ப்ளாஸ்டிக் பாட்டில் ஃப்ளவர்ஸ்

தேதி: May 22, 2013

5
Average: 4.2 (10 votes)

 

ஒரு லிட்டர் ப்ளாஸ்டிக் பாட்டில்
சைனீஸ் லெக்கர் குயிக் ட்ரையிங் (Chinese Lacquer Quick Drying) - விரும்பிய நிறத்தில்
ப்ரஷ்
கத்தரிக்கோல்
டிசைன் துணி
கம்
பஞ்சு
க்ரீன் டேப்
தடிமனான கம்பி

 

தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
பாட்டிலைக் கழுவி காயவைத்து மூடியுடன் கூடிய பகுதியை 3 இன்ச் அளவு நீளத்திற்கு வெட்டி எடுத்துக் கொள்ளவும். வெட்டிய பகுதியில் இதேபோல் இதழ்களை வெட்டி, அதன் ஓரங்களை வளைவாக வெட்டிக் கொள்ளவும்.
படத்தில் காட்டியது போல மூடியுள்ள மேற்பகுதியில் பெயிண்ட் செய்து, அரை மணி நேரம் காயவிடவும்.
காய்ந்ததும் இவ்வாறு இருக்கும்.
மூடியில் இதேபோல் துளையிட்டு, அதன் வழியாக கம்பியை நுழைத்து மூடியின் நடுப்பகுதிக்குள் மாட்டிவிடவும்.
பூவின் தண்டு போல் உள்ள கம்பியிலும், மூடியிலும் க்ரீன் டேப் சுற்றி விடவும். அல்லது க்ரீன் பெயிண்ட் செய்யவும்.
2 இன்ச் நீளமும், 2 இன்ச் அகலமும் கொண்ட டிசைன் துணி ஒன்றில் சிறிது பஞ்சினை வைத்து மொட்டு போல தைத்துக் கொள்ளவும்.
அதை மூடியின் உட்பகுதியில் கம் தடவி ஒட்டிவிடவும்.
கண்ணைக் கவரும் ப்ளாஸ்டிக் பூ தயார். இதை போன்று செய்த மற்ற பூக்களையும் இதில் காணலாம். பெயிண்டிற்கு பதிலாக ஒவ்வொரு நிறத்திலும் கிலிட்டர் பூசி காய வைத்தால் ரிச் லுக் ப்ளாஸ்டிக் ஃப்ளவர்ஸ் ரெடி.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

சூப்பரா இருக்கு பிளாஸ்டிக் பூ.... எனது வாழ்த்துக்கள்....

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

Very very very nice pa.I like it.

ஷனா பிளாஸ்டிக் பூக்கள் ரொம்ப அழகாக இருக்குது. வர்ணத் தெரிவுகள் அற்புதம். மேலும் பல குறிப்புக்கள் தர வாழ்த்துக்கள்.

அன்புடன்
சியாமளா

அழகா இருக்கு ஷானாஸ்.

‍- இமா க்றிஸ்

very nice pa

முதல் வாழ்த்துக்கு நன்றி.பரீதா பாசித்..

சுசி உங்களுக்கும் எனது நன்றிகள்

ஷியாமலா உங்கள் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.தொடர்ந்து வரும் குறிப்புகளை பார்த்து பதில் தாருங்கள்.

Eni enga veetil plastic bottles will convert into art things.Thanks shanaz.