பட்டிமன்றம் 89- தம்பதிகளுக்குள் வரும் பிரச்சினையை பெற்றோரிடம் கொண்டு செல்ல வேண்டுமா ? வேண்டாமா?

அன்பு தோழி(ழர்)களுக்கு வணக்கம். நம்ப அறுசுவை பஞ்சாயத்து (பட்டிமன்றம்தேன்) நாட்டாமையாக மீண்டும் நானே வந்துட்டேன் :). அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க. வேற வழியே இல்லை :)

நல்லா டிஷ்யூம் டிஷ்யூம் போடற தலைப்பாக இருக்கணுமே அப்பதானே நாரதருக்கு சிண்டு முடியும் வேலை சுலபமாக இருக்கும்னு பட்டிமன்ற தலைப்புகள் இழையில் "நாராயணா நாராயணா" ன்னு சொல்லிக்கிட்டே சுத்தி வந்தால் கரெக்டா சண்டையை பற்றியே ஒரு தலைப்பை நம் தோழி உதிரா கொடுத்திருந்தாங்க. கபால் னு தூக்கிட்டு வந்துட்டேன். நாரதர் மாதிரியே ஈரேழு உலகமும் சுற்றாமல் நேரடியா தலைப்பை சொல்லுன்னு நீங்க சொல்றது கேட்குது. சண்டை போடறதுக்கு என்னா அவசரம். தலைப்பு இதுதான்.....

********** கணவன் மனைவிக்குள் வரும் பிரச்சினையை பெற்றோரிடம் கொண்டு செல்ல வேண்டுமா ? வேண்டாமா? .*********

வாங்க வாங்க சீக்கிரம் உங்கள் வாதப் பூக்களை அள்ளித் தெளியுங்கள். எடுத்து மாலையாக கோர்க்க காத்திருக்கிறேன்.

பட்டிமன்ற விதிமுறைகளையும் அறுசுவையின் விதிமுறைகளையும் மீறாமல் வாதங்களை எடுத்து வைக்க வேண்டும் என்பதை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்,

புதியவர்களுக்காக விதிமுறைகள் இங்கே.....

யாரும் யாரையும் பெயரிட்டு அழைக்கக்கூடாது.

அரசியல் அறவே பேசக்கூடாது.

அரட்டை அறவே கூடாது

ஜாதி,மதம் பற்றி பேசக்கூடாது.

நாகரீக பேச்சு மிகமிக அவசியம்.

அறுசுவையின் எல்லா விதிகளும் இந்த பட்டிக்கும் பொருந்தும்.

நடுவருக்கும் பட்டிமன்றத்தில் பங்கு கொள்ளும் மற்றும் பார்வையிடும் அனைவருக்கும் வணக்கம்.

நான் இப்ப சொல்லப் போற விஷயம் நிஜத்தில் நடந்த ஒன்று. ஆனா, சம்பந்தப்பட்டவங்க யாருன்னு கேக்காதீங்க ப்ளீஸ்

‘ஊரைச் சொன்னாலும் பேரை சொல்லக் கூடாது, பேரைச் சொன்னாலும் ஊரைச் சொல்லக் கூடாது’ என்பது சொலவடை. (அப்பாடி, பழமொழி சொல்லியாச்சு)

இதில் சம்பந்தப்பட்ட மனைவி கன்சீவ் ஆகியிருந்தார். கணவருக்கோ கொஞ்ச நாளைக்கு ஃப்ரீ ஆக இருக்கணும், என்று எண்ணம். அதனால் டாக்டரிடம் போய்க் கேட்டுட்டு, க்ளீன் பண்ணிடலாம்னார்.

மனைவிக்கு இதில் கொஞ்சமும் இஷ்டமில்லை. இந்தக் குழந்தையைப் பெற்றுக் கொள்ளலாம், அடுத்த குழந்தைக்கு ப்ளான் செய்து, தள்ளிப் போட்டுக்கலாம் என்று சொன்னார்.

இரண்டு பேருக்கும் வாக்குவாதம், கணவர் கோபித்துக் கொண்டு, வீட்டில் பேசாமல், சாப்பிடாமல் இருந்தார்.

பார்த்தார் மனைவி. அம்மாகிட்ட போய், இதான் விஷயம், இதுக்குதான் சாப்பிடாம இருக்கார் என்று சொல்லி விட்டார்.

அவர் சாப்பிடாம இருக்கும்போது எனக்கும் பசிக்கலை என்று டயலாக் வேற!

அம்மா சொல்லிட்டார் - ‘அவன் கிடக்கான், குடல் வத்தினால் குதிரை தன்னால கொள்ளு தின்னும், வீட்டில் முறைச்சிகிட்டு, ஆஃபிஸ் காண்டீனில் கொட்டிக்குவானாயிருக்கும். நீ இதுக்காக பட்டினி கிடக்காதே, பிள்ளைத்தாய்ச்சி பொண்ணு, வழியாக சாப்பிடு’ என்று சொல்லி பிடிச்சதை எல்லாம் செய்து கொடுத்தார்.

கணவருக்கும் செம டோஸ் கிடைச்சுது. அவரால கோபத்தை கண்டினியூ பண்ண முடியல. குழந்தை அழகாகப் பிறந்ததும், அம்மா, மற்றும் மனைவியின் வெற்றிப் புன்னகையும், குழந்தையின் அழகு சிரிப்பும் சேர்ந்து, அவரை தன்னை உணரச் செய்தன.

இங்கே ஒரு விஷயம் நடுவரே - மனைவி தன் கணவரைப் போட்டுக் கொடுத்தது(!) தன்னுடைய அம்மாகிட்ட இல்ல, .... கணவருடைய அம்மாகிட்ட.

எப்பூடி! - இதை ‘பசங்க’ படத்துல வர்ற குரலில் படிச்சுக்குங்க நடுவரே!

மீண்டும் வருகிறேன் நடுவரே!

அன்புடன்

சீதாலஷ்மி

நடுவருக்கும் அனைவருக்கும் வணக்கம்.

‘தனியாக இருந்தாலும் தாழ்ப்பாளைக் கிலுக்கியாவது அபிப்ராயம் கேக்கணும்’ என்பது பழமொழி!

அதாவது, நம்ம மனசுல ஏதாவது குழப்பம் இருக்குது, யாரும் இல்லையே ஒபினியன் சொல்றதுக்குன்னு தோணிச்சுன்னா - தாழ்ப்பாளை குலுக்கினால் - அதோட சத்தம் நமக்கு நல்ல பதில் சொல்றதாகத் தோணுமாம்.

பெத்தவங்ககிட்ட பிரச்னைகளை சொல்லணும், என்பதை விட, அவங்க வழிகாட்டுதலையும், அபிப்ராயத்தையும் கேட்டுக்கலாமே.

உதாரணமாக ஒரு பெண்ணுக்கு பிடிச்ச புடவையை கணவர் எடுத்துக் கொடுக்கலைன்னு வைங்க, அவர் போய் தன்னோட அம்மாகிட்ட இதை சொன்னா அவங்க என்ன சொல்வாங்க?!

’இப்படித்தான் உங்க அப்பா கூட ஒரு தீபாவளிக்கு நான் கேட்ட புடவையை எடுத்துக் குடுக்கலை, ஆனா அடுத்தாப்ல வந்த பிறந்த நாளுக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் ஆக அதே புடவையை எடுத்துக் கொடுத்து அசத்தினார். கொஞ்சம் வெயிட் பண்ணு, இதுக்கெல்லாம் மூஞ்சியைத் தூக்கி வச்சுக்காதே, அடுத்தாப்ல போனஸ் வந்ததும் புடவைக்கு பதிலா நகையாக வாங்கிக்கலாமே’ என்று சமாதானம் சொல்வார்.

அது மட்டுமா, பொண்ணு ஆசைப்பட்ட புடவையை பெத்தவங்களே தீபாவளி சீராகவும் வாங்கித் தந்து, பொண்ணு மனசையும் குளிர வச்சு, மாப்பிள்ளையையும் நிம்மதி(!)பெருமூச்சு விட வைப்பாங்க.

’நெசமாத்தான் சொல்றீங்களா’ அப்படின்னு ‘கற்றது தமிழ்’ அஞ்சலி வாய்ஸ்ல கேக்காதீங்க. நம்புங்க!!

அன்புடன்

சீதாலஷ்மி

சண்டைக்கு ஆள் சிக்கிட்டாங்கடோய் ;)

நடுவரே... இவங்க சொன்ன அதே பிள்ளை விஷயத்துக்கு நாம வருவோம் ;) எத்தனை வீட்டில் பிள்லை இல்லைன்னு அப்பா அம்மா தலையிட்டு அந்த கணவன் மனைவி உறவு கசந்து போகுது??? அவங்களே அதே பெரிய பிரெச்சனை ஆக்கி இருக்க மாட்டாங்க, சரி கடவுள் கொடுக்கும் போது கொடுக்கட்டும்னு இருப்பாங்க... ஆனா பெற்றோர் உடனே பிள்லை எங்கன்னு கேட்டு பிரெச்சனையை பெருசு பண்ணிடுவாங்க.

அம்புட்டு ஏன் நடுவரே... இதே அறுசுவையில் மாமியார் வீட்டி இப்ப பிள்ளை வேணாம்னு சொன்னனக்கன்னு வந்தவங்களை எல்லாம் நாம பார்க்கலயா? கணவன் மனைவிக்கு அடுத்து தான் பெற்றோர்... இவங்க நடுவில் அவங்க வந்தா இது போல் பிரெச்சனைகள் தான் அதிகமே அன்றி, இப்படி சமாதானம் பண்ணி சேர்த்து வைப்பவர்கள் எதிர் அணி மாமியார் போல வெகு குறைவு ;) நம்ம இந்த மைனாரிட்டி பற்றி பேச வேணாம் நடுவரே... மெஜாரிட்டி பற்றி பேசுவோம்.

புடவை விஷயத்துலையும் நான் அதிகம் கேட்ட கதையை சொல்வோம்... பொண்ணு போய் அம்மாகிட்ட சொல்றான்னு வைங்க... “என்னைக்கு நமக்கு பிடிச்சதை செய்தாங்க. இதுவே அவங்க அக்கா தங்கை கேட்டா கரக்ட்டா கூட்டிட்டு போய் மணிக்கணக்கா கடையில் நின்னு கூட வாங்கி தருவாங்க. நம்ம கூட வந்தா தான் குடையும்.”

இது எங்க சிக்கலை உண்டு பண்னும்னு நான் சொல்லவே வேணாம் தானே நடுவரே ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//டுவரே ஒருமுரை பெற்றோர் கிட்ட நம்ம ஆலோட தப்ப சொல்லிட்டோம்னா அப்புரம் அவங்க எப்படி நம்ம ஆலை மதிபங்க//

அதானே! நாமே நம்ப துணையை பற்றி பெற்றோர்கிட்ட புகார் சொன்னால் அப்புறம் மதிப்பாங்களா.. நியாயமா கேட்டிருக்காங்க..

அதுவுமில்லாம சும்மா சும்மா பிரச்சினைன்னு போய் நின்னா போதும் நீங்க வாழ்ந்ததுன்னு சொல்லி பிரிச்சிடுவங்களாம் தேவையான்னு கேட்கறாங்க!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

வாவ் சீதாம்மா வந்துட்டீங்களா! சந்தோஷமா இருக்கு :).

//கணவருக்கும் செம டோஸ் கிடைச்சுது. அவரால கோபத்தை கண்டினியூ பண்ண முடியல. குழந்தை அழகாகப் பிறந்ததும், அம்மா, மற்றும் மனைவியின் வெற்றிப் புன்னகையும், குழந்தையின் அழகு சிரிப்பும் சேர்ந்து, அவரை தன்னை உணரச் செய்தன.

இங்கே ஒரு விஷயம் நடுவரே - மனைவி தன் கணவரைப் போட்டுக் கொடுத்தது(!) தன்னுடைய அம்மாகிட்ட இல்ல, .... கணவருடைய அம்மாகிட்ட. //

அதானே பெரியவங்க சொன்னா சரியா இருக்கும். யாரோட பெற்றோர்கிட்ட சொன்னால் பிரச்சினை தீரும்னு சரியா தெரிஞ்சு வச்சிருக்காங்க அந்த பொண்ணு.

//தனியாக இருந்தாலும் தாழ்ப்பாளைக் கிலுக்கியாவது அபிப்ராயம் கேக்கணும் என்பது பழமொழி!//

ஹை பழமொழி நல்லாருக்கே! மனசுல குறிச்சு போட்டுக்கறேன் :)

//பெத்தவங்ககிட்ட பிரச்னைகளை சொல்லணும், என்பதை விட, அவங்க வழிகாட்டுதலையும், அபிப்ராயத்தையும் கேட்டுக்கலாமே.//

அதானே பெற்றோர்கள்கிட்ட அபிப்ராயத்தையும் வழிக்காட்டுதலையும் கேட்டுப் பெறுவது நல்லதுதானே!

//அது மட்டுமா, பொண்ணு ஆசைப்பட்ட புடவையை பெத்தவங்களே தீபாவளி சீராகவும் வாங்கித் தந்து, பொண்ணு மனசையும் குளிர வச்சு, மாப்பிள்ளையையும் நிம்மதி(!)பெருமூச்சு விட வைப்பாங்க.//

இந்த டீலிங் நல்லாருக்கே :)

தொடர்ந்து வந்து சொல்லுங்கம்மா இந்த குட்டிப் பொண்ணுங்களுக்கு :).

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

சண்டை போட ஆள் கிடைச்சதும் என்னா சந்தோஷம் பாருங்க :)

//அம்புட்டு ஏன் நடுவரே... இதே அறுசுவையில் மாமியார் வீட்டி இப்ப பிள்ளை வேணாம்னு சொன்னனக்கன்னு வந்தவங்களை எல்லாம் நாம பார்க்கலயா? கணவன் மனைவிக்கு அடுத்து தான் பெற்றோர்... இவங்க நடுவில் அவங்க வந்தா இது போல் பிரெச்சனைகள் தான் அதிகமே//

கணவன் மனைவிக்கு இடையே பெற்றோரே ஆனாலும் மூன்றாவது மனிதர் வருவது பிரச்சினைதானங்கறாங்க. மகப்பேறு தள்ளிப்போகும் போது கேள்விமேல் கேள்வி கேட்டு தம்பதிகளை மன உளைச்சலுக்கு உள்ளாக்குவதும் பெற்றோர்தான்னு அடிச்சு சொல்றாங்க.

//புடவை விஷயத்துலையும் நான் அதிகம் கேட்ட கதையை சொல்வோம்... பொண்ணு போய் அம்மாகிட்ட சொல்றான்னு வைங்க... “என்னைக்கு நமக்கு பிடிச்சதை செய்தாங்க. இதுவே அவங்க அக்கா தங்கை கேட்டா கரக்ட்டா கூட்டிட்டு போய் மணிக்கணக்கா கடையில் நின்னு கூட வாங்கி தருவாங்க. நம்ம கூட வந்தா தான் குடையும்.”//

பொண்ணு தன் கணவரை பற்றி போய் அம்மாகிட்ட குறை சொன்னால் அம்மாவும் இதுதான் சாக்குன்னு தன் கணவரின் (அதாங்க பொண்ணோட அப்பா) குறையை இப்படிச் சொல்லி மனசை ஆற்றிக் கொள்வாங்களாம் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

//பொண்ணு தன் கணவரை பற்றி போய் அம்மாகிட்ட குறை சொன்னால் அம்மாவும் இதுதான் சாக்குன்னு தன் கணவரின் (அதாங்க பொண்ணோட அப்பா) குறையை இப்படிச் சொல்லி மனசை ஆற்றிக் கொள்வாங்களாம் :// - அது மனசை ஆத்திக்குறதில்லைங்க... அடுத்த முறை பொண்ணு தன் கணவர் அவங்க அம்மா, அக்கா, தங்கைக்கு என்ன செய்யறார்ன்னு கவனிச்சு பார்ப்பாங்க... பொஸஸிவ்னஸ் அப்போ தலை தூக்கும். பிரெச்சனை அங்க தான் பிள்லையார் சுழி போட்டு துவங்கும். ;) அம்மா சொல்லும் வரை கூட தன் கனவர் அவங்க வீட்டுக்கு என்ன செய்யறார்ன்னு கவனிச்சிருக்க மாட்டாங்க. சொன்ன பின் தான் “தனக்கு செய்யல, அவங்களுக்கு செய்யறார்”னு கவனிப்பாங்க. இப்பவாது புரியுதா??? :’(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

புரிஞ்சிடுச்சுங்க. இப்படி விம், சபீனா எல்லாம் போட்டு விளக்கினால்தானே நடுவரோட குட்டியூண்டு தலைக்குள்ள இருக்கும் தக்குனூண்டு மூளைக்கு புரியும் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கணவர் வீட்டில் உள்ளவர்கள் நம் சொந்தங்கள் இல்லையா அவர்களுக்கு நம் கணவர் செய்வதை எண்ணி நாம் தானே பெருமை படவேண்டும்... அதை விட்டு விட்டு நாமே குறை சொன்னால் எப்படி... இந்த பிரச்னை எப்போது தலை தூக்கும் தெரியுமா நம் பெற்றோர் உன் கணவரை பார்த்தியா அவர் குடும்பத்திற்கு தான் நிறைய செய்து இருக்கிறார் உனக்கும் ஒரு புடவை வாங்கி உள்ளாரே நல்லவ இருக்கு என்று நம் பெற்றோர் சொல்லும் போது தான் நமக்குள் குழப்பம் அதிகமாகி பிரசனை வெடிக்கும்...(பெற்றோர்களை குறை சொல்ல முடியாது காரணம் அவர்களுக்கு நாம் தான் முக்கியம் ஆதலால் நமக்கு தான் முன்னுரிமை கிடைக்க வேண்டும் என்று நினைப்பார்கள்) நான் கூறியதில் ஏதும் தவறிருந்தால் மன்னித்து விடுங்கள்...

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

பெற்றோர் வழிகாட்டுதல் வேண்டும் தான்... ஆனால் கணவர் மனைவிக்கிடையே நாடக்கும் பிரச்னை அவர்களை சார்ந்தது அதை பெற்றோரிடம் சொல்லி தீர்த்துக் கொண்டால் அதன் பின் நம் துணை மேல் அவர்கள் வைத்து இருக்கும் மரியாதை குறையுமல்லவா??? அதற்கு நாமே இடம் குடுக்கலாமா சொல்ளுங்கள்???

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

மேலும் சில பதிவுகள்