அனைவருக்கும் வணக்கம்,
என் குழத்தைக்கு 2.5 வயது ஆகிறது....நிறைய சாக்லேட் சாப்பிட்டு இரவில் ஆசன வாயில் பூச்சி கடியால் தூங்க முடியாமல் கஷ்ட படுகிறது தயசெய்து உதவி செய்ங்க.....
வலிக்கும் போது நான் ஒரு சாக்லேட் சாப்பிடு என்பேன் அதுக்கு உடனே "பூச்சி கடிக்கும் என்று வேண்டாம்" எண்டு சொல்லி இப்ப சாப்பிட்டவில்லை ஆனாலும்இரவில் ஆசன வாயில் பூச்சி கடியால் தூங்க முடியாமல் கஷ்ட படுகிறது.....
பூச்சி & சாக்லேட்
//நிறைய சாக்லேட் சாப்பிட்டு// வந்தது இல்லை இது. குழந்தைக்கு பூச்சி தொற்றியிருக்கிறது. worm treatment கொடுக்க சரியாகிவிடும்.
குழந்தை வாயில் கை அல்லது வேறு எதையும் வைக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். நகங்களைப் பார்த்து நறுக்கிவிடுங்கள். விளையாடி முடிந்த பின்னும் டாய்லட்டிலிருந்து வெளியே வந்த உடனேயும் நினைவாக கைகளைக் கழுவி விடுங்கள். (இது பெரியவர்களுக்கும் தொற்றலாம். உங்கள் கைகளையும் சுத்தமாக வைத்திருங்கள்.)
ஃபார்மசில கேட்டுப் பாருங்க. Vermox என்று 6 டாப்லட் உள்ள பெட்டி கொடுப்பாங்க. இது threadworm, pinworm, hookworm... இது போல குறைந்தது ஆறு வகைப் புழுக்களைக் கட்டுப்படுத்தும் என்பதாக ஞாபகம். தினமும் காலை ஒன்று மாலை ஒன்றாக மூன்று நாட்களுக்குக் கொடுக்க வேண்டும். கசப்பு எதுவும் கிடையாது. பாப்பா சப்பிச் சாப்பிடுவாங்க. பிரச்சினை சட்டென்று சரியாகும்.
பிறகு ஒரு மாதத்தின் பின் ஒரு தடவை (முட்டைகள் பொரிக்கிற சமயம் ஒரு மாத்திரை மட்டும் என்று நினைக்கிறேன். சரியாக நினைவு இல்லை.) கொடுக்க வேண்டியிருக்கும். பாக்கட்டில் விபரத்தைப் படித்துவிட்டுக் கொடுங்க. கேட்டால் ஃபார்மசிஸ்ட் விபரம் சொல்லுவாங்க.
இப்போதைக்கு, படுக்கைக்கும் போகும் முன் மெல்லிய வெந்நீரில் கழுவி விட்டு தூங்க வைங்க.
worm treatment வீட்டில் இருக்கும் மீதிப் பேர் ஒன்றாக எடுப்பது நல்லது. யாருக்காவது இருந்தால் திரும்ப குழந்தைக்குத் தொற்றாமலிருக்கும்.
~~~~~~~~~~~~~~~~
அதிகமாக சாக்லெட் சாப்பிடுவதால் கெட்டுப் போகக் கூடியது பற்கள் - காலையிலும் படுக்கைக்குப் போகுமுன்னும் மறக்காமல் ப்ரஷ் செய்துவிடுங்க. அளவோடு கொடுக்கிறதுதான் நல்லது. எடைப் பிரச்சினையும் வரலாம்.
- இமா க்றிஸ்
குழத்தை சாக்லேட் சாப்பிட்டு இரவில் ஆசன வாயில் பூச்சி கடி
நன்றி அம்மா இது வரை நான் சாக்லெட் சாப்பிடுவதால் வரும் என்று நினைத்தேன்.....
விளக்கமாக சொல்லி விட்டீர்கள் நன்றி அம்மா.....
வேப்பம்கொழுந்து சாறு கொடுக்கலாமா???? அம்மா அதுவும் சரி பண்ணுமா????
நன்றி அம்மா
வேப்பங்கொழுந்து
எனக்கு இதுபற்றித் தெரியவில்லையே!
- இமா க்றிஸ்
செல்லா பாப்பாக்கு படுக்க
செல்லா பாப்பாக்கு படுக்க போகும் போது ஆசனவாயில் வேப்ப என்னை தடவி விடுங்க,அதாவது ஒரு துளி வேப்ப என்னையை எடுத்து ஒங்கலோட விரலிச் நன்றாக என்னையை தடவி அதை பாப்பாவின் ஆசனா வாயின் உள்ளே படுமாரு வையுங்கள் உல்லிருந்து பூச்சி வேளியேருவதை நீங்கலே பாக்கலாம் செல்லா குமார்
I LOVE SUNDAR
உடனடி தீர்வு டெட்டால்
குழந்தை தூங்கப்போகும் முன் அல்லது அந்த நேரத்தில் டெட்டால் ஊற்றி விட்டால் வலித்தெரியாது .
அன்பை ஒரு தடவை கொடுத்துப்பார் அது ஆயிரம் முறை திரும்ப வருவதை பார்ப்பாய்
veppa ennai marunthu
வெற்றிலை காம்பை முறித்து அதில் வேப்பெண்ணெயை தடவி குழந்தையை குப்பற படுக்க வைத்து ஆசன வாயிலில் செலுத்த வேண்டும்..4 தொடக்கம் 5 தடவை செலுத்திநாள் பூச்சி வெளியிரி விடும்.பின்னர் ஆசன பகுதியில் சிறிது வேப்பெண்ணையை பூச வேண்டும்.