குறிப்பை எப்படி அனுப்புவது

தயவு செய்து உதவுங்கள் தோழிகளே.. எனது குறிப்பை எப்படி அருசுவையில் பதிவிடுகிறது??

please தெளிவாக விளக்கி சொல்லவும்.......

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

http://arusuvai.com/tamil/node/14765..intha link il sendru paarungal..

izhapatharku ondrume illai,but jeipatharkku intha ulagame irukirathu

கீழ ஓரத்துல ஆறுசுவை என்ற தலைப்புக்கு கீழே தொடர்புக்கு னு ஒரு option இருக்கு பாருங்க பா .அதுல போய் பார்த்த உங்களுக்கு உதவிய இருக்கும்னு நினைக்கிறேன் .

-

கண்டிப்பா பாத்துட்டு சொல்றேன் ஃப்ரெண்ட்ஸ்

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

சமையல் குறிப்புகள் அனுப்புவது குறித்து பலமுறை இங்கே பேசி இருக்கின்றோம். புதிய உறுப்பினர்களுக்காக மீண்டும் ஒருமுறை இங்கே சில விசயங்களை குறிப்பிட விரும்புகின்றோம்.

அறுசுவையில் வெளியாகும் படங்கள் இல்லாத குறிப்புகளை உறுப்பினர்களே நேரடியாக சேர்க்கின்றார்கள். அவற்றை அறுசுவை அலுவலகத்தில் உள்ளவர்கள் சேர்ப்பது கிடையாது. அப்படி உறுப்பினர்கள் நேரடியாக சேர்ப்பதற்கு, அவர்களுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்படுகின்றது. அவர்கள் "கூட்டாஞ்சோறு உறுப்பினர்கள்" என்ற பிரிவில் சேர்க்கப்படுவார்கள். அதன் பின்னரே அவர்கள் நேரடியாக குறிப்புகள் சேர்க்க முடியும். இதுதான் நடைமுறையில் இருந்து வந்தது. ஆனால், சமீபகாலமாக கூட்டாஞ்சோறு உறுப்பினர்கள் சேர்க்கையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம். இதற்கு காரணம், உறுப்பினராவதற்கு நிறைய பேர் ஆர்வம் தெரிவித்தாலும், உறுப்பினர் ஆன பிறகு அவர்கள் கொடுக்கும் குறிப்புகள் ஏற்கனவே அறுசுவையில் நிறைய முறை இடம்பெற்ற குறிப்புகளாக இருக்கின்றன. ஒரே குறிப்பு சிறுசிறு மாற்றங்களுடன் மீண்டும் மீண்டும் வரும்போது, பார்வையாளர்கள் வெறுப்படைகின்றார்கள்.

ஏற்கனவே இடம்பெற்ற குறிப்புகளை வழங்கக்கூடாது என்று வலியுறுத்திய பிறகுதான் புதிய உறுப்பினர்களை சேர்க்கின்றோம் என்ற போதிலும், அந்த குறிப்பு இடம்பெற்றுள்ளதா என்பதை தேடிப் பார்க்காமலே புதிய குறிப்புகளை சேர்க்கின்றனர். இந்த பிரச்சனை ஒருபுறம் இருக்க, படங்கள் இல்லாத குறிப்புகளைவிட படங்களுடன் கூடிய குறிப்புகளையே வருகையாளர்கள் அதிகம் பார்வையிடுகின்றனர். அதற்குதான் வரவேற்பு அதிகம் இருக்கின்றது என்ற காரணத்தால், அறுசுவையில் இடம்பெற்றுள்ள அனைத்து குறிப்புகளையும் படங்களுடன் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். எனவே, படங்கள் இல்லாத எழுத்துக் குறிப்புகளை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து வரும் நடவடிக்கையையும் எடுத்து வருகின்றோம். அதன் ஒரு கட்டமாக, கூட்டாஞ்சோறுக்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம்.

குறிப்புகள் அனுப்ப விரும்புவோர், தயவுசெய்து படங்களுடன் கூடிய குறிப்புகளை மட்டும் இனி அனுப்புமாறு அன்புடன் வேண்டிக்கொள்கின்றோம். அறுசுவையில் இடம்பெற்றுள்ள மற்றவர்களது எழுத்துக் குறிப்புகளைக்கூட நீங்கள் செய்து பார்த்து படங்கள் எடுத்து அனுப்பலாம். அதில் தவறு இல்லை. அப்படி எடுத்து அனுப்பும்போது, இவரது குறிப்பைப் பார்த்து செய்தது என்று குறிப்பிட்டு அனுப்பவும். படங்கள் இல்லாத வெறும் எழுத்துக் குறிப்புகளை தயவுசெய்து இனி அனுப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றோம்.

படங்களுடன் கூடிய குறிப்புகளை எப்படி அனுப்பவேண்டும் என்பதற்கான விளக்கங்கள் கீழ்க்கண்ட பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பார்வையிடவும்.

http://www.arusuvai.com/tamil/node/14765

உங்கள் குறிப்புகளை arusuvaiadmin அட் ஜிமெயில் டாட் காம் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும். ஏற்கனவே இடம்பெற்றுள்ள குறிப்புகளை தயவுசெய்து அனுப்ப வேண்டாம். குறிப்புகளை எடிட் செய்து வெளியிடுவதற்கு சற்று கால அவகாசமும் கொடுத்திடுங்கள். குறிப்புகள் அனுப்பிய மறுநாளே அவை வந்துவிடும் என்று எதிர்பார்க்க வேண்டாம். குறிப்புகள் வந்து சேரும் வரிசைப்படி வெளியிடப்படுகின்றன. சில நேரங்களில் தாமதம் ஏற்பட்டால் பொறுத்தருளவும்.

மிக்க நன்றி கண்டிப்பாக நீங்கள் சொன்னது போல் அனுப்புகிறேன்.... மீண்டும் ஒரு முறை நன்றி சொல்லி கொள்கிறேன்....

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

எனது குறிப்பு உங்களை வந்தடைந்தது என்பதை நான் எப்படி தெரிந்துகொள்வது... மின்னஞ்சலில் உங்கள் அஞ்சல் அனுப்பப்பட்டு விட்டது என்று வந்தால் போதுமா?

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

மேலும் சில பதிவுகள்