கீழக்கரை கடல் பாசி

தேதி: May 28, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.6 (7 votes)

 

பால் - 500 மில்லி
கடல் பாசி - 8 கிராம்
சர்க்கரை - தேவையான அளவு
முந்திரி - தேவையான அளவு
ரோஸ் எசன்ஸ்


 

தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
ஒரு டம்ளர் தண்ணீரில் கடல் பாசியை ஊற வைக்கவும்.
பாலில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு பச்சை வாசம் போக காய்ச்சவும். (அதிக தண்ணீர் சேர்க்க வேண்டாம். பாலில் தண்ணீர் கூடினால் சுவை நன்றாக இருக்காது).
மற்றொரு பாத்திரத்தில் ஊறிய கடல் பாசியை தண்ணீருடன் சேர்த்து நன்கு கரைந்து தண்ணீர் போலாகும் வரை காய்ச்சவும்.
கடல் பாசி நன்கு கரைந்து கொதித்ததும், அதனுடன் காய்ச்சி வைத்துள்ள பாலைச் சேர்க்கவும்.
பின் சுவைக்கேற்ப சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
சர்க்கரை கரையும் வரை கொதிக்கவிட்டு, அதனுடன் ரோஸ் எசன்ஸை சேர்க்கவும்.
பிறகு நன்கு கொதித்ததும் இறக்கி சிறு கோப்பையில் ஊற்றி, சிறிது நேரம் வைக்கவும். கடல் பாசி சற்று இறுகியதும் பொடியாக நறுக்கிய முந்திரியை மேலே தூவி, சற்று நேரம் காற்றிலேயே வைக்கவும். நன்கு இறுகியதும் ஃபிரிட்ஜில் வைத்து ஜில்லென்று சாப்பிடலாம். சுவையான குளிர்ச்சியான கடல் பாசி தயார்.

இது ரொம்ப இறுகி கல் போல இருக்காது. சற்று கொழ கொழப்பாக இருக்கும். இதை ஸ்பூனில் எடுத்து சாப்பிடலாம். கீழக்கரையில் செய்யப்படும் பிரபலமான உணவு வகை இது. உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. வெயில் காலத்தில் சாப்பிட ஏற்றது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

rempa super ya iruuku faritha.intha veyilukku yaravathu ipdi senju kudutha kudichukitte irukkanum pola irukkum pa.anaaa enna inga kadal paasi enga kidaikumne theriyale.enakku seyanum nu asaiya irukku pa.

Akeer

எனது முதல் குறிப்பை வெளியிட்ட அட்மினுக்கு எனது நன்றிகள்....

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

முதல் ஆளாக வந்து பதிவிட்டமைக்கு எனது நன்றிகள்....

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

கடல் பாசி சூப்பர்,முதல் குறிப்பிற்க்கு வாழ்த்துக்கள்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

பரிதா முதல் குறிப்பா அசத்துங்க, இந்த கடல் பாசியை பார்த்தாலே வெயில் தாக்கம் குறைஞ்சது போல இருக்கு பார்க்க ரோஸ் மில்க் போல இருக்கு பரிதா. செய்துடுவோம் சீக்கிரம். வாழ்த்துக்கள்

பரிதா வாழ்த்துக்கள் முதல் குறிப்பே வெயிலுக்கு இதமா கொடுத்துட்டீங்க

musi மிக்க நன்றி....

தேவி மிக்க நன்றி.... அவசியம் செய்து பார்த்து சொல்லுங்க...

உமாகுணா மிக்க நன்றி....

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

ithu keelakarai kadarpaasiyapa. ok v good. naanum ithupola than seiven

நீ உனக்காக வாழ வேண்டும் .

என்றும் அன்புடன்
சங்கீதா.

ஆமாம் பா.... இந்த செய்முறையில் நான் கத்துகிட்டது கீழக்கரைல தான்... அந்த ஊர்ல இது ரொம்ப பிரபலம்....

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

faritha வாழ்த்துக்கள் பா .கடைசி படம் பார்க்கவே சூப்பரா இருக்கு .செய்து பார்துடுறேன் ;)

மிக்க நன்றி.... கண்டிப்பாக செய்து பாருங்கள்...

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

Supera irukupa.ana intha kadal pasi ega kidaikum..muthal kurippa ugaluku vaazththukkal

Be simple be sample

மிக்க நன்றி உங்கள் வாழ்த்துக்களுக்கு... இது எல்லா மளிகை கடைகளிலும் கிடைக்கும் ரேவதி விசாரித்து பாருங்கள்...

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

இனிப்பான முதல் குறிப்புக்கு வாழ்த்துக்கள். பல 100 குறிப்புகளோடு அறுசுவையை அசத்துங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith