சிக்கன் குழம்பு

தேதி: June 3, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (8 votes)

இந்த சிக்கன் குழம்பு திருமதி.வனிதா அவர்களின் குறிப்பை பார்த்து செய்தது.

 

கோழி - முக்கால் கிலோ
வெங்காயம் - 2
தக்காளி - ஒன்று
சாம்பார் பொடி - 4 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
முந்திரி - 10
தயிர் - 4 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - 2 கொத்து
மிளகு - ஒரு தேக்கரண்டி
பட்டை - ஒரு துண்டு
லவங்கம் - 4
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு
கடுகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு - தாளிக்க (விரும்பினால்)


 

தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
கோழியை சுத்தம் செய்து மஞ்சள் தூள், உப்பு, தயிர், பாதி சாம்பார் பொடி சேர்த்து பிரட்டி ஊற வைக்கவும். முந்திரியை நீரில் ஊற வைக்கவும். கடாயில் பாதி கறிவேப்பிலை, பட்டை, லவங்கம் சேர்த்து வறுத்து அதனுடன் மிளகு சேர்த்து பொடி செய்து வைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை (விரும்பினால்) தாளிக்கவும்.
பின் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
பாதி வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
பச்சை வாசம் போக வதங்கியதும் தக்காளி, மீதமுள்ள சாம்பார் பொடி சேர்த்து நன்றாக வதக்கவும்.
பிறகு சிக்கன் துண்டுகளை சேர்த்து பிரட்டி மூடி வேகவிடவும். (நீர் ஊற்ற தேவை இல்லை).
சிக்கன் வெந்ததும் பொடித்த தூள் சேர்த்து தேவையான நீர் ஊற்றி, உப்பு போட்டு கொதிக்கவிடவும்.
எண்ணெய் பிரியும் போது ஊற வைத்த முந்திரியை நைசாக அரைத்து சேர்த்து, எண்ணெய் பிரிய கொதிக்கவிட்டு இறக்கவும்.
சுவையான சிக்கன் குழம்பு தயார்.

இந்த குழம்பை தாளிக்காமல் செய்வதென்றால் சாம்பார் பொடி சேர்த்து வெங்காயம், தக்காளி கலவை வதங்கியதும், அரைத்தும் சிக்கனோடு சேர்க்கலாம். காரம் குறைவாகவே இருக்கும். விரும்பினால் உங்கள் சுவைக்கேற்ப காரம் சேர்க்கலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சாம்பார் பொடி சேர்த்து செய்ததில்லை.நல்லா இருக்கு வாழ்த்துக்கள்.

அன்புடன்,
சுபா

வாழ்க வளமுடன்.

நானும் சாம்பார் பொடி சேர்த்து செய்ததில்லை.பார்க்கவே நல்லா இருக்கு.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

மிக்க நன்றி....

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

மிக்க நன்றி

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith