பட்டிமன்றம்-90 *நட்பிற்கு சுவை சேர்ப்பது முழுமையான பகிர்வா? இல்லை அளவான பகிர்வா? *

அறுசுவை அன்பு மக்களே அனைவருக்கும் வணக்கம், உங்களுக்கான "90"வதுபட்டிமன்ற தலைப்பு:***நட்பிற்கு சுவை சேர்ப்பது
முழுமையான பகிர்வா? இல்லை அளவான பகிர்வா? விரிவாக சொல்லணும்னா உங்களின்
இன்ப-துன்பங்களை நட்புகளுடன் முழுமையாக பகிர்ந்து கொள்வது சுவையா? இல்லை
அளவான அளவு பகிர்ந்து கொள்வது சுவையா? அருமையான தலைப்பை அளித்த **இளவரசி
மேடம்** அவர்களுக்கு மிக்க நன்றியுடன் இனிதே பட்டியை துவக்குவோம்,
பட்டிமன்ற விதிமுறைகள்:
1.பட்டியில் யாரும் யார் பெயரையும் குறிப்பிட்டு வாதிட கூடாது.
2.எந்த மதம், ஜாதி, கட்சியையும் குறிப்பிட்டு பேசுதல் கூடாது.
3. பொது மன்றம் என்பதை நினைவில் கொண்டு நாகரீகமான பேச்சு கட்டாயம்.
4. நிச்சயம் தமிழில் மட்டுமே பதிவுகள் அனுமதிக்கப்படும். மற்ற பதிவுகளுக்கு நடுவரின் பதிலோ, வாதிடுபவர் பதிலோ இனி இருக்காது.
5. அரட்டை... நிச்சயம் கூடாது.
இறுதியாக... அறுசுவையின் பொதுவான விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.
வாங்க எல்லாரும்:)

நடுவருக்கான நினைவூட்டல் மட்டும்தான்பா அது.பட்டியையும் மேலே கொணரனுமில்ல...(இப்படி எதுனாச்சும் பண்ணுனாதா உள்ள இருக்கவுக எல்லாம் வரீங்க..:)))

தாமதமான பதிவிற்கு வருந்துகிறேன், மன்னிக்கவும் அறுசுவை மக்களே, இன்று தீர்ப்பு வெளியிட இயலவில்லை :-(
நாளை 06/06/13 மதியம் தீர்ப்பை வெளியிடுகிறேன் .

நட்புடன்
குணா

பதறாமல் வாங்க நடுவரே,நாங்க காத்திருக்கோம்...:-))

அன்பு அறுசுவை மக்களுக்கு வணக்கம்.
பட்டிமன்றத்தில் இந்த வாரம் நாம் எடுத்துக்கொண்ட தலைப்பு"நட்பிற்கு சுவைசேர்ப்பது" முழுமையான பகிர்வா? இல்லை அளவான பகிர்வா?
முழுமையான பகிர்வே அணியில் 1)சுமிபாபு அக்கா 2)சங்கீசெல்வா 3)இளவரசி மேடம் 4)ரேவதி அக்கா 5)ஷபி மேடம் 6)ஃபரிதா மேடம் ஆகியோரும், அளவான பகிர்வே அணியில் 1)ரேணுகா மேடம் 2)கவிசிவா அக்கா 3)சகோ அருட்செல்வி 4)தாமரைச்செல்வி மேடம் 5)பூர்ணிமா மேடம் 6)உஷா மேடம் 7)சங்கீதனா ஆகியோரும் என இருஅணிகளும் சிறப்பாக வாதாடி தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர், அவர்களுக்கு என் வாழ்த்துக்களும், நன்றிகளும் பல,
*பகிர்தலுக்கான அர்த்தத்தை நட்பில் மட்டுமே முழுமையாக அறிந்து கொள்ளமுடியும், அவ்வாறான பகிர்வில் நமது இன்ப-துன்பங்களை பகிரும் போது இன்பம் இருமடங்காகவும், துன்பம் பாதிமடங்காகவும் குறையும் வாய்ப்பே அதிகம், பல பிரச்சினைகளுக்கு முழுமையான பகிர்வின் மூலம் புரிதல் உள்ள நட்புகளின் மூலம் புதிய ஆலோசனைகளும், அறிவுரைகளும் கிடைப்பதால் மன ஆறுதல் உறுதி.
*புரிதல் குறைவாக உள்ள நட்புகளிடையே முழுமையான பகிர்தல் என்று தன் சொந்த (குடும்ப, அந்தரங்க விஷயங்கள்) கூறி அது மற்றவர்களால் வெளியாகும்போது மன உளைச்சல் ஏற்பட்டு, பல குடும்பங்களில் பல பிரச்சினைகள் உண்டாகி குடும்பங்கள் சீரழிவதை இன்று செய்தித்தாள்களிலும், (சமூக வலைத்தளங்கள் உட்பட), தொலைக்காட்சிகளிலும் காண்கிறோம்.
*அன்பு, புரிதல் உள்ள நட்பிற்கு பகிர்வுகள் பெரிதாய் தோன்றாது, முழுமையான பகிர்வையும் எதிர்பார்க்காது, அளவான பகிர்வையும் ஏற்கும், அவர்தம் சொந்தவிஷயங்களில் வலுக்கட்டாயமாக நுழைந்து அவர்களின் சுதந்திரத்தில் தலையிட எண்ணாது.
*நண்பர்களிடையே நல்ல எண்ணங்களையும், நற்செயல்களையும் நம் அன்பால் ஒருங்கிணைத்து முழுமையான பகிர்வால் வெளிப்படுத்தினால் நமது நட்பும் புரிதலும் முழுமையாய் இருக்கும், அது பலதலைமுறைகள் கடந்தாலும் புது சகாப்தம் படைக்கும் என்பது முற்றிலும் உண்மை.
*பகிர்வுகளைப் பொறுத்தவரை, தனிநபரை தனிப்பட்ட முறையிலும், சமூக அடிப்படையிலும் பிரச்சினைகளாக மாறாத வரை ஆபத்தில்லை,
*ஆக புரிதல் உள்ள நட்புகளிடம் முழுமையாய் பகிர்வது ஒன்றும் சுமையல்ல, சுவையே எனவே, நட்பிற்கு முழுமையான பகிர்வே சுவை என்று தீர்ப்பு கூறி இப்பட்டிமன்றத்தில் இருந்து நான் விடுதலை வாங்கிக்கொள்கிறேன். முதல்முறையாய் நடுவராய் வர வாய்ப்பளித்த நல்இதயங்களுக்கும் பட்டியில் பங்கேற்றோர், பார்வையிட்டோருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள், (பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்)

நட்புடன்
குணா

வெற்றி வெற்றி வெற்றி மிக அழகான தீர்ப்பு நடுவரே

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

இளா,ரேவ்,ஷபி,சங்கீதா,பரீதா.. எல்லோரும் ஓடியாங்கோ.. நாம ஜெயிச்சுட்டோம்..ஜெயிச்சுட்டோம்....:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

// புரிதல் உள்ள நட்புகளிடம் முழுமையாய் பகிர்வது ஒன்றும் சுமையல்ல, சுவையே எனவே, நட்பிற்கு முழுமையான பகிர்வே சுவை என்று தீர்ப்பு கூறி இப்பட்டிமன்றத்தில் இருந்து நான் விடுதலை வாங்கிக்கொள்கிறேன். //உண்மை..உண்மை... அருமையான வரிகள். ஒருவாசகம்னாலும் திருவாசகம் மாதிரி நச்ன்னு சொல்லிப் போட்டீங்க நடுவரே.
இருஅணிகளிலும் சிறப்பாக வாதாடி தங்கள் கருத்துக்களை பதிவு செய்த, தோழிகளுக்கு என் வாழ்த்துக்கள். முதன் முதல் பட்டியில் அக்காஸ் கேட்டுகிட்டதுக்கு இணங்க உங்கள் வேலைகளுக்கு இடையில் நடுவரா வந்து சிறப்பித்த குணா தம்பி அவர்களுக்கு என் நன்றிகளும் பாராட்டுக்களும்..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றிங்க,
என் குட்டி மூளைக்கு எட்டிய விஷயங்கள் படியே தீர்ப்பு தர முடிந்தது, அளவான பகிர்வு அணியினர் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன். ( யாரும் கோபப்பட்டுக்காதீங்கோ... ப்ளீஸ் )

நட்புடன்
குணா

ஆஹா... நாட்டாமை தீர்ப்பு குடுத்துட்டாரா...
நாட்டாமை தீர்ப்பை சரியா சொல்லி போட்டிங்...நல்ல தீர்ப்பு நாட்டாமை தம்பிங் க்கு வாழ்த்துக்கள்.

Be simple be sample

வாழ்த்துக்கு நன்றிங் அக்காங் :-)

நட்புடன்
குணா

மேலும் சில பதிவுகள்