நண்டு வறுவல்

தேதி: May 14, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (6 votes)

 

நண்டு - அரை கிலோ
சோம்பு - ஒரு தேக்கரண்டி
தண்ணீர் - அரை கப்
அரைத்த தேங்காய் விழுது - முக்கால் கப்
மிளகாய் தூள் - அரை மேசைக்கரண்டி
உப்பு - அரை தேக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி


 

நண்டின் ஓட்டை நீக்கி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் நண்டை போட்டு, தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் வேக வைக்கவும்.
அதனுடன் மிளகாய் தூள், உப்பு போட்டு பிரட்டவும்.
பிறகு தேங்காய் விழுது சேர்த்து கிளறவும்.
அதில் எண்ணெய் ஊற்றி நன்கு பிரட்டி விட்டு குறைந்த தீயில் வைத்து வறுத்து எடுக்கவும்.
சுவையான நண்டு வறுவல் தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்