கவிதைமன்ற சிறப்பு இழை

தோழர்களே தோழிகளே, நம்மில் பலர் நல்ல கலை மற்றும் கற்பனை திறனையும் கொண்டுள்ளனர்.அதை கவிதைவடிவில் கொடுத்து இன்னும் மெறுகேற்றிக்கொள்ளவும்,ஒருவர் படைப்பை ஒருவர் படித்து மகிழவும் இந்த இழை துவங்கப்படுகிறது. பட்டிமன்ற இழைபோல இந்த கவிதைமன்ற இழையும் நன்கு செல்ல அனைவரும் உதவிசெய்யனும்.

மன்றத்தின் அனைத்து விதிமுறைகளும் இதற்கும் பொருந்தும்.மேலும் கூடுதலாக இதில் தமிழில் மட்டுமே கண்டிப்பாக பதிவுகள் இருக்கனும்.

பட்டியைப்போலவே இந்த கவிதைமன்றத்தையும் வாரம் ஒருமுறை வைத்துக்கொள்ளலாம்.நம் தோழர்,தோழிகள் தலைப்பை (சிச்சுவேஷனை) கொடுக்கட்டும். அந்தவாரத்தின் கவிதைமன்ற நடுவராக வருபவர் ஒரு தலைப்பை தேர்வுசெய்து பிரசுரிப்பார்.விருப்பமுள்ளவர்கள் அத்தலைப்பின்பால் கவிதை புனையட்டும்.வார இறுதியில் முதல் மூன்று இடங்களை பிடித்த கவிதைகளையும் நடுவர் தேர்வு செய்து பாராட்டுவார்......

கவிதைக்கான தலைப்புகள் இழைக்கு செல்ல,
http://www.arusuvai.com/tamil/node/26107

இப்பதிவின்கீழ் உள்ள பதிலளியை யாரும் தட்ட வேண்டாம்... நேற்று துவங்க வேண்டிய கவிதைமன்றம் இன்று துவங்கப்பட்டுள்ளது.இதுவும் பட்டிநிறைவுறும் நாளன்று முடிவடையும்.

கவிதைமன்றம் - 1
தேதி : மே 28 - ஜூன் 3
தலைப்பு : தீ

அடுத்த கவிதை மன்றம் ஜூன் 24 - ஜூன் - 30 நடுவராக வரவிருப்பமுள்ளவர்கள் பதிவிடவும்.....

வணக்கம் ரேணுகா ராஜசேகரன் ....உங்கள் முயற்சி வரவேற்க தக்கது...
எனது வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன் ...
நீங்களே நடுவராக இருந்து முதல் வார கவிதை மன்றத்தை தொடங்கி வைக்கலாமே ..

வாழ்க்கையில் இரண்டு வாய்ப்புகள் உள்ளது. ஒன்று உன்னால் மாற்ற முடியாதவற்றை ஏற்றுக்கொள்வது அல்லது ஏற்றுக்கொள்ள முடியாதவற்றை மாற்றிக்காட்டுவது.

தோழருக்கு வணக்கங்கள்,ரொம்பநாள் நினைத்தது நேரமின்மையால் செயல்படுத்த முடியலை...தலைப்புகள் அருமை,மேலும் நம் தோழர் தோழிகளின் வரவேற்பு எப்படி இருக்குன்னு பார்க்க ஆவலா இருக்கு.அவங்களும் பதிவிடுவாங்கன்னு நினைக்கிறேன்.

இவ்விழையும் தொடர்ந்து வெற்றி பெறவும், புதுமுயற்சிக்கு வாழ்த்துக்கள்ங்க,

நட்புடன்
குணா

வாழ்த்துமட்டும் போதுமா?தலைப்புகளும் கவிதைகளும் வேண்டுமே.....!

தலைப்புகள் யோசிச்சுட்டு பதிவு போடறேன்ங்க , :)

நட்புடன்
குணா

புதிய முயற்சிக்கு வாழ்த்துகள் ரேணுகா!

ஒரு சின்ன சஜஷன். பட்டிமன்றமும் கவிதை மன்றமும் ஒரே வாரத்தில் ஆரம்பிப்பதை விட பட்டிமன்றம் ஒருவாரம் அடுத்த வாரம் கவிதைமன்றம் என்று இருந்தால் பங்கு பெறுபவர்களுக்கும் வசதியாக இருக்கும்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

வாழ்த்துக்கள் ரேணுகா

எனக்கு ஒரு சின்ன சந்தேகம் !!!
கவிதை மன்றத்தில் கவிதை தந்தால் கவிதை பூங்காவிற்கு அனுப்பும் கவிதைகள் குறையாதா??
அல்லது கவிதை பூங்காவிற்கு கவிதை அனுப்பி விட்டு மன்றத்திற்கு அனுப்பாமல் விட்டால் ??

அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை

தாமரை,
க.பூங்கா தனி,க.மன்றம் தனி.
அங்கு அனுப்புவது அதுபாட்டுக்கு நடக்கட்டும்.
இங்கே கொடுக்கப்படும் தலைப்பிற்கு உங்களின் சிறந்த கவிதை ஒன்றுமட்டும்(தலைப்பு ஒன்றியதாக)அனுப்பினால்போதும்.
மற்ற தோழர்,தோழிகளும் இதுபோல அனுப்புவர்.கடைசி நாளில் சிறந்த மூன்று கவிதைகள் நடுவரல் தேர்வுசெய்யப்படும்......சரியா...

கவி,
நீங்க சொல்வதும் சரியே நானும் அப்படி யோசித்துபார்த்தேன்.நீங்க சொல்றதுபோல அனைவருக்கும் நேரம் கிடைக்கும்......சரி உங்கள் ஆலோசைனையின் பேரில் அடுத்த க.மன்றம் பட்டியின் நிறைவுநாளில் துவங்களாம்.ஓகேவா:-) உங்க கவிதை எப்போ வருது??

குணா சீக்கிரம் யோசிச்சு தலைப்போட வாங்க

தோழி "கவிதைமன்ற சிறப்பு இழை" படியுங்கள் உங்களுக்கு புரியும்.அதாவது நம் நட்புகள் தலைப்பு(ஷிச்சுவேஷன்)கொடுப்பாங்க, க.மன்றம் நடைபெறும் வாரம் நடுவராக வருபவர் எந்த தலைப்பு தேர்வுசெய்து கொடுக்கிறாறோ இதன் அடிப்படையில் கவிதை புனைய வேண்டும்....அவ்வளவே...:-)

மேலும் சில பதிவுகள்