை” ன்னு நினைக்கிறவருன்றதால அவரோட தந்தைகிட்ட(2) தன் மகனோட(4) பிரச்சனையை கொண்டு போவாரு

அந்த தந்தையும்(2) அந்த ப்ரச்சனைய தன் தந்தைகிட்ட(1) கொண்டு போவாரு
அந்த தந்தை(1) அந்த ப்ரச்சனைய அவரோட தந்தை இல்லாததால ஒரு வழியா யோசிச்சு முடிவு பண்றாரு….

எதிரணி சொல்றாப்பல நம்ம துணைவர்/துணைவியோட உள்ள ப்ரச்சனைக்காக பெற்றோர சார்ந்திருந்தா அந்த சங்கிலி மேலே உள்ளது மாதிரிதாங்க தொடரும்

மேலே சொன்னபடி நிஜமாகவே ஒரு குடும்பம் இருக்குதுன்னு ஒரு செய்தி சமீபத்தில் கேள்விபட்டேன்.
வளர்த்துவிடுவது பெற்றோர் கடமை..
ஒரு ப்ரச்சனையில் சரியான முடிவெடுப்பது எப்படின்னு வளர்க்கும்போது கற்று கொடுக்கணுங்க..வளர்ந்தபின்னும் என்ன முடிவு எடுக்கணுமின்னு டிக்டேட் செய்யகூடாது…
அப்படியொரு டிக்டேஷனுக்காக திருமணமான தம்பதிகள் பெற்றோரிடம் சென்று நின்றால் அதில் இன்னும்கூட என்னை சார்ந்தே முடிவெடுக்கிறான் என அந்த பெற்றோர் பெருமையாக கூட (ஜம்பம்) நினைக்கலாம்..

ஏன் தம்பதிகளும்கூட நாங்க ரொம்ப மரியாதை கொடுக்கிறோம் பெற்றவங்க கருத்துக்குன்னு பெருமைபடலாம்..

ஆனால் உண்மையில் அங்கே அடுத்த தலைமுறைக்கான விருட்சம் சரியாக வளர்க்கப்படவில்லைன்னுதான் அர்த்தமாகுதுங்க

திருமணமாகியும் தனக்கான ப்ரச்சனைக்கு முடிவெடுக்க பெற்றோரை அணுகினால் தன் பிள்ளைகளுக்கு வருங்காலத்தில் நல்ல முடிவெடுக்க
எப்படி கற்றுகொடுக்கமுடியும்..

வளர்க்கும்போது நல்லது கெட்டது சரி தவறு எல்லாம் தேவைக்கு சொல்லிகொடுத்தாச்சு வளர்த்து ஒரு திருமணமும் செஞ்சு வச்சாச்சு

இதுக்குபிறகு தன் திருமண பந்தத்தில் ஓட்டபந்தயத்தை அந்த தம்பதிகள்
தாங்க ஓடணும்..

அதுல அடிக்கடி விழலாம் நிறைய காயங்கள் வரலாம்..அப்படி வரும்போதெல்லாம் இது சகஜம்தான்னு சரிபண்ணிகிட்டு
திருப்பி எழுந்து அவங்கதான் ஓடணும்…

தூக்கிவிட பெற்றோர் கைய எத்ரிபார்த்துக்கிட்டு சிறுபிள்ளைத்தனமா இன்னும் இருக்கக்கூடாதுங்க

அதுபோல பெற்றோரும் தன் பிள்ளைகளுக்கான (மகன்/மருமகள்/மகன்/மருமகள்) முடிவை தான் எடுப்பதுன்றது அவங்க ஓட்டத்தை தான் ஓடணும்னு நினைக்கிறதுமாதிரிதான் ..அது சரிப்படாதுங்க

மூளையோடு தம்பதிகள் யோசிக்க கற்றுகொண்டால் பெற்றோர் மூளையை
இரவல் வாங்க அவசியமிருக்காது….

அதனால நடுவரே ..பெற்றோர் தோளில் அன்போடு சாய்வது வேறு..முடிவெடுக்க முடியாமல்/தெரியாமல் அவர்கள் தோளில் ப்ரச்சனையை இறக்கி வைக்க சாய்வது வேறு.....

அதனால கொண்டுபோக வேண்டாம் வேண்டாம்

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

கண்டிப்பா பெற்றோரிடம் சொல்ல கூடாது அது தம்பதிகள் இடையே விரிசலை உண்டாக்கி விடும..

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

மேலும் சில பதிவுகள்