ரோல்ஸ்

தேதி: May 29, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.8 (6 votes)

 

மைதா மாவு - ஒரு கப்
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 2
வேகவைத்த உருளைக்கிழங்கு மற்றும் காரட் - தலா ஒன்று
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
வேகவைத்த பட்டாணி - கால் கப்
கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
கொத்தமல்லித் தழை - சிறிது
முட்டை - ஒன்று
பிரெட் கிரெம்ஸ் - அரை கப்
உப்பு, எண்ணெய்


 

மைதாவில் உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து தோசை மாவைவிட சற்று நீர்க்க கரைத்துக் கொள்ளவும். கரைத்த மாவில் தோசை கல்லில் சிறு சிறு தோசைகளாக வார்த்தெடுக்கவும். மற்றொரு அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கி, வேக வைத்த காரட், உருளைக்கிழங்கு, பட்டாணி, தூள் வகைகள் சேர்த்து நன்கு கிளறிவிடவும். மல்லித் தழை, உப்பு சேர்த்து பிரட்டி பூரணம் போல் தயாரித்து வைக்கவும்.
தோசையின் ஓரத்தில் பூரணத்தை வைக்கவும்.
இருபுறமும் மடித்து, ஓரத்தில் சிறிது மைதாவை குழைத்து தடவி, ஒட்டி ரோல்களாக சுற்றவும். எல்லாவற்றையும் இதேபோல் ரோல் செய்து வைக்கவும்.
தயார் செய்துள்ள ரோல்களை அடித்து கலக்கிய முட்டையில் தோய்த்து, பிரெட் கிரெம்ஸ்சில் பிரட்டி எடுக்கவும்.
வாணலியில் எண்ணெயை சூடாக்கி ரோல்களை பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். சுவையான ரோல்ஸ் ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ரோல்ஸ் பார்கவே சூப்பர் அஹ இருக்கு நியச்சயம் ட்ரை பண்ணிடுவேன்...

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

வாழ்த்திர்க்கு மிக்க நன்றி பரிதா,அவசியம் செய்து பாருங்க.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

Easy and super receipepa.. tri panaraen sikkiram.super

Be simple be sample

வாழ்த்திர்க்கு மிக்க நன்றி,செய்து பாருங்க ரேவதி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

super recipe madam...try pani parthen nalla vandhadhu..

செய்து பார்த்து பதிவிட்டமைக்கு நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.