சிக்கன் தம் பிரியாணி

தேதி: May 29, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (17 votes)

 

சிக்கன் - ஒரு கிலோ
பாஸ்மதி அரிசி - ஒரு கிலோ
வெங்காயம் - 4
தக்காளி - 4
புதினா - அரைக்கட்டு
கொத்தமல்லித் தழை - அரைக்கட்டு
இஞ்சி, பூண்டு விழுது - 4 தேக்கரண்டி
தனி மிளகாய் தூள் - ஒன்றரை தேக்கரண்டி
பிரியாணி மசாலா தூள் - ஒன்றரை தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 5 (அ) 6
எலுமிச்சை - ஒன்று
எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி
கேசரி பவுடர் - சிறிது
பட்டை, கிராம்பு, ஏலக்காய, பிரிஞ்சி இலை, அன்னாசிப்பூ - தாளிக்க


 

அரிசியை களைந்து ஊற வைக்கவும். பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்க வேண்டிய பொருட்களை தாளித்து, நீளமாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய தக்காளி மற்றும் சிறிது புதினா சேர்த்து வதக்கவும.
பிறகு இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கி, சிக்கனை சேர்த்து வதக்கவும்.
அதனுடன் மிளகாய் தூள், பிரியாணி மசாலா தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கி எண்ணெய் பிரிந்து வரும் போது, ஒரு கப் அரிசிக்கு ஒன்றரை கப் வீதம் தண்ணீர் சேர்த்து, கேசரி பவுடரை கரைத்து ஊற்றி கொதிக்கவிடவும்.
நன்றாக கொதி வந்ததும் அரிசியைச் சேர்த்து கிளறிவிட்டு மூடிவிடவும்.
5 நிமிடங்கள் கழித்து தண்ணீர் வற்றியதும், மெதுவாக கிளறிவிட்டு புதினா, கொத்தமல்லித் தழை சேர்த்து எலுமிச்சை சாறு பிழிந்துவிடவும்.
மீண்டும் மெதுவாக கிளறி விட்டு அடுப்பின் தணலை குறைத்து வைத்து மூடி, அதன் மீது அடுப்பு கரி தணலை பரவலாகப் போட்டு கனமான பொருளை வைத்து 10 நிமிடங்களுக்கு தம்மில் வைக்கவும்.
10 நிமிடங்கள் கழித்து இறக்கிவிடவும்.
சுவையான சிக்கன் தம் பிரியாணி தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

பிரமாதம் ரேவ், சூப்பர் சிக்கன் தம் பிரியாணி. பார்க்கும்போதே நாவில் எச்சில் ஊறுது,அந்தகடைசி பிளேட் மட்டும் எனக்கு பார்சல் பிளீஸ். 5 ஸ்டாரும் கொடுத்தாச்சு, நானும் இப்படி தான் செய்வேன், ஆனா தம்ல போட மாட்டேன்,( இங்க அடுப்பு கரிக்கு நான் எங்கிட்டு போக..;) // வாழ்த்துக்கள் ரேவ்ஸ்...:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

ரேவதி,
பிரியாணி சூப்பரா சமைச்சு காட்டிக்கிறீங்க, விருப்பப்ட்டியலில் சேர்த்தாச்சு, இந்த வாரம் பிரியாணி தான் எங்க வீட்டில்,

என்றும் அன்புடன்,

மணிமேகலைராம்குமார்
வாழ்க்கை வாழ்வதற்கே

சூப்பரா செய்து காட்டி இருக்கீங்க நிச்சயம் செய்து விட்டு சொல்கிறேன்...

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

பிரியாணி செமயா இருக்கு... இது வரை தம் பிரியாணி செய்ததில்லை.. நானும் இது போல் ட்ரை பண்ணணும்..

"எல்லாம் நன்மைக்கே"

சிக்கன் தம் பிரியாணி போட்டு அசத்திப்புட்டியே ரேவதி....பார்க்கவே சூப்பரா இருக்கு நான் உங்க வீட்டுக்கு வந்த போது சிக்கன் பிரியாணி தான செய்த அந்த நியாபகம் வந்துருச்சு எனக்கு ரேவதி....அடுத்த மாசமும் வருவேன் இதே சிக்கன் பிரியாணியே வேணும்!!!

இன்னும் நிறைய குறிப்புகள் குடுக்க வாழ்த்துக்கள் ரேவதி!!!

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணா&குழுவினர்க்கு நன்றி

Be simple be sample

தான்க்ஸ் சுமி..அடுப்பு கரி இல்லனா என்ன பா.கேஸ்லயெ தம் பொடுங்கபா..தான்க்ஸ்பா

Be simple be sample

மணிமேகலை அழகான தமிழ் பெயர்பா.விருப்ப பட்டியல்ல சேர்த்தாச்சா. சீக்கிரம் செய்துட்டு சொல்லுங்கபா.நன்றிபா

Be simple be sample

Faridha சீக்கிரம் செய்துட்டு சொல்லுங்கபா..ரொம்ப தான்க்ஸ்பா

Be simple be sample

ஹாய் பாக்யா .சீக்கிரமா ஊருக்கு வந்து செய்து பார்த்துட்டு .எங்களை கூப்பிடு விருந்து வைக்கனும்..ஒகே..தான்க்ஸ் செல்லம்

Be simple be sample

ஹாய் கவி..உன்னை நினைச்சா எனக்கு புல்லரிக்குது..நான் செய்து போட்டு என்னைய நம்பி சாப்பிட வர பாரு ..அதுக்கே உனக்கு ஸ்பெஷல்..இந்த பிரியாணி வேண்டாம் ..கெட்டு போய்டும்..புதுசா செய்து தரேன் வாம்மா..வாழ்த்துக்கு நன்றி கவி..

Be simple be sample

ஆஹா.! சிக்கன் தம் பிரியாணி, படமே பட்டாஸா இருக்குங் அக்காங் :-) (நாங்க என்னைக்கு அக்கா கையால சாப்பிட போறோம்னு தெரியலை)

நட்புடன்
குணா

பட்டாசா இருக்கா தம்பிங்..அப்பறம் வயிறுக்குள்ள போய் வேலைய காமிச்சுட போகுது..(ஹி ஹி ஹி இல்லனாலும் காமிக்கும்) அக்கா கையால சாப்பிடனுமா ..ரொம்ப தைரியமா கேக்கரிங்களே தம்பிங்...அதுக்கே உங்களுக்கு .
இன்னைக்கே பார்சல்.......டான்க்ஸ் தம்பிங்

Be simple be sample

தம போட்டு பிரியாணி சூப்பரா செய்து காட்டி இருக்கீங்க.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

Musi romba thankspa...

Be simple be sample

சூப்பர். முறையா தம் போட்டு சுவையா பிரியாணி ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சாரி வனி.இப்பதான் பார்த்தேன் உங்க பதிவை..ரொம்ப தான்க்ஸ்பா

Be simple be sample