ப்ரெட் மேக்கர் பற்றீ தெரிந்தவர்கள் கூறுங்கள்

ப்ரெட் மேக்கர் பற்றீ தெரிந்தவர்கள் கூறுங்கள்

வாங்கியாயிற்றா? ப்ரெட் மேக்கர் மானுவல் பாருங்க. மாடலுக்கு மாடல் வித்தியாசமாக இருக்கும்.

ஒரு தடவைக்கு ஒரு லோஃப் கிடைக்கும். பயனுள்ளதாக இருக்கிறது. விதம் விதமாக சுடச்சுட ப்ரெட் சாப்பிட முடிகிறது. என்ன ப்ரெட் என்கிறதைப் பொறுத்து நேரத்தைக் கணக்குப் பார்த்து மாவு & மீதிப் பொருட்களை முன்னாலேயே (சரியான ஒழுங்கில் போடுறது முக்கியம்) போட்டு விட்டால் அது தன்னால் செய்து முடிக்கிறது. பாத்திரம் எல்லாம் அதிகம் கழுவ இருப்பதில்லை. வீட்டில் யார் வேணுமானாலும் போட்டுருவாங்க. என்னைப் பார்த்துட்டு இருப்பது இல்லை.

பீட்ஸா, பேஸ்ட்ரி மாவு கூட இதுல போட்டு குழைச்சு எடுக்கலாம்.

இந்த ப்ரெட் குறிப்பு பாருங்க. http://www.arusuvai.com/tamil/node/25128 (ஆனா நான் எப்பவும் இடைல திறக்கிறது கிடையாது. கடைசில ப்ரெட்டை வெளியே எடுக்கிறப்ப padal ஐ எடுப்பேன். வீட்டிற்குத் தானே. நடுத் துண்டு எனக்கு. ;) )
இதையும் பாருங்க. http://www.arusuvai.com/tamil/node/20583
~~~~~~~~~~~~
த்ரெட் தலைப்புல உங்க பேர்தான் இருக்கு. ;) 'ப்ரெட் மேக்கர்' என்று மாற்றுங்க. மாற்றினால் பார்த்துட்டு சுஸ்ரீ வருவாங்க. அதுக்குள்ள வேற ஏதாவது கேட்க இருந்தால் பதிவுசெய்து வையுங்க.

‍- இமா க்றிஸ்

ரொம்ப நன்றி இமா.என்ன ப்ரான்ட் என கேட்க வேண்டும்.எவ்வளவு ஆகும்.

அன்புடன்,
சுபா

வாழ்க வளமுடன்.

Bread Maker eppadi vangaradhu?

Arise awake and stop not till the goal is reached.
- Vivekananda

அட என்னவொரு coincidence?!, நீங்க சொன்னமாதிரியே வந்திருக்கேன் இமா!, ஆனால் 7-8 மாதம் கழித்து! :-) எதேச்சையா இன்னைக்கு கேள்வி முகப்பில் வந்ததால், இந்த த்ரெட்டை பார்த்தேன்!

அன்புடன்
சுஸ்ரீ

மேரி,
ப்ரெட் மேக்கர் பற்றி எல்லாமும் இமாவே மேலே சொல்லிட்டாங்க, லிங்க்ஸ்ம் கொடுத்திருக்காங்க! அப்புறம் ப்ரெட் மேக்கர் வாங்கினிங்களா?! எதாவது சந்தேகம் இருந்தா கேளுங்க.

------

சொல்லுங்க Charvii,

எதாவது ஸ்பெசிபிக் ப்ராண்ட் வாங்க நினைத்தால், அதை போய் கடைகளில் பாருங்கள். மற்ற ப்ராண்ட்ஸ்ம் கூட பாருங்க, அவற்றில் உள்ள வித்தியாசங்கள், கூடுதல் ஃப்யூசர்ஸ் தெரிந்துகொள்ள உதவியாக இருக்கும். கூகுளில்கூட கொஞ்சம் ரிசர்ச் பண்ணி தெரிந்துகொள்ளலாம். வேறு எதேனும் சந்தேகம் இருந்தாலும் கேளுங்க.

அன்புடன்
சுஸ்ரீ

மேலும் சில பதிவுகள்