தேங்காய் பிஸ்கட்

தேதி: May 27, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.9 (9 votes)

 

மைதா மாவு - 100 கிராம்
வெண்ணெய் - 80 கிராம்
சீனி - 40 கிராம்
பதப்படுத்தப்பட்ட (அ) வறுத்த தேங்காய் துருவல் - 25 கிராம்
வெனிலா சுகர் பவுடர் - அரை தேக்கரண்டி
பாதாம் பருப்பு தூள் - 15 கிராம்
உப்பு - சிட்டிகை


 

உருக்கிய வெண்ணெயுடன் பதப்படுத்தப்பட்ட தேங்காய் துருவல், பாதாம் பருப்பு தூள் சேர்த்து கலக்கவும்.
அதனுடன் சீனி, மைதா மாவு, வெனிலா சுகர், உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
அனைத்தையும் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசையவும்.
பின் பாலிதின் பையில் போட்டு அரை மணி நேரம் ஃபிரிட்ஜில் வைக்கவும்.
அரை மணி நேரத்திற்கு பின் ஃபிரிட்ஜிலிருந்து எடுத்து சமதளத்தில் வைத்து சப்பாத்தி போல் வார்த்து, விரும்பிய அச்சுகள் கொண்டு வெட்டி, எண்ணெய் தடவிய மெலிதான ட்ரேயில் சிறிது இடைவெளி விட்டு வைக்கவும். பின் 180 டிகிரியில் முற்சூடு செய்யப்பட்ட அவனில் 15 நிமிடம் வரை வேக வைத்து எடுக்கவும்.
சுவையான தேங்காய் பிஸ்கட் ரெடி. டீ, காபியுடன் பரிமாறவும். இந்த அளவிற்கு 20 பிஸ்கட்ஸ் செய்யலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வாழ்த்துக்கள் ,நல்லா இருக்கு தோழி. கோதுமை மாவில் செய்யலாமா.

அன்புடன்,
சுபா

வாழ்க வளமுடன்.

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

வாழ்த்திர்க்கு மிக்க நன்றி,நான் கோதுமை மாவில் செய்தது கிடையாது,நீங்கள் முயர்சி செய்து பாருங்கள்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

உங்க தேங்காய் பிஸ்கட் செய்தேன், ரொம்ப நல்லா மணமாக இருந்தது.

செய்து பார்த்து உடனே பதிவிட்டமைக்கு நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.