என் கணவர் வேலைக்கு அனுப்ப மாட்றார், மொபைல்ல Balance போடமாட்டார், பக்கத்து கடைக்கு மட்டும் தான் போகனும், பக்கத்துல குடியிருக்குறவங்ககிட்ட பேசக்கூடாது, யாருக்கும் மெசேஜ் பண்ண கூடாது, ஃபோன் பண்ண கூடாது, அவர் வந்ததும் அவர் மொபைல்ல இருந்து தான் பேசனும், கதவ மூடி தான் வைக்கனும், இப்படி அடுக்கிட்டே போகலாம். மொத்ததில் நான்கு சுவரே என் வாழ்க்கை. சிறு வயது முதல் நான் கூட்டு குடும்பத்தில் வாழ்ந்தவள். தனிமையே அறியாதவள். நகரத்தில் வசித்தவள், கடந்த ஆறு மாதமாக மனதிற்க்குளே வைத்து புழுங்குகிறேன். நான் என்ன சொய்ய? காதல் திருமணத்தால் யாருடைய supportum இல்ல. மற்றபடி எது கேட்டாலும் வாங்கி தருவார். அன்பா இருப்பார். அவர் கடவுள் பாதி மிருகம் பாதி. ஆனால் நான் மனிதனை எதிர்பார்க்கிறேன். எதிலும் ஈடுபாடு இல்லாமல் போய்விட்டது. இனையத்தில் உரையாடலாம் என்று அவருக்கு தெரியாது. சும்மா செய்திகள பார்க்க மட்டுமே முடியும் என்று தான் இந்த வசதியை மட்டும் தந்தார். நான் இப்படி எல்லாம் அனுப்புவதை ரகசியமாக செய்கிறேன். history யை அழித்து விடுவேன். அறுசுவை மட்டுமே எனக்கு ஆறுதல். வேறு எந்த தொல்லையும் தராமால் தாங்குகிறார் என்னை. இந்த காரணத்தால் அவருக்கு பிடித்த மாறி நடந்து கொள்கிறேன். ஆனால் எவ்வளவு நாள் நான் தனிமையில் வாடுவேன்? பைத்தியம் பிடிப்பது போல் உள்ளது. தற்கொலை செய்யவும் பயமாக உள்ளது. இதை அவரிடம் சொல்லியும் பலனில்லை. இதிலிருந்து எப்படி வெளி வருவது? எதிலுமே நாட்டமில்லை. நடை பிணமாக வாழுகிறேன். குழந்தைக்காக காத்திருக்கிறேன். உங்களுக்கு தெரிந்த வழிகளை கூறுங்கள் தோழிகளே காத்திருக்கிறேன். நன்றி.
ashvitha
தற்கொலை என்பது மடத்தனமான முடிவு.. அப்படி ஒரு எண்ணம் இருந்தால் அதை அடியோடு மறந்து விடுங்கள..
பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith
ashvitha
உங்கள் கணவரை உட்கார வைத்து தணிமையினால் நீங்கள் படும் மன வேதனையை அவருக்கு புரிய வையுங்கள்.. அவர் உங்களை காதலித்து திருமணம் செய்தவர் தானே கட்டாயம் உங்களை புரிந்து கொள்வார்..
பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith
ashvitha
நீங்கள் அவர் மேல் வைத்திருக்கும் அவருக்கு புரிய வையுங்கள்.. அவர் உங்களை முழுமையாக புரிந்து கொள்ளும் படி நடந்துகொள்ளுங்கள..
பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith
தயவு செய்து எந்த ஒரு தவராண
தயவு செய்து எந்த ஒரு தவராண முடிவுக்கும் வந்து விடாதீர்கள் அஷ்விதா.. இறைவனிடம் உங்களுக்காக நான் பிரார்தணை செய்கிறேன.. விரைவில் உங்கள் பிரச்சனை சரியாகி விடும.. கவலை படாதீர்கள்
பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith
ashvitha
அவரிடம் அதிகம் பேசுங்கள். உங்கள் மனக்குறையை அவரிடம் சொல்லுங்கள். நீங்கள் எவ்வளவு அவரை விரும்புகிறீர்கள் என்பதை தெரியப்படுத்துங்கள்.
ஏதாவது ஒரு நிகழ்வு அவரை பாதித்திருக்கலாம். அதனால் கூட இவ்வாறு நடந்து கொள்ளலாம். தான் செய்வது தவறு என்று கூட தெரியாமல் இருக்கலாம். அவருக்கு புரிய வையுங்கள். முடிந்தால் கவுன்சிலிங் சென்று வாருங்கள். நிச்சயம் தீர்வு கிடைக்கும்.
சில ஸ்பெஷல் மனிதர்களை சிலரால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். அவரை உங்களால் மட்டுமே கவனித்துக் கொள்ள முடியும் என்பதால் அவரை குழந்தையாக உணருங்கள். ஒரு அம்மாவைப் போல் கவனித்துக் கொள்ளுங்கள்.
தனிமையில் இருக்கும் போது உங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளும் விதமாக எதாவது செய்யுங்கள். அறுசுவையில் ஏராளமான கைவினை செய்முறை உள்ளது. அதை செய்து பழகுங்கள். நேரம் போவதே தெரியாது.
உங்களின் கணவருடன் சந்தோசமாக வாழ வாழ்த்துக்கள்
அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை
ஹாய் அஷ்விதா, எப்படி
ஹாய் அஷ்விதா, எப்படி இருக்கீங்க..?? உங்க பதிவை படிக்க நேர்ந்தது. உங்க மன உணர்வை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.. ஆனால், எனக்கு ஒரு சந்தேகம். நீங்கள் காதலித்து தானே திருமணம் செய்து கொண்டீர்கள்.. ?? ஆச்சர்யமாக இருக்கிறது.. காரணம்.. உங்கள் இருவருக்குள்ளும் காதலுக்கு அடித்தளமான "புரிதல்" (புரிந்து கொள்ளுதல்) இல்லை..அவர் இப்படி நடந்து கொள்வதற்க்கு முக்கிய காரணமே.. அவர் உங்கள் மேல் வைத்திருக்கும் அளவுகடந்த அன்புதான். இதை Possessiveness என்று கூட சொல்லலாம்.
காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!
Ashvithaa...
//என் கணவர் வேலைக்கு அனுப்ப மாட்றார்// அவர் தான் நன்றாக சம்பாதிக்கிறார் அல்லவா?? பிறகு, நீங்கள் ஏன் வேலைக்குச் செல்ல வேண்டும் என்று விரும்புகிறீர்கள்...
காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!
ஹாய் அஷ்விதா ரொம்ப கவலை
ஹாய் அஷ்விதா ரொம்ப கவலை படாதிங்கபா, இதை எல்லாம் நீங்க சந்தோசமா நினைச்சுக்கோங்கப்பா, என்னடா இவ இப்படி சொல்லுராலேனு நினைக்கீறிங்களா, நா ஏ இப்படி சொல்ரேனா இதை எல்லாம் ஒங்க கஸ்பன்ட் ஏ சொல்ராருனா அவருக்கு ஒங்க மேல ரொம்ப பிரியம், நீங்க அவருக்கு மட்டும்தானு நினைக்கிறாரு,நீங்க வேர யார் கூடயாவது பேசுனா அவரு கூட டைம் ஸ்பென்ட் பன்ரது கொரஞ்சுடுமோனு நினைக்கிராருபா,இந்த மாதிரி எவ்வளவுக்கு எவ்வளவு கேல்வி கேக்குராரோ அவ்வளவுக்கு அவ்வளவு பாசம் வச்சுருக்குராருபா,நீங்க சொல்ரத பாத்தா அவரு ரொம்ப நல்லவரு மாதிரிதாபா தெரியுது,ஒரு உதாரனம் சொல்லட்டுமாபா ஒரு குழந்தை வந்து அவங்க அம்மாட்டா வேர ஒரு குழந்தை இருக்குரதையோ இல்ல விலையாடுரதையோ விரும்பாதுங்கபா அதே மாதிரிதாபா ஒங்க கஸ்பன்ட்டும்.ஒங்கலுக்கு குழந்தை இல்லைனு கவலப்படாதிங்க பா,இப்பொழுதிக்கு ஒங்க கஸ்பன்ட்டுதா ஒங்கலுக்கு குழந்தை ஒ கே வா அஷ்விதா, நீங்க இதை எல்லாம் நினைத்து தப்பான முடிவுக்கு எதும் போய்ராதிங்கபா,இன்னும் கொஞ்ச நாள்ல குழந்தை பொரந்தோனா அவரே மாரிடுவாருப்பா,நீங்க அது வரைக்கும் கஸ்ப்ன்ட் கூட வாழ்க்கையை அனுபவிங்க அஷ்விதா
I LOVE SUNDAR
Asvitha....
கவலைபடாதீங்க . நீங்க அவர் கூட உக்கார்ந்து பேசுவதுதான் ஒரே வழி கவலையாய் இருப்பது போலவே இருங்கள் அப்போது அவர் காரணம் கேட்கும் போது உங்கள் பிரச்னையை சொல்லுங்கள் . உண்மையான அன்பு இருந்தால் நீங்கள் கவலைப்படுவதை பொறுக்க மாட்டார் . இப்பிடி உங்க கவய மறச்சு சந்தோசமா நடந்தீங்க எண்டா அவருக்கு எப்படி புரியும் ? 2 நாளைக்கு முகத்தை தூக்கி வையுங்க . கவலையா இருங்க . அவர் கட்டாயம் என்ன எண்டு கேட்பார் . அப்ப உங்களுக்கு அவரை எவளவு பிடிக்கும் என்று சொல்ல தொடங்குங்க .அபிறகு ஆனாலும் கவலையா இருக்கு எண்டு சொல்லி மெதுவா விசயத்த சொல்லுங்க . எல்லாம் சரியாக வாழ்த்துக்கள் .
அஷ்விதா
அஷ்விதா நான் உங்க கூட ஒருமுறை பேசி இருக்கேறேன் .உங்க தயார் விபத்தில் உங்களை விட்டு பிரிந்ததாக சொன்னிங்க .கவலை படாதீங்க பா .உங்க மேல உள்ள அன்புதான் possassiveness அ வெளிவருது .அளவுக்கு அதிகமான அன்பை பார்த்து யாராவது தற்கொலை செய்து கொள்வாகளா ?
என் கஸின் சிஸ்டரும் காதல் திருமணம் தான் .அவள் காதலிக்கும்போதே அவள் கணவர் அப்படிதான் .அவள் ரொம்ப வெள்ளையா இருப்பா .அவளை எங்கயும் போக கூடாது என்பார் .வெயிலில் நடக்கும்போது கால் எடுப்பாக தெரிகிறது ஷூ பூடு என்பார் ,பக்கத்து வீட்டிற்க்கு போகும்போதும் வெளிநாட்டில் இருக்கும் அவருக்கு phone பண்ணி சொல்லணும் .வந்து சேர்ந்த உடனே ஒரு phone .மறுபடி அங்க இருந்து வீட்டுக்கு கிளம்பும்போது ஒரு phone .வீட்டுக்கு போய் செர்த்து ஒரு phone .இப்படியே தான் செய்வாள் .இதுக்கும் அவள் வீடு எங்க வீட்டுக்கு ரொம்ப பக்கம் .எங்க வீட்டுக்கு வந்தாலும் அப்படிதான் செய்வாள் .எங்க ஊரிலிருந்து kகுற்றாலம் ரொம்ப பக்கம் .அடிக்கடி போவோம் .அனால் அவளுக்கு குற்றாலம் போக அனுமதி இல்லை .எப்பவாவது போனாலும் குளிக்க கூடாது .ரொம்ப neeraநேரம் வெளில நின்னு vedவேடிக்கை பார்ர்க்க கூடாது .இப்படி rநெறைய ரூல்ஸ் .நான் அவளிடம் கேட்டேன் ஏன் இப்படி உன்னிடம் கடுமையாக நடந்து கொள்கிறார் என்று .அதற்க்கு அவள் "என்னது கடுமையா ?இல்லவே இல்லை .அவர் என் மீது அன்பை பொழிகிறார் .என்னிடம் அளவுக்கு அதிகமான உரிமையெய் காட்டுகிறார் .அது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு .possesiveness அன்பின் ஒரு பகுதி .இதுனாலேயே நான் அவரை அதிக மாக காதலிக்கெரென் .அவர் என்னை இன்னும் அதிகமாக காதலிக்கிறார் "னு சொல்லுவா .இப்போ அவர்களுக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை இருக்கிறது .இன்னும் அப்படிதான் இருக்கிறார்கள் .