தேதி: May 24, 2013
வாட்டர் பாட்டில் - ஒன்று
உல்லன் நூல் - கருப்பு, வெள்ளை
க்ளூ
கத்தரிக்கோல்
பட்டன்ஸ்
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும். கூடை எந்த அளவிற்கு உயரமாக வேண்டுமோ அந்த அளவிற்கு வாட்டர் பாட்டிலை இரண்டாக வெட்டி அடிப்பகுதியை எடுத்து, சம அளவு இடைவெளி விட்டு பாட்டிலில் மேலிருந்து கீழாக வெட்டவும். அடிப்பகுதியில் கடைசி வரை வெட்டாமல் கவனமாக வெட்டவும்.

பாட்டில் அசையாமல் இருக்க அதன் நடுவில் ஒரு க்ளாஸ் வைத்துக் கொள்ளவும். படத்தில் உள்ளது போல் கருப்பு உல்லன் நூலை எடுத்து பாட்டிலில் மேலிருந்து கீழாக வெட்டி வைத்துள்ள துண்டுகளில் விட்டு, உள்பக்கமும், வெளிப்பக்கமுமாக மாற்றி மாற்றி சுற்றவும். ஆரம்பித்த இடத்திற்கு வந்தபின்பு கருப்பு நூல் ஆரம்பித்த இடத்திலிருந்து வெள்ளை நூலையும் இதேபோல சுற்றவும். கருப்பு நூல் உள்பக்கம் இருந்தால், வெள்ளை நூல் வெளிப்பக்கம் இருக்கும்.

இதேபோல் பாட்டில் முழுவதும் இரண்டு நூல்களையும் மாற்றி மாற்றி சுற்றி முடிக்கவும்

நூல் சுற்றி முடித்ததும் மேலே மீதமுள்ள ப்ளாஸ்டிக் துண்டுகளை உள்பக்கமாக மடித்து ஒட்டிவிடவும்

வெட்டிய பாட்டிலின் மேல் பகுதியிலிருந்து படத்தில் உள்ளது போல் இரண்டு துண்டுகள் வெட்டி எடுக்கவும்.

இந்த துண்டுகளை கூடையில் இரண்டு பக்கமும் கைப்பிடிகள் போல் ஒட்டி, அதன் முனையில் பட்டன்ஸ் ஒட்டி அலங்கரிக்கவும்.

அழகிய மினி கூடை தயார்.

Comments
கூடை
அழகாக செய்திருக்கீங்க கலா.
- இமா க்றிஸ்
கலா
அழகா இருக்கு கலா.. வாழ்த்துக்கள்..
பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith
கலா ரொம்ப அழகாயிருக்கு. பா
கலா ரொம்ப அழகாயிருக்கு. பா
கலா அப்படியே கைப்பிடிக்கும்
கலா அப்படியே கைப்பிடிக்கும் நூல் சுற்றியிருக்கலாமே பொருத்தமாயிருக்கும்னு தோணுது.
பாட்டில் கூடை
குறிப்பை வெளியிட்ட டீமிற்கு மிக்க நன்றி :)
Kalai
இமா ஆன்டி
மிக்க நன்றி :)
Kalai
ஃபரிதா
மிக்க நன்றி :)
Kalai
நிகி
மிக்க நன்றிப்பா..கை பிடிக்கும் நூல் சுற்றலாம்.ரீசைக்கிள்டுன்னு தெரிய நூல் சுற்றாமல் விட்டேன்.
Kalai
அழகாக உள்ளது
அழகாக உள்ளது