தேதி: May 25, 2013
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
இந்த சோயா மஞ்சூரியன் திருமதி. சுபா ஜெயபிரகாஷ் அவர்களின் குறிப்பை பார்த்து செய்தது.
சோயா (மீல் மேக்கர்) உருண்டைகள் - 100 கிராம்
கடலை மாவு - ஒரு தேக்கரண்டி
மைதா - ஒரு தேக்கரண்டி
கார்ன் ஃப்ளார் - ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
அஜினோமோட்டோ (விரும்பினால்) - கால் தேக்கரண்டி
குடை மிளகாய் - ஒன்று
பெரிய வெங்காயம் - ஒன்று
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - 5 பல்
பச்சை மிளகாய் - 3
சிவப்பு கலர் பொடி - சிறிது
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
வெங்காயத்தாள் - சிறிதளவு
வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் குடைமிளகாயை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் பாதி அளவு நீரை ஊற்றி கொதிக்கவிட்டு, அதில் சோயாவைப் போட்டு 2 நிமிடங்கள் வைத்திருக்கவும். பிறகு அதை குளிர்ந்த நீரில் 2 முறை அலசிவிட்டு தண்ணீரை வடிக்கட்டி எடுத்து வைக்கவும்.

மற்றொரு பாத்திரத்தில் மைதா மாவு, கடலை மாவு, கார்ன் ஃப்ளார், மிளகாய் தூள், உப்பு, கலர் பொடி ஆகியவற்றை ஒன்றாக கலந்து கொள்ளவும். இந்த கலவையை வேகவைத்து எடுத்த சோயா மீது தூவி சிறிதளவு தண்ணீர் தெளித்து பிசறி வைக்கவும்.

பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசறி வைத்திருக்கும் சோயாவை போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். இதேபோல் மீதமுள்ள சோயாவையும் பொரித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

மற்றொரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடேறியதும், பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

அதனுடன் பொடியாக நறுக்கிய குடைமிளகாய், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.

அனைத்தும் நன்கு சுருள வதங்கியதும் பொரித்த சோயா உருண்டைகளை சேர்த்து கிளறிவிடவும்.

பிறகு கார்ன் ஃப்ளாருடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கரைத்து, சோயா கலவை மீது ஊற்றி கிளறிவிட்டு 2 நிமிடங்கள் கழித்து இறக்கிவிடவும்.

சுவையான சோயா மஞ்சூரியன் தயார். பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் தூவி பரிமாறவும்.

Comments
சோயா மஞ்சூரியன்
paarukum pothe saapida thonuthu super
receipe
how to make an spicy snack mixture.
receipe
how to make an spicy snack mixture.
சோயா மஞ்சூரியன்
நேற்று செய்து பார்த்தேன். நன்றாக இருந்த்தது. சிக்கன் வறுவல் சாப்பிட்டது போல் இருந்த்தது. உங்கள் குறிப்பிற்கு மிக்க நன்றி
அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை