ஆட்டோகிராஃப் எழுதலாம் வாங்க :)

கோடை விடுமுறை இன்னும் 2வாரங்களில் முடியப் போகிறது. குழந்தைகள் சம்மர் கேம்ப், சம்மர் கோர்ஸ்னு பிசியா இருக்காங்க. நாம குழந்தைகளாக இருந்த போது இதுபோன்ற கோடை விடுமுறைகளில் என்ன செய்தோம் எப்படி விளையாடினோம் எங்கெல்லாம் போனோம்னு அப்படியே கண்ணு முன்னாடி கொசுவத்தியை வச்சு சுத்துங்க... அப்படியே இங்கே எழுதுங்க :)

எப்படி இருக்கீங்க கவி.. நான் குழந்தையா இருக்கும் போது வீட்டில் கேரம் போர்டு விளையாடுவேன், செஸ் விளையாடுவேன், என் பெற்றோர் என்னை எங்காவது கூட்டிப் போவார்கள்..

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

நல்லா இருக்கேன் ஃபரிதா. நீங்க எப்படி இருக்கீங்க?

கேரம், செஸ் விளையாடுவீங்களா. எனக்கும் இந்த விளையாட்டுகள் பிடிக்கும்.

கோடை விடுமுறைன்னாலே கொண்டாட்டம்தானே. விடுமுறை ஆரம்பித்த உடன் பாட்டி வீட்டுக்கு வந்துடுவோம். அப்போ நாங்க மதுரையில் இருந்தோம். பாட்டி வீடு குமரி மாவட்டத்தின் ஒரு கிராமம். பஸ்ஸில் இருந்து இறங்கியதும் அங்கிருந்து 5வது வீடு எங்க வீடு. ஆனால் வீடு போய் சேர குறைந்தது அரைமணிநேரம் ஆகும். வழியில் எல்லோரும் நிறுத்தி ஆசையாய் நலம் விசாரிப்பார்கள். என் வயது தோழிகள் ரெடியாக காத்திருப்பாங்க விளையாட :)

வீட்டுக்கு போய் ஏதாவது சாப்பிட்டு உடனே வெளியே வந்துட வேண்டியதுதான். முதல் ஒருவாரம் எங்கும் எதிலும் முதலிடம் நமக்கே! லீவுக்காக வெளியூரில் இருந்து வந்திருக்கா அவளுக்காக விட்டுக் கொடுக்கணும் என்பது அந்த கிராமத்து தோழிகளின் பெருந்தன்மை :)

பாண்டி, பல்லாங்குழி, கண்ணாமூச்சி, செப்பு வச்சு விளையாடுவது, ஸ்கிப்பிங் (பலநேரங்களில் பெரிய வாழைத்தடைகள்(பட்டையான வாழைநார்கள்) தான் ஸ்கிப்பிங் ரோப்), அஞ்சுகல், ஏழுகல், அட்டி(நிறையகற்கள் பரப்பி ஆடும் விளையாட்டு), ஒத்தையா ரெட்டையா (புளியங்கொட்டைகளை வைத்து சிலவற்றை கைகளில் வைத்து கொண்டு ஒற்றையா இரட்டையா என்று கேட்டு எதிரில் இருப்பவர் கணித்து சொல்ல வேண்டும்.), ஈக்கில் (தென்னங்குச்சிகளை உடைத்து பத்து சின்ன குச்சிகளும் ஒரு பெரிய குச்சியும் வைத்து விளையாடும் விளையாட்டு), வளையல் (உடைந்த வளையல் துண்டுகள் வைத்து விளையாடுவது)... இப்படி பல விளையாட்டுகள் லிஸ்ட் ரொம்ப பெரிசு :)

அடுத்து ஆற்றில் குளியல். கோடை என்பதால் ஆற்றில் பெரிய அளவில் தண்ணீர் இருக்காது. மணல் எடுத்த குழிகளில் மட்டுமே மூழ்கி குளிக்கும் அளவுக்கு தண்ணீர் இருக்கும். டவலை வைத்து மீன் பிடித்து மீண்டும் ஆற்றில் விட்டு, சிலவற்றை கருவாடு செய்கிறோம் என்று பாறையில் போட்டு... மனதுக்கு தோன்றியபடியெல்லாம் விளையாடுவோம். குளிக்கப்போனால் வீடு திரும்ப குறைந்தது 3மணிநேரம் ஆகும்.

குடிதண்ணீருக்காக ஆற்றின் மணல் பரப்பில் கையில் இருக்கும் கிண்ணங்களினால் வட்டமாக குழி தோண்டி அதில் ஊறும் முதல் நீரை வெளியே இறைத்து விட்டு, பின்னர் ஊறும் தெளிந்த நீரை சிறிய கிண்ணத்தினால் அள்ளி எடுத்து என் சின்னஞ்சிறிய குடத்தை நிரப்பி வீட்டுக்கு எடுத்து செல்வோம். என்னவோ பெரிய அண்டா நிறைய தண்ணீரை வீட்டுக்கு சுமந்து வந்துட்ட மகிழ்ச்சி :)

இப்போ நினைத்தாலும் மனசுக்குள் மத்தாப்பூவாய் மகிழ்ச்சி.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நீங்கள் சொல்வதை கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது கவி.. உங்களின் சிறு வயதில் பயங்கரமாக என்ஜாய் பண்ணி இருக்கீங்க போல.. எனக்கு தான் இப்படிலாம் ஜாலியா இருக்க குடுத்து வைக்கல..

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

ஹாய் கவி,
அப்பாடி நினைத்தாலும் மீண்டும் அந்த வாழ்க்கை திரும்ப கிடைக்குமா?ஸ்கூல் லீவு விட்ட அன்றே பாட்டி வூருக்கு போய்டுவோம்.பிரகென்ன ஒரே Jolly தான்.எங்க தம்பி தங்கச்சி மாமா பசங்க எல்லாரும் வந்துடுவாங்க.கேள்வி கேட்க யாரும் இல்லை.நீச்சல் தெரியாது வீட்டுக்கு தெரியாமல்,கிணத்து தண்ணீல விளயாடப் போவது,மோட்டர் தண்ணில குளிச்சிட்டு ஒரெ ஆட்டம் தான்.எல்லாரும் ஒன்னா கூடி பேசிட்டு சந்தோசமா இருந்த நாட்கலை நினைத்தால் அந்த உலகதுகே போன மாதிரி இருக்கு.இப்போ எல்லோரும் வேரு வேரு திசையில இருக்கோம்.

ஆனால் இப்போதோ விவசாய நிலங்கள் எல்லாம் விளை நிலங்கள் ஆனது வேரு கதை.

Sangiselva

ஆமா ஃபரீதா சின்ன வயசில் நல்லாவே என்ஜாய் பண்ணியிருக்கோம் :).

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அந்த காலங்கள் இனி திரும்பாது கவி அதுலாம் ஒரு sweet memories....

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

பாட்டி வீடுன்னாலே கொண்டாட்டம்தானே! அதுவுல் கசின்ஸ் எல்லாரும் சேர்ந்தால் கொண்டாட்டத்துக்கு கேட்கவா வேணும்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவிசிவா நீங்க சொல்றத கேக்கவே ஜாலியா இருக்கு பா .

நான் உங்க அளவுக்கு என்ஜாய் பண்ணல பா .

அப்பா எங்கயாவது வெளிவூர் கூட்டிட்டு போவாங்க .

கொடைகானல் ,கன்னியாகுமரி ,கொச்சின் ,மூனாறு ,தேக்கடி போயிருக்கேன் பா .

அப்புறம் ஊருக்கு பக்கத்துல தான் குற்றாலம் மற்ற அருவிகள் எல்லாம் இருக்கு .அங்க போவோம் .

சிறு வயசில நாங்க ஆடாத ஆட்டமே இல்ல. கோடை விடுமுறை மட்டுமல்ல எங்களுக்கு எல்லா நாளும் கொண்டாட்டம்தான்.

பசங்க 15 பேர் இருப்பாங்க. பொண்ணுங்க 10 பேர் இருப்பாங்க

பகல்ல பசங்க கூட சேர்ந்து குச்சி கம்பு, கோலிக்காய், பம்பரம், சீட்டுகட்டு, டயர் ஓட்டுறது, காத்தாடி விடுவது சிகிரெட் அட்டை சேர்த்து விளையாடுறது இதெல்லாம் விளையாடுவோம்.

இரவு பொண்ணுங்க கூட சேர்ந்து பாண்டி, பல்லாங்குழி, கழச்சிகல், உடைஞ்ச வளையல வச்சி ஜோடி சேர்க்கிறது, ஸ்கிப்பிங், கல்லா மண்ணா, கள்ளன் போலிஸ், உள்ளே வெளியே, தத்தைக்கா புத்தைக்கா, புளியங்கொட்டை வச்சி ஒத்தையா இரட்டையா, கண்ணாம்பூச்சி இதெல்லாம் விளையாடுவோம்

பெரியவங்க கூட சேர்ந்து தாயம் விளையாடுவோம்

மதியம் வாய்க்காலுக்கு குளிக்க போவோம். நல்லா நீச்சலடிச்சு விளையாடுவோம். அங்கேயும் நீச்சலடிச்சிகிட்டே தொட்டு பிடிச்சு விலையாடுறது, எல்லாரும் தண்ணிக்குள்ள ஒளிஞ்சிகிட்டு ஒருத்தர் கன்டுபிடிக்கிறது. டைவ் அடிச்சி விளையாடுறது. இன்னும் நிறைய சொல்லிகிட்டே போகலாம். நல்லா நீச்சலடிச்சு கண்ணெல்லாம் சிவந்து அம்மா திட்டுனதுக்கப்புறம் தான் வெளியவே வருவோம்.

எல்லாம் சுகமான நினைவுகள். இப்போது ஊருக்கு செல்லும் போது நண்பர்களை பார்த்தாலும் தலையை குனிந்து கொண்டு சென்று விடுவோம். எனென்றால் நாம் பெரியவர்களாகி விட்டோமே.

இந்த விளையாட்டுகள் எனக்கு வலிமையையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் தந்தது. வெயிலிலும், தரையிலும், புழுதிக் காற்றிலும், மழையிலுமே எங்கள் பள்ளிப் பருவ நாட்கள் சந்தோசமாய் கடந்தது

அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை

குற்றாலம் அருவியில் குளிக்கறதே பெரிய சந்தோஷம் ஆச்சே சுசி!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேலும் சில பதிவுகள்