வெயிட் குறைய வழி சொல்லுங்கள்

என்னோட வயது 26 எனக்கு 2 குழந்தைகளுமே சிசெரியன் தான் என்னோடைய வெயிட் 62 கிலோ இருக்கிறேன் எனது வயிறு 6மாத வயிறு மாதிரி தெரியுது அது மட்டும் இல்லை வயிற்றை சுற்றி வரி கோடுகள் இருக்கிற்து பார்க்கவே அசிங்கமாக இருக்கிறது இதெல்லாம் சரியக வழி சொல்லுங்க

thozhi aasikavai follow pannunga...

எனக்கும் இதே பிரச்சனை தான் . உடம்பை குறைக்கணும் . எப்படி என்றுதான் தெரியவில்லை . குறைக்க எல்லோரும் சொல்ல கூடியது செய்ய கூடியது எண்டு சிலதுகள் இருக்கு . அத ட்ரை பண்ணுங்க . உணவு கட்டுப்பாடு மற்றது உடல் பயிற்சி . ரெண்டையும் செய்யுங்க . எதுவுமே கேட்க , சொல்ல லேசா இருக்கும் . ஆனா கடைப்பிடிக்கிறது ரொம்ப கஷ்டம் . :p :(((((

//நான் 3 மாதத்தில் 5கிலோ எடை குறைத்து உள்ளேன்.. 1 மணி நேரம் வேக நடை, காலை உணவுக்கு ஓட்ஸ்.... மதிய உணவிற்கு சப்பாத்தி 2... காலை அல்லது மாலை லெமன் வித் ப்ளாக் டீ சுகர் இல்லாமல் மற்றும் இரவு உணவிற்கு 2வீட் தோசை.... இதன் மூலம்... நீங்களும் செய்து பாருங்கள் தோழிகளே... இடை இடையே பழங்கள் மோர் சேர்த்து கொள்ளுங்கள்...//

. இதத்தான் ஆஷிகா சொல்லி இருக்காங்க.. All the best.

எனக்கு பலன் கொடுத்த முறை. காலை வீட்டில் மற்றவர்களுக்கு என்ன ப்ரேக் ஃபாஸ்ட் செய்தாலும் அதுவே எனக்கும். ஆனால் குறைவான அளவில். (இரண்டு தோசை, இரண்டு இட்லி இது போல). 11மணிக்கு ஏதேனும் ஒரு ஜூஸ். மதியம் சாதத்துக்கு பதிலாக ஏதேனும் ஒரு பயிறு வகையுடன் வேக வைத்த காய்கள் மற்றும் கீரை மற்றும் அன்று மற்றவர்களுக்கு செய்த கறிவகைகள், 2 ஸ்பூன் தயிர். (சுருக்கமாக சொன்னால் சாதத்துக்கு பதில் வேக வைத்த காய்கறிகளும் பயிறும்). மாலை காஃபி. இரவு வழக்கம் போல் ஏதாவது ஒரு டிஃபன். ஸ்னாக்ஸ் கிடையவே கிடையாது. உடற்பயிற்சி இன்றி ஒரு மாதத்தில் 5கிலோ குறைந்தது. முக்கியமாக உடல் சோர்வோ, டயட்டிங் செய்வது போன்ற எண்ணமோ இல்லவே இல்லை. சாதம் சாப்பிட வேண்டும் என்று ஆசையாக இருக்கும் நாள் மட்டும் ஒரே ஒரு கரண்டி சாதம். உடற்பயிற்சி செய்ய முடியாத சூழலில் இருந்ததால் எனக்கு இந்த டயட் பலன் கொடுத்தது.

ஆனால் தொடர்ந்து உடல் எடையை மெய்ன்டெய்ன் செய்ய உடற்பயிற்சி கட்டாயம் செய்ய வேண்டும்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

எனக்கு பதில் அழிதற்கு மிக்க நன்றி நான் தினமும் 100 தடவையாவது ஸ்கிப்பிங் பன்றேன் ஒரு நாள் விட்டு ஒரு நாள் வாக்கிங் போரேன் குரைந்தது 2மணி நேரமாவது நடக்கிரேன் அப்படி இருந்தும் யேதுவும் தெரியலே ஆனால் அது கூட ஒரு பக்கம் இருக்கட்டும் இந்த வயிற்றில் இருக்கிற வரி கோடுகல் போக வழி சொல்லுங்கள்

பிறர்க்கு உதவி செய்ய முடியவில்லை யென்றாலும் உபத்தரம் செய்ய கூடாது

மேலும் சில பதிவுகள்