கண் பொங்குகிறது

வணக்கம் ! நான் மிக கவலையாக இருக்கிறேன். என் 4 வயது மகளுக்கு கண் இரவில் பொங்கி மூடி விடுகிறது.சிவப்பாகவும் இருக்கிறது . இரண்டு நாட்களாக அவஸ்தை படுகிறாள். 2 நாட்களாக ஸ்கூல் போக வில்லை . சளி இருமல் இருக்கிறது. என்ன செய்யலாம் யாராவது சொல்லுங்கள் pls....

ஈஸ்வரி மூர்த்தி உங்க பொண்ணுக்கு மெட்ராஸ் ஐ ஆ இருக்கும்..டாக்டர் கிட்ட காமிங்க...அவரு ஐ ட்ராப்ஸ் கொடுப்பாங்க அதை 3 நாள் ஃபாலோ பண்ணினாலே போதும் சரியாகிடும்...... இல்லையென்றால் உடல் சூடா இருந்தால் கூட இது மாதிரி கண் பொங்கி கொண்டே இருக்கும் பா....தினமும் தலைக்கு குளிக்க வையுங்க ...குடிக்க தண்ணீர் நிறைய குடுங்க....

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

கவலை படாதிங்க பா... என் நாத்தனார் குழந்தைக்கு பிறந்த 20 நாட்களில் இப்படி கண் பொங்கியது டாக்டரிடம் காட்டியதற்கு அவர் உடல் சூடு காரணமாக இப்படி ஆகிறது என்று கூறினார்.... பின் அதற்கு ற்றேத்மென்ட் எடுத்ததும் சரி ஆகி விட்டது நீங்களும் உங்கள் டாக்டரிடம் குழந்தையை காட்டுங்கள் விரைவில் குழந்தை குண மடைந்து விடும்... நானும் உங்கள் குழந்தைக்காக இறைவனை பிரார்திர்த்துக் கொள்கிறேன்....

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

தோழிகள் கவிதா, பரிதா ... உங்கள் பதிலுக்கு நன்றி. என் பாப்பா மருந்து நாளே ஓடிடுவா .. அதிலும் கண்ல எப்படி போடுறது... தினமும் காலைல தலை குளிக்க முடியலைனாலும், வாரம் ஒரு முறை தான் முடியும் பா. நான் என்ன செய்றது? நீங்க சொன்ன படி நான் பார்த்துக்குறேன் பா. எங்க ரொம்ப வெயில்... நிறைய தண்ணீர் குடிக்க சொல்றேன். உங்கள் பதிலுக்கு மிக்க மிக்க நன்றி பா....

thoozi enakku anubavam anatha solren try panni parunga
udal soodala appadi aguthu,thalaiku kulika vaiyunga
sotru katralai chinna peace cut pannunga 2 peace
thol eduthudunga nalla 7 times kazhuvunga
1 ru sizela irukanum 2
appuram 10 min kan mooda solli vaiyunga
appuram eduthu otrunga ithe pol eve 1 time pannunga
kidaikala tomato 2 peace 1 ru sizela eduthu panla
illaina cucumber la ithe pol panlam ellame control pannum
en paiyanuku ippadithan irunthathu ithe pannen sariachu

இரவில் சிறிய மெல்லிய துணியில் சிறிது சீரகம் எடுத்து முடிச்சு போல் கட்டி ஒரு கிண்ணத்தில் கொஞ்சம் சுத்தமான தண்ணீர் ஊற்றி ஊறவிட்டு காலையில் அந்த தண்ணீரினால் அந்த துணி முடிச்சின் உதவியால் கண்களில் ஒற்றி கழுவவும்..

வணக்கம் தோழிகளே.... பதில் அளித்த அனைவருக்கும் நன்றி. என் பாப்பாக்கு இப்போது கொஞ்சம் சரி ஆகி விட்டது, நான் டாக்டரிடம் சென்று காமித்தேன். இன்று அவள் ஸ்கூல் சென்றாள். நன்றி நன்றி

மேலும் சில பதிவுகள்