உருளைக்கிழங்கு மசாலா

தேதி: May 16, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.8 (12 votes)

 

உருளைக்கிழங்கு - ஒன்று
பெரிய வெங்காயம் - 3
சின்ன வெங்காயம் - 4
பூண்டு - 4 பல்
தனியா - அரை மேசைக்கரண்டி
மிளகாய் வற்றல் - 4
சீரகம் - ஒரு தேக்கரண்டி
கல் உப்பு - ஒரு தேக்கரண்டி
தேங்காய் துருவல் - கால் கப்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை


 

தேவையான அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.
உருளைக்கிழங்கை நான்கு துண்டுகளாக நறுக்கி 20 நிமிடங்கள் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
மிக்ஸியில் தனியா, மிளகாய் வற்றல், சீரகம் ஆகியவற்றை சேர்த்து அரைக்கவும். அதனுடன் உப்பு, தேங்காய் துருவல், கால் கப் தண்ணீர் சேர்த்து அரைத்து விட்டு, கடைசியில் சின்ன வெங்காயம், பூண்டு வைத்து ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் 3 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை போட்டு 3 நிமிடம் வதக்கவும்.
அதில் வேக வைத்த உருளைக்கிழங்கை துண்டுகளாக நறுக்கிச் சேர்த்து இரண்டு நிமிடங்கள் பிரட்டவும். அதனுடன் மஞ்சள் தூள் சேர்த்து ஒரு நிமிடம் பிரட்டிவிடவும்.
அதனுடன் அரைத்த விழுது சேர்த்து நன்கு பிரட்டிவிடவும்
மசாலா கிழங்குடன் சேர்ந்தது போல் வந்ததும் 5 நிமிடங்கள் கழித்து இறக்கிவிடவும்.
சுவையான உருளைக்கிழங்கு மசாலா தயார்.
இந்த உருளைக்கிழங்கு மசாலா குறிப்பினை <b> திருமதி. மங்கம்மா </b> அவர்கள் நமக்காக இங்கே விளக்கியுள்ளார். சமையலில் 30 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் வாய்ந்த இவரின் அனைத்து தயாரிப்புகளும் மிகவும் சுவையாய் இருக்கும். இதற்கு முன்பு வெளியான இவரது பல்வேறு குறிப்புகள் அறுசுவை நேயர்களின் மனமார்ந்த பாராட்டைப் பெற்றுள்ளது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

பிடிச்சிருக்கு. விருப்பப் பட்டியலில் சேர்க்கிறேன்.

‍- இமா க்றிஸ்