பட்டிமன்றம்-90 *நட்பிற்கு சுவை சேர்ப்பது முழுமையான பகிர்வா? இல்லை அளவான பகிர்வா? *

அறுசுவை அன்பு மக்களே அனைவருக்கும் வணக்கம், உங்களுக்கான "90"வதுபட்டிமன்ற தலைப்பு:***நட்பிற்கு சுவை சேர்ப்பது
முழுமையான பகிர்வா? இல்லை அளவான பகிர்வா? விரிவாக சொல்லணும்னா உங்களின்
இன்ப-துன்பங்களை நட்புகளுடன் முழுமையாக பகிர்ந்து கொள்வது சுவையா? இல்லை
அளவான அளவு பகிர்ந்து கொள்வது சுவையா? அருமையான தலைப்பை அளித்த **இளவரசி
மேடம்** அவர்களுக்கு மிக்க நன்றியுடன் இனிதே பட்டியை துவக்குவோம்,
பட்டிமன்ற விதிமுறைகள்:
1.பட்டியில் யாரும் யார் பெயரையும் குறிப்பிட்டு வாதிட கூடாது.
2.எந்த மதம், ஜாதி, கட்சியையும் குறிப்பிட்டு பேசுதல் கூடாது.
3. பொது மன்றம் என்பதை நினைவில் கொண்டு நாகரீகமான பேச்சு கட்டாயம்.
4. நிச்சயம் தமிழில் மட்டுமே பதிவுகள் அனுமதிக்கப்படும். மற்ற பதிவுகளுக்கு நடுவரின் பதிலோ, வாதிடுபவர் பதிலோ இனி இருக்காது.
5. அரட்டை... நிச்சயம் கூடாது.
இறுதியாக... அறுசுவையின் பொதுவான விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.
வாங்க எல்லாரும்:)

தீர்ப்பை மாத்திப்புட்டீங்களே....:-(, என்னத்த சொல்ல முழுமையான பகிர்வு அணிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்... முதல் முதலில் பட்டியின் நடுவராக அமர்ந்ததற்கு நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள் குணா. இரு அணி தோழீஸ்கும் வாழ்த்துக்கள்பா

வாழ்த்துக்களுக்கு வருகைக்கும் ரொம்ப நன்றிங்க :-)

நட்புடன்
குணா

அன்பு குணா,

நேரமில்லாததினால் இந்த முறை கலந்துக்க முடியலை.

முதல் தடவையாக நடுவராகப் பொறுப்பேற்று நடத்தியதற்கு வாழ்த்துக்கள்!

அன்புடன்

சீதாலஷ்மி

உங்கள் அன்பான வாழ்த்திற்கும் வருகைக்கும் ரொம்ப நன்றிங்க..

நட்புடன்
குணா

அளவான வரிகளில் அழகாக சொல்லியிருக்கீங்க..
பளிச்சென்று சிலவரிகளுக்குள்ளேயே பல கருத்துக்கள் பொதிய சொல்லியிருப்பது கூடுதல் சிறப்பு

வாழ்த்துக்கள் குணா

பட்டியில் வாதாடிய எல்லாருக்கும் வாழ்த்துக்கள்!

(சுமி குறிப்பா உங்களின் நட்புக்கான பனைமரம்,...போன்ற உதாரணங்கள் சான்ஸே இல்லங்க பின்னிட்டீங்க...எனக்கு மிகவும் பிடித்தது)

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

உங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் ரொம்ப நன்றிங்க :-)

நட்புடன்
குணா

ஆகா புது நடுவரே ;) தீர்ப்பு குட்டியா அருமையா இருக்கு. மிஸ் பண்ணிட்டேன் நல்ல தலைப்பை. உங்க பட்டியில் வாதிடும் வாய்ப்பு மீண்டும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வெயிட்டிங். அசத்தலான தலைப்போடு அருமையா நடத்தி முடிச்சு அழகா தீர்ப்பு சொன்னமைக்கு வாழ்த்துக்கள். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

குணா சார் ,

அருமையான தீர்ப்பு . வேலை காரணமாக தொடர்ந்து கலந்துக்க முடியலை . வாதாடி ஜெயித்த அனைவருக்கும் , போட்டி போட்டு பாயின்ட் கொடுத்த எம் அணியினருக்குகும் வாழ்த்துக்கள் .

அன்புடன் உஷா

பட்டி புது நடுவரா ஒரு ஆர்வத்துல சரி என்று வந்துட்டேன், ஆனா இவ்வளவு ரிஸ்க், பெரிய வேலைன்னு தெரியாதுங்க, உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் ரொம்ப நன்றிங்க :-)

நட்புடன்
குணா

உங்கள் வாழ்த்திற்கும் வருகைக்கும் நன்றிங்க :-)

நட்புடன்
குணா

மேலும் சில பதிவுகள்