பட்டிமன்றம்-90 *நட்பிற்கு சுவை சேர்ப்பது முழுமையான பகிர்வா? இல்லை அளவான பகிர்வா? *

அறுசுவை அன்பு மக்களே அனைவருக்கும் வணக்கம், உங்களுக்கான "90"வதுபட்டிமன்ற தலைப்பு:***நட்பிற்கு சுவை சேர்ப்பது
முழுமையான பகிர்வா? இல்லை அளவான பகிர்வா? விரிவாக சொல்லணும்னா உங்களின்
இன்ப-துன்பங்களை நட்புகளுடன் முழுமையாக பகிர்ந்து கொள்வது சுவையா? இல்லை
அளவான அளவு பகிர்ந்து கொள்வது சுவையா? அருமையான தலைப்பை அளித்த **இளவரசி
மேடம்** அவர்களுக்கு மிக்க நன்றியுடன் இனிதே பட்டியை துவக்குவோம்,
பட்டிமன்ற விதிமுறைகள்:
1.பட்டியில் யாரும் யார் பெயரையும் குறிப்பிட்டு வாதிட கூடாது.
2.எந்த மதம், ஜாதி, கட்சியையும் குறிப்பிட்டு பேசுதல் கூடாது.
3. பொது மன்றம் என்பதை நினைவில் கொண்டு நாகரீகமான பேச்சு கட்டாயம்.
4. நிச்சயம் தமிழில் மட்டுமே பதிவுகள் அனுமதிக்கப்படும். மற்ற பதிவுகளுக்கு நடுவரின் பதிலோ, வாதிடுபவர் பதிலோ இனி இருக்காது.
5. அரட்டை... நிச்சயம் கூடாது.
இறுதியாக... அறுசுவையின் பொதுவான விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.
வாங்க எல்லாரும்:)

முதன் முதல் பட்டிக்குள் காலடி எடுத்து வைக்கும் நடுவருக்கு என் முத்ற்கண் வணக்கங்கள்.முதல் பட்டி முத்தான பட்டியாய் அமைய வாழ்த்துக்கள். நல்ல தலைப்பை தந்த தோழி இளவரசிக்கு என் பாராட்டுக்கள்.நடுவரே எனக்கு இப்ப தான் விடிஞ்சு இருக்கு, காலை வேலையை முடித்துக் கொண்டு நான் எந்த கட்சிக்கு தாவாலான்னு யோசிச்சுட்டு இன்னும் கொஞ்ச நேரத்துல மறுபடியும் ஆஜராகிறேன்.

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

வாங்க,வாங்க வணக்கம்,வாழ்த்துக்களுக்கு நன்றிங்க, காலை வேலையை முடித்துக் கொண்டு எந்த கட்சினு யோசிச்சுட்டு வாங்க :)

நட்புடன்
குணா

நடுவரே,
வாங்க பட்டியை துவங்கி இருக்கீங்க முதல்முறையாக நன்முறையில் செல்ல வாழ்த்துக்கள்...தோழி இளவரசியின் தலைப்பா அருமையா இருக்கு.....

அளவிற்கு முஞ்சினால் அமிர்தமும் நஞ்சுன்னு பெரியவங்க சொல்லி இருக்காங்க நடுவரே.....நான் எந்த பக்கம்னு தெரிந்திருக்குமே.....! தெரியலைன்னா இதோ.....அளவோடு பகிர்வதே நட்பிற்கு இனிமை சேர்க்கும்னு பேசப்போகிறேன்.....சமையல் முடித்துட்டு வந்துடுறேன்....
இப்போதைக்கு சீட் பிடித்தகிவிட்டது..:)

வாங்க வாங்க, வாழ்த்துக்கு நன்றிங்க,
// அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு// ஆரம்பமே அட்டகாசமான பதிவு போட்டிருக்கீங்க , நீங்க அளவான பகிர்வு அணியா.!! பேஷ் பேஷ்.. விரிவான வாதங்களுடன் வாங்க :-)

நட்புடன்
குணா

நடுவருக்கு எனது வணக்கம்,முதலில் நட்பு என்பது என்ன நம் இன்ப துன்பங்கலை பகிரவதும் துன்பப்படும் நண்பருக்கு தக்க நேரத்தில் உதவுவதும் தான் உண்மையான நட்பு.ஆதலால் நண்பரிடம் நம் இன்ப துன்பங்களை பகிர்தல் கட்சிதான் நான். சொல்ல முடியாத கவலைகளை நண்பர்களிடம் பகிரும்போது நம் மனதுக்கு அமைதி கிடைக்கும்.

Sangiselva

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.
இந்த குறளுக்கு விளக்கம் முகம் மட்டும் மலரும் படியா நட்பு செய்வது நட்பு அன்று, நெஞ்சமும் மலரும் படியாக உள்ளன்பு கொண்டு நட்பு செய்வதே நட்பு ஆகும்.

உறவுகளிலேயே மிகவும் புனிதமானது நட்பு தான். அந்த நட்பு இல்லாமல் எவராலும், இந்த உலகில் மன நிம்மதியாக வாழ முடியாது. நட்பு இல்லாவிட்டால், உலகமே வெறிச்சோடி காணப்படும். ஏனெனில் ஒருவர் தனது உணர்ச்சியை, கஷ்டத்தை யாரிடம் பகிராமல் இருந்தாலும், நிச்சயம் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருக்க முடியாது.
இப்ப நான் எந்த கட்சின்னு உங்களுக்கு சந்தேகம் இல்லாமல் நல்லா புரிஞ்சுருக்குமே நடுவர் தம்பி..:)ஆம்..நட்பிற்கு சுவை சேர்ப்பது
முழுமையான பகிர்வாக மட்டுமே இருக்க முடிஉம் என்ற அணியின் சார்பில் பேச வந்து இருக்கிறேன்.

நட்பு என்பது மிக மிக உயர்ந்த மூன்று எழுத்து காவியம், உண்மை நட்பு கோடான கோடி உறவுகளுக்கு சமம். சந்தோசங்களையும், துக்கங்களையும் பகிர்ந்து கொள்ள, ரகசியங்களையும், முக்கியமானவற்றையும் சொல்லிக் கொள்ள, சோகத்தில் தோள் சாய்த்து அழ, துன்பகாலத்தில் கைபிடித்து எழுப்ப என்று இரு வழிப்பாலமாவது நல்ல நட்பு மட்டுமே. இவ்வுலகில் தாய் தந்தையரை, சகோதர, சகோதரிகளை, ஏன் தாம் பெற்றெடுக்கப்போகும் குழந்தைகளையும் கூட தேர்ந்தெடுக்கும் உரிமையை யாருக்கும் இறைவன் தருவதில்லை, வாழக்கைத்துணையாகப் போகும் அந்த ஒருவரையும், உயிர்த்துணையாக விளங்கப்போகும் நண்பர்களையும் தேர்ந்தெடுக்கும் உரிமையையும் மட்டுமே அவன் மனிதர்களுக்கு விட்டு வைத்தான்.
"தோள் கொடுப்பான் தோழன்"அப்படின்னு பெரியங்க சும்மா சொல்ல வில்லை நடுவரே... எந்த ஒரு கஷ்டமான நிலையிலும், யார் விட்டு சென்றாலும்,எல்லாம் பகிர்ந்து கொள்ளும் உண்மையான நண்பர்கள் மட்டும் நம்மை பிரிந்து செல்லவே மாட்டார்கள். எந்த கஷ்ட காலத்திலலும், அதனை போக்குவதற்கு முயல்வதோடு மட்டும் அல்லாமல்,நம்மை சந்தோஷமாகவும் வைத்துக் கொள்வார்கள். இந்த உலகில் அனைவருக்கும் மிகவும் நெருங்கிய நண்பர் என்ற ஒருவர் இருப்பார்கள்.அந்த ஒருவரிடம் கண்டிப்பாக நமக்கு எந்த ஒரு ஒளிவுமறைவும் இருக்காது நடுவர் தம்பி.( உங்களுக்கும் அப்படித்தானே நடுவரே...;)இப்படிப்பட்ட நட்புக்கு அளவு கோலே இன்னும் கண்டுபிடிக்கபடவில்லை நடுவரே..
'உன்னைப் பற்றி முழுதாக அறிந்திருந்தும் உன்னை விரும்புபவனே உன் நண்பன்'. அளவான் பகிர்தல்ல கிடைக்கிறது முத்ல்ல உண்மையான நட்பே இல்லை நடுவரே, அவங்க பேரு மூன்றாவது மனிதருங்கோ. அப்படி அளவா பகிர்ந்துக்கிறதுனால நமக்கு கண்டிப்பா சந்தோசம் 100 மடங்கு அதிகமாகவும், துக்கம் 100 மடங்கு குறைவாகவும் ஆகப் போறது இல்லை. அதுவே முழுமையான பகிர்தல் இருக்கிற இருவர்கிட்ட புரிந்து கொள்ளும் தன்மை அதிகமாகவே இருக்கும் நடுவரே. அதனால சந்தோசம் 100 மடங்கு ஆகுதோ இல்லையோ துக்கம் கண்டிப்பா பலபடிகள் குறைவாகும்.

நான் இணையத்தில் படித்த ஒரு கவிதையை இந்த இடத்தில் சொல்லி கொள்ள ஆசைப்படுகிறேன்.

உண்மையான நட்பு இப்படியிருக்கும் ...
உள்ளத்தில் உள்ளதை சொல்லத்துடிக்கும் ..
துடித்தனொடியில் சொல்லியே தீரும் ..
வரும் விளைவுகள் எதையும் தாங்கும் ...
வலிகள் வந்தால் மருந்தாய் மாறும் ..
இனிமை வந்தால் அமிர்தமாய் மாறும் ...
நன்மை தீமைகள் நன்றாக உணரும் ...
நான் விழுந்தாலும் என்னை விழுத்தாது ...!!!

.இது தொடக்க வாதம் தான், மதியம் சமையல் முடிச்சுட்டு அடுத்த கட்ட வாதத்தோட வாரேன்...:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

நட்பு என்பதே ஒளிவு மறைவு இல்லாமல் பழகுவதாம்,உண்மைதான் நடுவரே.......நேற்று ஃபேஸ்புக்கில் அறிமுகமான நண்பருடன் அனைத்தையும் உளறிக்கொட்டி வாழ்வை வீணாக்குவது.
நட்பு என்பது புரிதல் நடுவரே,அப்படி இருக்கும்போது உன் நிலைமையை சொல்லி பகிர்ந்து புரிந்துகொள்வது சரிவருமா?இல்லை நீ எந்த நிலையில் இருக்கிறாய் என்று புரிந்துகொண்டு நடந்துகொள்வது உசிதமா?நீங்களே சொல்லுங்க நடுவரே.....
கோப்பெருஞ்சோழன்,பிசிராந்தையார்,தினமும் பார்த்து என் குடும்பம் இப்படி,சூழ்நிலை இப்படி,மேலும் அறிவுகள்,பிடித்தவை,பிடிக்காதவை இவற்றை பற்றி பேசிப்பேசியா பகிர்ந்து கொண்டார்கள்?
நல்ல நட்பு தன் தோழமையை துன்பத்திற்கோ,வருத்தத்திற்கோ,இயலாமைக்கோ,தள்ளாது...
நீ உன் சந்தோஷத்தை உன் நட்பிடம் சொல்லி நூறாக பெருக்கலாம்,அதில் ஏதாவது ஒரு நிமிடம் உன் தோழமை எனக்கு இச்சந்தோஷம் கிடைக்கலைன்னு வருத்தப்பட்டால்..!
நீ உன் துன்பத்தை நட்பிடம் சொல்லி அதை பாதியாக குறைக்கலாம் மீதித் துன்பம் யாரிடம் செல்கிறது உன் தோழமையிடம்தானே?!அது உனக்கு இன்னும் துன்பமில்லையா?
உன் சந்தோஷத்தையும் துக்கத்தையும் கேட்காமல் புரிந்து அதற்குதீர்வு செய்வதே நட்பு.
எப்போதும் இவன் இவனப்பத்தியே பேசரான்டா சரியான போர்னு சொல்லி கட்பண்ணிடுவாங்க.....
அளவோட இருந்து பாருங்க,அவர்களுக்கும் அவர்களது லிமிட் புரியும்.....
நடுவரே, பொறியல் சூப்பர்னு சாதம் முழுக்க பொறியலோடு உண்பீரா?ஒரு கட்டத்தில் அது வெறுத்துப்போகும்.அப்படிதான் நட்பும் ஒரேயடியா கொஞ்சி 4 மாசத்தில் பிரிந்துபோவதைவிட, அளவோடு பகிர்ந்து வாழ்நாள்பூரா நட்பை தக்க வைத்துக்களாமே....

வாங்க வணக்கம்,
// நம் இன்ப துன்பங்களை பகிர்வதும் துன்பப்படும் நண்பருக்கு தக்க நேரத்தில் உதவுவதும் தான் உண்மையான நட்பு//

அருமை, அருமை,
// இன்ப துன்பங்களை பகிர்தல் கட்சி நான் //
நல்லதுங்க, ஆனா முழுமையான பகிர்வா? இல்லை அளவான பகிர்வா? என்பதையும் தெளிவுபடுத்தினா நல்லாயிருக்கும்.

நட்புடன்
குணா

-இரண்டு பதிவாக பதிந்துவிட்டது-

நட்புடன்
குணா

// முகம் மட்டும் மலரும் நட்பு செய்வது நட்பு அன்று, நெஞ்சம் மலரும்படி உள்ளன்பு கொண்டு செய்வதே நட்பு //
திருக்குறள் கொண்டு அருமையான விளக்கம் அருமைங் அக்கா, நீங்க எந்த கட்சினு புரிஞ்சிடுச்சு :-)

உண்மையான நட்பையும், முழுமையான பகிர்வு பற்றி அழகான கவிதையுடன் விளக்கமாக சொல்லியிருக்கீங்க, எதிரணியினர் என்ன சொல்றாங்கனு பார்ப்போம், மதிய சாப்பாட்டை முடிச்சுட்டு இதே பவரோட வாங்க அக்காங் :-)

நட்புடன்
குணா

மேலும் சில பதிவுகள்